தா(த்)தா நெ.2
==============
பின்னனியில் மலை. போர்ப்பயிற்சி பெறும் வீரர்கள். தேங்காய்ப்பூவும்,
காப்பிப்பொடியும் கலந்தாற்போல அவர்கள் வைத்துக் கொண்டிருக்கும் தாடி,
பருப்புத் தேங்காயை முகவாய்க்கட்டைக்குக் கீழே வைத்தமாதிரி இருக்கிறது.
தடியை பிடித்து ஊன்றிக் கொண்டு , இருவரும் தள்ளாடித் தள்ளாடி வருகிறா
ர்கள். சி.என்.என் ல் அடிக்கடி காண்பிக்கப்படும் செய்திப்படத் துண்டு இது.
அவர்களில் ஒருவர் அய்மான் அல் ஜவஹிரி. இன்னொருவர் லேடன்.
அமெரிக்கா அலறுகின்ற தீவிரவாதிகளில் இருவர்.
அய்மான் அல் ஜவஹிரி சுற்றி வளைக்கப்பட்டதாய் பாக்கிஸ்தான் கூறுகிறது.
அமெரிக்க மீடியா அலறுகிறது. திவிரவாத ஸ்பெஷலிஸ்டுகள் பேட்டி காணப்
படுகிறார்கள். ஜவஹிரியின் வாழ்க்கை வரலாறு அலசப்படுகிறது.உயிருடன்
பிடிப்பது கடினம். கொன்றாவது பிடித்து விடுவார்கள் என்று செய்தி
ஆசிரியர்கள் ஆருடம் கூறுகிறார்கள்.
முன்னெரே நான் பலமுறை சொன்னபடி, இந்தத் தாத்தாக்கள் பிடிக்கப்பட்டாலும்,
செத்துப் போனாலும் பிரச்சினை தீரப் போவதில்லை. பிரச்சினையின் ஊற்றுக்கண்
கண்டுகொள்ளப்படாத வரை உலகின் ஏதாவது ஒரு மூலையில், எங்காவது ஒரு
ரூபத்தில் தீவிரவாதம் தொடரும் என்பது நிச்சயம். அதற்கு " உலகின் தாதா நான்
தான். எனக்கு எண்ணை வேண்டும் என்றால், எப்போது வேண்டுமானலும் படையெடுப்பேன் "
என்ற அமெரிக்க வல்லரசின் எண்ணம் மாற வேண்டும். ஆயுதபலம் மட்டும் வல்லரசின்
லட்சணம் இல்லை என்று அவர்கள் உணரவேண்டும். தன் லாபத்திற்காக
வேற்று நாட்டு விவகாரங்களில் மூக்கை நுழைத்து, குழம்பிய குட்டையில்
மீன் பிடிக்க முயலும் குள்ளநரித்தனம் ஒழிய வேண்டும்.
அது ஒழியாதவரை அமெரிக்காவிலும் , காபூலிலும், பாக்தாத்திலும், சவூதியிலும்,
துருக்கியிலும், இரானிலும் அப்பாவி மக்கள் செத்துக் கொண்டுதான் இருப்பார்கள்.
இது புஷ் தாத்தாவின் எலெக்ஷனுக்கு மட்டும் உதவும்.
No comments:
Post a Comment