பேரழகன்
==========
ஆனந்தவிகடனில் "சூர்யாவா இது?" படித்திருப்பீர்கள். 
மலையாளத்தில் வெற்றிபெற்ற குஞ்சுக்கூனன் படம்
தமிழில் பேரழகன் ஆகிறது . சூர்யா வின் கெட்டப் அசத்தல் 
ரகம். அவரது சினிமா வாழ்க்கை படிப்படியாக 
முன்னேறிக்கொண்டிருக்கிறது.
  ஆரம்ப காலங்களில் குறிப்பிட்டு சொல்லமுடியாதபடி
இரண்டாம் ஹீரோவாகவே வந்து கொண்டிருந்தார்.
நேருக்கு நேர், ·ப்ரெண்ட்ஸ் எல்லாமே அப்படித்தான்.
பாலா கொடுத்த ப்ரேக் நந்தா. தாலியறுத்தான் படம் என்று
சாரு போன்றவர்கள் கிண்டலடித்தாலும் படம் சூப்பர் ஹிட்.
அங்கு ஆரம்பித்தது அவர் டேக் ஆ·ப். பிதாமகனில்
சூப்பர் ஸ்டாரையே புறந்தள்ளி விட்டார்.
  'காக்க காக்க' படம் பார்த்தபோது சினிமா மாதிரியே இல்லை.
சூர்யா-ஜோதிகா நெருக்கத்தை கெளதம் நன்றாக 
உபயோகப்படுத்தி இருந்தார். ஏகப்பட்ட டைட் க்ளோஸ்அப்
காட்சிகளில் , ஜோதிகாவின் வெட்கமும், சூர்யாவின் கனிவு
வழியும் கண்களும் பதிவாகி இருந்தன. பார்க்கும்போது
'அடப் பாவிகளா..இவர்களாவது கல்யாணம் பண்ணிக்கக்கூடாதா..??"
என்று மனசு அரற்றியது நிசம்.
   சிவகுமார் சார் இதைப் படித்தால் என்னை சுட்டு விடுவார்.
அதனால் என்ன..?? சிவா எதற்காக இவர்கள் காதலை 
கெடுக்க வேண்டும். அவர் வாழ்ந்த காலம் போல இன்னமும் 
அடுத்த தலைமுறை இருக்க முடியுமா..?? சினிமாக்காரியை 
கல்யானம் செய்து கொண்டால் என்ன போயிற்று. சினிமா 
நடிகன் மட்டும் ஏகப்பட்ட ஹீரோயின்களுடன் நடித்து விட்டு
குத்துவிளக்கு மாதிரி ஒரு பெண்ணை கல்யானம் பண்ணிக் 
கொள்ளலாம். அதே ஒரு ஹீரோயின் நல்ல பையனை கல்யாணம் 
பண்ணிக் கொள்ளக் கூடாதா..?? பெண் மட்டும்  உறைபிரிக்காமல் 
பாலிதின் பைக்குள் வைத்த ரோஜா போல் கல்யாணத்துக்கு வர 
வேண்டுமா...???
   சிவா யோக்கியம்தான். யோக்கியனாக சினிமாவில் இருப்பவர் 
பார்த்திருக்கக்கூடிய அதிர்ச்சிகளெல்லாம் அவருக்கு இருக்கும்தான். 
அதெல்லாம் இந்தக் காலத்துக்கு ஒத்து வருமா என்று பார்க்க 
வேண்டாமா..?? ஒழுக்கம் கெட்ட பெண் என்று ஜோதிகாவை 
எதை வைத்து எடை போடுகிறார். ஒழுக்கம் என்பதற்கு அவர் 
வரையறை என்ன..?? மனசுக்கு பிடித்தவர்களோடு
கை கோத்து வாழ முயன்று பார்க்க சூர்யாவுக்கு சந்தர்ப்பம் 
கொடுக்க வேண்டும்.  ஜோதிகா கிடைக்காவிட்டால் சூர்யா 
வாழ்க்கை அஸ்தமித்து விடாது. அவளை கல்யாணம் பண்ணிக் 
கொள்ள முடியவில்லை என்பதைவிட தான் ஆசைப்பட்டது 
நடக்கவில்லை என்று வாழ்க்கயின் ஆரம்பகட்டத்தில் இருக்கும் 
அந்த இளைஞன் ஒரு க்ஷணமேனும் நொந்து போவது 
அவன் வாழ்க்கைக்கு நல்லதல்ல...
சிவா  யோசிப்பாரா..??
( இதெல்லாம் ரொம்ம்ம்ம்ம்ம்ம்...பத் தேவை இவனுக்கு என்று யோசிப்பவர்கள்,
  .... பட்டால் தெரியும். )
 
 
No comments:
Post a Comment