Saturday, March 06, 2004

இத பார்ரா...பாரா ரெகமண்ட் செய்த ஆளா இது..????
=================================

பாரா குமுதம் ஜங்ஷன் ஆசிரியராய் இருந்தபோது, நாவல் உலகம் என்ற குமுதம்
துணை இதழில் எஸ்.ஷங்கரநாராயணன் என்ற எழுத்தாளரும் ஒரு நாவல் எழுதினார்.
மற்றவர்கள் யார் யாரென்று உங்களுக்கே தெரியும். அந்தக் கூட்டத்தில் தனியே
மாட்டிக்கொண்ட ஆள் என்று இந்த வாரம் எனக்குப் புரிந்தது.

சமீபத்தில் அவருடைய சிறுகதைத் தொகுப்பு படிக்கக்கிட்டியது. 'உயிரைச்
சேமித்து வைக்கிறேன் ' என்ற தலைப்பு கொண்ட அந்த கவிதைத் தொகுப்பில் தினமணி கதிர்
தமிழரசி, புதிய பார்வை, கணையாழி, கலைமகள், கல்கி, ஆனந்த விகடன் போன்ற இதழ்களில்
வெளிவந்த கதைகளும், இன்னமும் பிரசுரமாகத சில கதைகளும் இடம் பெற்றிருந்தன. படித்து
முடித்தவுடன் எரிச்சலாக இருந்தது.

அதில் இடம் பெற்றிருந்த ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு மாதிரி. வெரைட்டி ரைஸ்
சாப்பிடுவது போல உவகை தோன்றுவதற்கு பதிலாக பிச்சைக்காரன் வாந்தி எடுத்ததை
பார்த்தாற்போல அருவருப்புத்தான் மிஞ்சியது. அந்த அளவுக்கு ஆசிரியர், 'இன்ன பத்திரிக்கைக்கு
இன்ன மாதிர ¢' என்று வகைப்படுத்திக் கொண்டு எழுதி இருக்கிறார். பிரசுரம் ஆவதற்காக இத்தனை
காம்ப்ரமைஸ் செய்ததில் தொகுப்பை படித்து முடித்தவுடன் 'இந்தாள் என்ன மாதிரி' என்று ஒரு
முடிவுக்கே வரமுடியாமல் ஏமாற்றமே மிஞ்சியது. பிரசுரம் ஆகிறது; புகழ கிடைக்கிறது என்ற வகயில்
ஆசிரியர் வெற்றி பெற்றாரா என்றெல்லாம் எனக்குத் தெரியாது. அப்படி பெற்றிருந்தால்
அது எழுத்தாளனின் வெற்றி என்று சொல்வதை விட ஒரு வணிகனின் வெற்றி
என்றே சொல்லுவேன்.

ஆரம்ப நிலையில் இருக்கும் நல்ல எழுத்தாளர்கள் தங்களுடைய தொகுப்பு வெளிவரும்போது ,
சரியான கதைகளை , ஒரே காலகட்டத்தில் வெளிவந்த கதைகளை , ஒரெ தொகுப்பில் வெளி வருமாறு
பார்த்துக் கொள்வது முக்கியம். அபோதுதான் வாசகனுக்கு கிடைக்கும் இம் மாதிரியான ஏமாற்றங்களித்
தவிர்க்க முடியும் இம் மாதிரியான தேவைகள் எல்லாம் இல்லாமல் எப்படிப் போட்டாலும் நிறைவைத்
தரக்கூடிய எழுத்தாளர்களின் தொகுப்பை எல்லாம் படித்திருக்கிறேன். அந்த நிறைவு வருவதற்கு
காலத்தை கடந்து நிற்கும் எழுத்துத் திறமை அவசியம்.

இதை விட உத்தமமான விழியொன்று இருக்கிறது.

எந்த விதமான காம்ப்ரமைகளும் பண்ணிக்கொள்ளாமல் , தனக்குச் சரி என்று பட்டதை,
தனக்கு சரியென்ற பட்ட முறையில் எழுதி கொண்டு , எந்த விதமான வணிக நிர்ப்பந்தங்களுக்கும்
உட்படாது, சி.சு.செல்லப்பா போலவும், கோபிகிருஷ்ணன் போலவும், இன்னமும் எனக்குத்
தெரியாத எண்ணிலங்கா புண்ணிய ஆத்மாக்கள் போலவும் ஆயுசு முழுக்க நல்ல எழுத்து
மட்டுமே எழுதி செத்துப் போவது....

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...