தவிக்கிறார் ஜார்ஜ் புஷ்
=================
மனுஷனுக்குத்தான் கெட்ட நேரம் என்று வந்து விட்டால் என்னென்ன தான் நடக்கிறது.
எல்லா போட்டியாளர்களையும் முறியடித்துவிட்டு கிட்டத்தட்ட நாமிநேஷனுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் ஜான் கெர்ரி
ஏற்கனவே புஷ்ஷை விட , தேசமெங்கும் எடுக்கப்படும் சர்வேக்களில் முன்னனியில் இருக்கிறார். 1500 லட்சம் டாலர் தேர்தல் நிதியோடு களம் இறங்கி இருக்கும் புஷ்ஷின் முதல் தேர்தல் விளம்பரமே சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.
நம் ஊரில் இது சகஜம்தான். ராஜீவ்காந்தி கொல்லப்பட்டதுமே, யார் ..இன்னார் என்று எதுவுமே தெரியாத சூழ்நிலையில், தேர்தலில் 'சதிகாரர்களுக்கா உங்கள் ஓட்டு ' என்று அவர் இறந்து கிடக்கும் ·போட்டோவோடு வோட்டு கேட்டவர்கள் நம் அரசியல்வாதிகள்.
விஷயம் இதுதான்....
புஷ்ஷின் விளம்பரம் 9/11 தாக்குதலை பற்றி பேசி, உருக்குலைந்து கிடக்கும் உலக வர்த்தக மையக் கட்டிடங்களையும் காட்டி, ஒரு தீயணைப்பு வீரர் படத்தின் பின்னனியில் ' you need a steady leadership ' என்று கூறுகிறது. 'That was in bad Taste ' என்று தாக்குதலில் கணவனை இழந்த பெண்மணியும், சர்வதேச தீயனைப்புத்தொழிலாளர் சங்கமும் போர்க்கொடி உயர்த்தி இருக்கிறது. ஆளாளுக்கு இது தவறு என்றும் சரி என்றும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். டீவி காரர்களுக்கும், பத்திரிக்கைகளுக்கும் நல்ல தீனி.
இப்புறம் நம்ம வையாபுரி எம்.ஜி.ஆர் ஸ்டைலில் குழந்தைகளைத் தூக்கி போஸ் கொடுத்தும், சிரித்த முகத்தோடும் கனகம்பீரமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார்.
காபூலிலும், பாக்தாத்திலும் உயிரிழந்த அப்பாவிகளின் ஆத்மாக்கள் நம்ம டெக்ஸாஸ் கெளபாய் அவர்களை துரத்துகின்றன என்று நினைக்கிறேன்.
நவம்பர் 2 எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்லும்.
No comments:
Post a Comment