Sunday, June 24, 2007

ர"ஜீனி"


தனியே Barக்கு "தண்ணி" அடிக்க போக எனக்கு ரொம்ப பிடிக்கும். ஏதாவது மகிழ்ச்சியான தருணம் என்கிற காரணத்தையொட்டி நண்பர்களோடு போய் உட்கார்ந்து கொண்ண்டு, சலசலத்துவிட்டு அப்படியே வயிற்றுக்கு கொஞ்சம் வார்த்துவிட்டு வருவதைவிட, தனியே போய் உட்கார்ந்து கொண்டு ஒரு தனிமூலையில் நல்ல சரக்கும் சைட் டிஷ்ஷுமாக ஏதாவது யோசித்துக் கொண்டு தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டு உட்காருவது பேரானந்தம்.

அப்படி உட்காருகையில் சில சமயம் எதிர் இருக்கையில் அமர்கிற ஆட்களும் தனியாக மாட்டி விடுவார்கள். நம்மூரில்தான் அறியாதவர்களுக்கு முகமன் சொல்வது அமெரிக்காவைபோல் அவ்வளவு சகஜம் இல்லையே.!!! சரக்கு அடிக்க ஆரம்பிக்கும்போது இறுக்க்மாக இருப்பவர்கள், இரண்டாவது ரவுண்டில் "தான்" என்கிறா கட்டுகள் கொஞ்சம் தளர்ந்து மிதமான போதையில் இருக்கும்போது எதிரில் இருப்பவரை பார்த்து முறுவலிக்கத் தோன்றும். அவர்களுக்கு கை குலுக்கச் சொல்லும். தனியே செய்யும் ஆத்மவிசாரத்துக்கு அவர்களையும் துணைக்கு கூப்பிட யத்தனிக்கும்.

இன்றைக்கு "சிவாஜி" பார்த்து விட்டு வெளியே வரும்போது அப்படித்தான் கொஞ்சம் ஸ்நேகமான போதையாக இருந்தது. படம் முடிந்த பின் வீட்டுக்கு பரபரத்துக் கொண்டு போகாமல் ஆங்காங்கே தேங்கி தேங்கி நின்று பேசிக் கொண்டிருந்த சனங்களைப் பார்க்க, நாட்டு வெல்லப் பாக்கெட்டுக்கு வெளியே போவதைப் பற்றிய தயக்கத்துடன் இருக்கும் எறும்புகள் ஞாபகத்துக்கு வந்தன. எல்லோர் முகத்திலும் சிரிப்பு ப்ளஸ் பிரமிப்பு. அதில் பாதி பேர் படத்தை அடுத்தமுறையும்ம் பார்ப்பவர்கள். படிப்பு, வயது, பொறுப்பு போன்ற எல்லா விஷயங்களயும் மழுக்கி எல்லாரையும் கார்ட்டூன் பார்க்கிற குழந்தைகளின் மனநிலைக்கு அமிழ்த்துகிற ரஜினி என்கிற சக்தி எனக்கு மலைப்பாக இருக்கிறது.

முதல் யோசனைக்கு மனதில் தேங்கியவை :

1. முதல் பாதி சுமார். இரண்டாம் பாதி சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்...பர்.

2. ரஜினி தன் தோளில் படத்தை தாங்கி இருக்கின்றார். ஷங்கருக்கு ரஜினி படம் என்ற நினைப்பு இருந்த அளவுக்கு கூட அவருக்கு இல்லை. ஒரு புதுமுகம் போல ஏகப்பட்ட ஹோம் ஒர்க் செய்து காட்சிகளுக்கு பட்டை தீட்டி இருக்கிறார்- நடிப்பில், ஸ்டைலில், பாடி லாங்க்வேஜில், அதிரடியில்....!! வில்லத்தனம் கொஞ்சம் கலந்து இருக்கிற பாத்திரமாக இருந்தால் ஸாருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. ஷங்கர் அதற்கு தீனி போட்டிருக்கிறார். கமல், சிவாஜி, எம்ஜியார் ...ஏன்.... நேற்று முளைத்த விஜய் படங்களில் இருந்து கூட எடுத்த பாடல்ல்களுக்கு எந்த ஈகோவும் இல்லாமல் டான்ஸ் ஆடி இருக்கிறார். அவருடைய இந்தப் பண்பு யாருக்குமே ஒரு பாடம்.

3. ரஜினி என்ற நடிகரைப் பற்றி நினைக்காமல் கதை எழுதி இருந்தால் ( கவனிக்கவும் : திரைக்கதை அல்ல) ஷங்கர் படத்தில் பல விஷயங்களுக்கு சரியான காரணங்கள் சொல்லி இருக்கலாம். உதாரணமாக, மக்களுக்கு ஏன் இலவசக் கல்வி தரவேண்டும் என்று ரஜினி நினைக்கிற்றார் என்பதற்கு அழுத்தமான காரணங்கள் இல்லை. ரஜினி நல்லது செய்ய காரணங்கள் வேண்டுமா என்று ஷங்கர் நினைத்திருக்கலாம். அங்கே கதை நாயகனைப் பற்றி யோசிக்காமல் ரஜினியை பற்றி யோசித்து விட்டார்

4. விவேக் நல்ல தேர்வு. ஆனால் கொஞ்சம் ஜாஸ்தி. வரும் காட்சிகளினை கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

5. ஷ்ரியா..ம்...என்ன சொல்ல..கண் கூசுகிறது. இதை எழுதும்போதே கிளுகிளுக்கிறது. நல்லா நடிச்சு "தமிழுக்கு" சேவை செய்யட்டும் ;-) ;-)

6. கே.வி ஆனந்தும்/ ஆண்டனியும், ரஹ்மானும், தோட்டா தரணியும் தொழில் நுட்பத்தின் சிகரங்களை தொட்டிருக்கிறார்கள். வாயில் ஈ நிழைவது கூடத் தெரியாமல் வாய் பிளக்க வைக்கிற அதி உயர் தொழில் நுட்ப சித்து. படமா, அனிமேஷனா, உண்மையா, பொய்யா என்று ஒரே மலைப்பு. அதில் ரஜினியின் மேக்கப் வுமன் பானுவுக்கும் பெரும்பங்கு. ரஜினியின் இளமை ஊஞ்சலாடுகிறது.

7. தமிழ் தெரியாத வடநாட்டு நண்பனுடன் படத்துக்கு போயிருந்தேன். அவன் மிகவும் ரசித்துப் பார்த்தான். நன்றாக புரிந்ததாக சொன்னான். சில இடங்களில் பார்ப்பது தமிழ் படம் என்ற ஞாபகமே அவனுக்கு வரவில்லையாம். ரஜினி அவனையும் ஏகத்துக்கும் கவர்ந்து விட்டார்.

8. ஷங்கர் படம் போல இல்லை என்று சொன்னார்கள். முழுக்க உண்மை இல்லை. இரண்டாம் பாதியில் உள்ள flow க்கு ஷங்கரும் முக்கியமான காரணம்.. ஜென்டில்மேன், அந்நியன், இந்தியன் கலந்தது என்றார்கள். அதிலும் அந்தளவு உண்மையில்லை. தெரிகின்ற கொஞ்ச நஞ்ச பொதுவான அம்சங்களையும் ரஜினி தன் அதிரடியில் கரைத்து விடுகிறார்

ஏற்படுத்தி இருந்த எதிர்பார்ப்பயும், hype ஐயும் ச்ச்ச்..சும்மா...இல்லை என்று நிருபித்திருக்கும் சூப்பர் மசாலா...இதற்கும் மேல் ரஜினியை வைத்து வேறு யாராலும் ஒரு ஹிட் கொடுக்க முடிந்தால் ...ஒத்துக் கொள்கிறேன். அவர்கள் பெரிய கீரி என்றூ.

ம்..ஹூம்..தசாவதாரத்தை நினைத்தால் கொஞ்சம் பெருமூச்சுதான் வருகிறது.
உயிரைக் கொடுத்து அந்தாள் எடுத்தாம் சிவாஜிக்கு கிடைக்கிற "ரீச்" கிடைக்குமா..?? கமலுக்கே இப்போதெல்லாம் அந்தக் கவலைகள் அலுத்திருக்கக் கூடும்

21 comments:

  1. "தனியே Barக்கு "தண்ணி" அடிக்க போக எனக்கு ரொம்ப பிடிக்கும்"

    one of the symptoms of becoming an addict...underline ONE of the symptoms :-))

    ReplyDelete
  2. பிரபு சார்,

    கடந்த ஏழு வருடமாக இதே மாதிரிதான். வருடத்திறுகு வருடம் அடிக்ஷன் அதிகமாவது போல தெரியவில்லை - அப்போதாவது ஒரு நாள் "மட்டை" யாவதை தவிர there is no alarming/visible increase in interest towards alchohol.

    எனின்ய்ம் அக்கறைக்கு நன்றி. பட்ட ஒவ்வொரு அடிக்கும் உடம்பில் ஒரு ஆண்டெனா முளைத்திருக்கிறது. அவைகள் கை விடாது....:-) :-)

    ReplyDelete
  3. கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு ;)

    ReplyDelete
  4. எது..??

    கிக்கா..?? பித்தா..? ;-)

    ReplyDelete
  5. மூக்குசார்,

    // தனியே செய்யும் ஆத்மவிசாரத்துக்கு அவர்களையும் துணைக்கு கூப்பிட யத்தனிக்கும் //

    இதுக்குக்கூட இல்லைன்னா அப்பறம் எதுக்கு அந்த கழுதைய காசுகொடுத்து குடிச்சுக்கிட்டு?! :)

    // படிப்பு, வயது, பொறுப்பு போன்ற எல்லா விஷயங்களயும் மழுக்கி எல்லாரையும் கார்ட்டூன் பார்க்கிற குழந்தைகளின் மனநிலைக்கு அமிழ்த்துகிற ரஜினி என்கிற சக்தி //

    சரியா சுவையா சொல்லியிருக்கீங்க!

    ReplyDelete
  6. அய்யா, என்ன? என்ன இது?
    ம்ம்...அப்ப சீக்கிரம் தெளிஞ்சு இன்னொரு பதிவ போடுங்க...
    :)

    ReplyDelete
  7. இளவஞ்சி, பாரி... :-)

    தெளியிற ஐடியா இல்லை. அடுத்த வாரம் இன்னொரு முறை பார்த்தா தெளியலாம்.

    முள்ளை முள்ளாலதான் எடுக்க முடியுமாமே...?!!!! ;-) ;-)

    ReplyDelete
  8. கமல் ரொம்ப ரொம்ப பாவம் தான்.உழைப்புக்கேத்த 'ஊதியம்' இல்லை..

    ReplyDelete
  9. சர்வேஸ்வரா,

    ஆம்..ஊதியம் கமலுக்கு பணமாக கிடைப்பதில்லை. ;-)

    ReplyDelete
  10. ரமணாவில் விஜயகாந்த் எடுத்துக் கொண்ட லஞ்சக் கருத்தை, சிவாஜியில் கறுப்புப்பணமாக எடுத்துக் கொண்ட ஷங்கருக்கு இவ்வளவு பெரிய விமர்சனமா ?

    ReplyDelete
  11. கூத்தாநல்லூர்க்காரரே..

    ரமணாவுக்கும் சிவாஜிக்கும் UI LAYER
    ரொம்ப வித்தியாசம் சார்..

    விஜயகாந்த், முருகதாஸ் உள்பட யாருமே இதை ஒத்துக்கமாட்டாங்க...
    :-)

    ReplyDelete
  12. //////////////////////////////////
    ...இதற்கும் மேல் ரஜினியை வைத்து வேறு யாராலும் ஒரு ஹிட் கொடுக்க முடிந்தால் ...ஒத்துக் கொள்கிறேன். அவர்கள் பெரிய கீரி என்றூ.
    //////////////////////////////////

    Correct One. . . . . . .

    ReplyDelete
  13. //கமல், சிவாஜி, எம்ஜியார் ...ஏன்.... நேற்று முளைத்த விஜய் படங்களில் இருந்து கூட எடுத்த பாடல்ல்களுக்கு எந்த ஈகோவும் இல்லாமல் டான்ஸ் ஆடி இருக்கிறார். அவருடைய இந்தப் பண்பு யாருக்குமே ஒரு பாடம்.
    //

    Correct.

    ReplyDelete
  14. வெங்கட், பிரசன்னா - நன்றி.

    ReplyDelete
  15. பறவைகள் பல விதம். ஒவ்வொன்றும் ஒரு விதம்.

    இல்லி நோட்றீ

    ReplyDelete
  16. எலவசம்..வாய்யா..!!

    ஏற்கனவே நோண்டியாச்சு.. ;-) ;-)

    ரசினி படத்துக்கு மட்டும் எப்படிய்யா இப்படி ரோசிச்சு ரோசிச்சு விமரிசனம் எழுதுறாய்ங்க...!! தேட்டருக்கு போகும்போதே படம் என்ன கணக்குல இருக்குன்னு தெரியாத மாதிரியும், போய் பாத்த உடனே ஒரே அதிர்ச்சியா போயிருச்சீன்னும்.. ச்..ச்சை...!!

    சங்கர் எத்தனை படம் காட்டியிருக்காரு..ரசினி எம்புட்டு படம் காட்டி இருக்காரு. ஒரு அளவு தெரியாது. நம்மாளுகளுக்கு ஊட்டு சாப்பாடு சாப்பிடும்போது ஹோட்டல் சாம்பாருக்கு சப்பு கொட்டறதும், ஹோட்டல்ல ஊசிப்போனத திங்கும்போது வீட்டை நெனைச்சு கலங்கறதுமே வேலையாப் போச்.!!!

    அந்தந்த கணத்தயும் முழுசா அனுபவிக்கணும் அண்ணாச்சி. ரொம்ப நோண்டினா புண்ணாப்போவும். ;-)

    ReplyDelete
  17. படம் "தண்ணீ" அடித்துவிட்டு பார்த்தீர்களா?

    என்னதான் ரசனைகள் வேறு வேறு என்றாலும், இது கொஞ்சம் ஓவர்தான்...

    ஒருகாலத்தில் கடுமையான ரஜினி ரசிகனாக இருந்த எனக்கு இதனை உங்களைப் போல் ரசிக்க முடியவில்லையே? ஏன்? என்னை பொறுத்தவரை இது ஓர் ரஜினி கமர்சியல் குப்பை!

    அடுத்தமுறை படம் பார்க்கும் முன்பு தண்ணி அடிக்காமல் பார்க்கவும்...

    எதிர்காலத்தில் வேறு யாரவது ரஜினியை வைத்து ஓர் நல்லபடம் கொடுக்கட்டும், மீடியா ஹைப் இல்லாமல் பார்க்க விரும்பும் சாரசரி சினிமா ரசிகன்...

    மயிலாடுதுறை சிவா...

    ReplyDelete
  18. வாங்க சிவா...

    படமே போதையா இருக்குன்னு எழுதி இருக்கேன். அதுக்கு மேல எதுக்கய்யா தண்ணீ..?? லாஸ்ட்டா தண்ணி அடிச்சிட்டு தியேட்டர்ல பாத்தது பல வருடங்களுக்கு முன் - நாசரோட "அவதாரம்". அதும் கணுக்கால் வரைதான். அதுதான் சொகமா இருக்கும்.

    சிவாஜியை பிடிக்கலை என்று சொல்வதன் மூலம் ரொம்ப முற்போக்கா சிந்திக்கிற அறிவுஜீவுகள் மட்டத்துக்கு போயிட்டீங்க சிவா.. :-) ;-)

    வாழ்த்துக்கள்... ;-)

    ReplyDelete
  19. "....சிவாஜியை பிடிக்கலை என்று சொல்வதன் மூலம் ரொம்ப முற்போக்கா சிந்திக்கிற அறிவுஜீவுகள் மட்டத்துக்கு போயிட்டீங்க சிவா.. "

    அப்படி நினைத்து இருந்தால் படத்தை பார்க்கமால் அல்லவா இருந்து இருக்கவேண்டும்?!

    நாமா முற்போக்கா சிந்திக்கிற ஓரே விசயம் என்னென்னுதான் உங்களுக்கே தெரியுமே?! ;-((

    மயிலாடுதுறை சிவா...

    ReplyDelete
  20. //நாமா முற்போக்கா சிந்திக்கிற ஓரே விசயம் என்னென்னுதான் உங்களுக்கே தெரியுமே?! //

    அது..!@!!! ஹி..ஹி..

    ReplyDelete
  21. Anonymous4:43 PM

    Kalakittae Raasaa... Arumaiyana Vimarsanam... One disappointment.. Didn't say anything about Sujatha's effort(less?!)s.

    ReplyDelete

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...