Thursday, December 23, 2010

கனிகிரி

கருவிலிருந்து
உனை உயிர்த்த துளிதான்
எனையும் முகிழ்த்திற்று
என் அன்னை உன் அன்னைக்கு
இளையாளென்றால்
உன் அன்னை இன்னொரு கொடிக்கு
உன்னிலும் நான் கற்றவள்
மொழி கலை கவிதை சாதுர்யம்
இவை அனைத்தும் கருவிலிருந்து
நான் செய்தத் நேரடிக் கொள்முதல்
எனிலும் எதிலும் நான்
இரண்டாமவள்
வீடு செல்வம் அரசியல் பதவி
வாரிசுரிமை ஊடக ஒளிர்வு....
ஊழல் புரிந்ததாய் இலைமறை காயாய்
செய்தி கசியும்போதே விலகும்
கட்சிக் கண்மணிகள்
உன்னிடம் குழைகின்றன
நீ செய்தாததாய் இன்னோரு
ஊழல் எங்கேயும் உண்டா..
பெண் ஆணென்ற பால்பேதம்
ஊழலிலுமா.?
ஜெ ஜெ நமோஸ்துதே:

செய்தி :
http://www.rediff.com/news/report/alagiri-kanimozhi-share-cold-vibes-on-delhi-flight/20101223.htm

1 comment:

  1. //பெண் ஆணென்ற பால்பேதம்
    ஊழலிலுமா.?//

    சுந்தர்.. நலமா.. நல்ல கவிதை.. அது ஆண் பெண்ணென்ற பால்பேதமாய்த் தெரியவில்லையே.. கனிமொழியிடத்தில் ஒரு ஆண் இருந்திருந்தாலும் அப்படித்தானிருக்கும்.. எனக்கென்னவோ ‘அக்னி நட்சத்திரம்’ சினிமாதான் நினைவுக்கு வருகிறது...


    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.. 2011 !!

    ReplyDelete

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...