- ரஜினி மாஸ். ரசிகர்கள் துள்ளிக் குதித்து அனுபவிக்க ஏகப்பட்ட காட்சிகள். அங்கங்கே தெறிக்கும் அவர் ஸ்பீடு அசத்தல்.
- ரஜினி செம ஸ்மார்ட். கம்பீரமான அழகு. பின்பாதியில் மனைவியை சந்தித்ததும் தாடி எடுத்து விட்டு ஒரு அழகு வருகிறதே .....அது !!!
- காமிரா சூப்பர்
- வசனம் அங்கங்கே பளிச். தேவையற்ற இடங்களில் சில கருத்துகளை ரஞ்சித் திணித்திருக்கிறார். அது துருத்திக் கொண்டு பல் இளிக்கிறது. படத்தில் “காற்று பிரிந்தால்” கூட மகிழ்ச்சி என்கிறார்கள். அலுத்து விடுகிறது
- ”மாய நதி” பாடல் அருமையான இடத்தில் வைத்து இருக்கிறார்கள். பொதுவாகவே இசைக் கோர்ப்பில் மெனக்கெடல் தெரிகிறது.
- படத்தில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள். எல்லாவற்றையும் நினைவு வைத்துக்கொண்டு இன்னார் இன்னாருக்கு என்ன செய்தார் என்று நினைவில் வைத்துக் கொள்வதே போதும் போதும் என்றாகி விடுகிறது
- Casting detailsகாக மெனக்கெடும்போது முக்கியமான பாத்திரங்களுக்கு மட்டும் அதிகம் உழைப்பது பார்வையாளர்களுக்கு அயர்ச்சியை குறைக்கும்
- கிஷோர் எப்பேர்ப்பட்ட நடிகன் !!! கிலோ கிலோவாக நகையை சுமக்க செய்து வீண் பன்ணி விட்டார்கள். சீன வில்லனை டம்மி செய்து இவருக்கு கொஞ்சம் சேர்த்திருக்கலாம். பாவம் !!
- தன்ஷிகாவும், தினேஷுமாவது தேவலை - கலையரசனும், ரித்விகாவும் வேஸ்ட். பள்ளி சம்பத்தப்பட்ட காட்சிகளும் சரியாக கையாளப்படவில்லை.
- ராதிகா ஆப்தேவுக்கு ”நல்லவனுக்கு நல்லவன்” ராதிகா சாயலும், ”விருமாண்டி” அபிராமி சாயலும் இருந்தாலும் குழப்படியான பாத்திரம்.அவர் அழகு அதிகம் உபயோகப்படுத்தப்படவில்லை. பல வருடங்கள் கழித்து கணவனும் மனைவியும் சந்திக்கையில் உணர்ச்சிகள் டாப் கியர்.
- மற்ற கதாபாத்திரங்களில் உள்ள நடிகர்கள் முகம் தெரியாமல் இருப்பதால் முழுமையாக ரசிக்க முடியவில்லை. ரஜினி படத்தில் நடிக்க வைத்து அவர்களை பெரியாளாக்கி விடலாம் என்று ரஞ்சித் நினைத்திருக்கலாம். வேலைக்காகவில்லை.
- சென்னை வரும் காட்சிகளில் ”லீ மெரிடியனில்” தேவையில்லாமல் ஏற்படுத்தப்படும் பதற்றமும், மனைவியை தேடி அங்குமிங்கும் ஓடுவதும், பார்வையாளர்களை சீட் நுனிக்கு கொண்டுவரும் என்று நினைத்திருக்கலாம். அது சீட்டை விட்டு கிளம்பலாமா என்று யோசிக்க வைக்கிறது.
- கடைசி காட்சி ( துப்பாக்கியின் “க்ளிக்”) தமிழுக்கு புதுசு.
- ரஞ்சித் படமா ரஜினி படமா என்ற குழப்பத்தில் நம்மையும் குழப்பி விட்டார்கள். தியேட்டர் விட்டு வெளிவருகையில் நூடுல்ஸில் சாம்பார் ஊற்றி சாப்பிட்டாற்போல் ஒரு மையமான உணர்ச்சி.
Friday, July 22, 2016
கபாலி - எண்ணங்கள்
Subscribe to:
Posts (Atom)
ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ?? - கூத்தோ கூத்து ----------------------------------------------------------------------------------- ஃ...
-
இந்த வார அவள் விகடன் இதழில் என் கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது. விகடனில் இருக்கும் நண்பர் நம் வலைப்பதிவுகள் அனைத்தையும் தொடர்ச்சியாக படித...
-
என்ன ஸார்..செளக்கியமா..?? என்ன ...எதும் புதுசா எழுதறதில்லையா.?? ஏதாச்சும் கிளு கிளு ன்னு படம் போட்டு, கச்சடாவா ஏதும் எழுதுவ...