Monday, May 22, 2017

சதர்ன் ரயில்வே









விழியகலா வியப்புக்கு
களிற்றையும் கடலையும்
காணுதல் போல்
ரயிலும் ஓர்பொருளே..
குழந்தை முதல் பெரியோர் வரை ...
வயது பேதம் இல்லாமல்
ரசித்து வியக்கும்
மனோநிலை சகலருக்கும்
மகிழுந்தின் வசதி இல்லை
பேருந்தின் இலகு இல்லை
விமானத்தின் சொகுசு இல்லை
ஓடி ஏற நீளமாய்
சிலசமயம் தாமதமாய்
புகைக் கரியோடு அழுக்காய்
விசில் அடித்துக் கொண்டு
புகை விட்டுக் கொண்டு
தலையெல்லாம் பரட்டையாக்கி
சென்றாலும்
ரயில்
மக்களின் நாயகன்தான்.
இது நம்மவண்டி என
சகலரையும் நினைக்க வைக்கும்
இந்த வாகனம்
இந்த முறை நிலையமேக
இருபத்தேழு வருடமாகி விட்டது
கூட்டம் சேருமா
இல்லை
பணிமனையில் ஓய்வெடுக்குமா
என்பது
மவுசு தெரிந்த
ஆட்டுநர் கையில்

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...