அவர்கள்
கலவர முடிவில்
ராமனுக்கு கோவில்
கட்டும்போதும்
காஷ்மிரை சிறைக்குள்
தள்ளிய போதும்
சமூகநீதிக்கு சததமில்லாமல்
சங்கூதிய போதும்
சாவர்க்கருக்கும்
கோட்சேவுக்கும்
பரிந்த போதும்
எமக்கு பதறவில்லை
தத்தித் தத்தி
திருக்குறள் ஓதும்போதும்
இசுலாமிய பட்டியலின ஆட்களை
கட்சியிலும் ஆட்சியிலும்
தேடித்தேடி
சேர்க்கும் போதும்
எமக்கு கலவரம் வருகிறது.
விராட பருவத்தில் விலை போன
விபீஷணி
துரியோதனின் துடையேறி அமர்ந்த
பாஞ்சாலி
துரோகத்திற்கு துணைபோகும்
தூண்டிற்புழு
பட்டியலின மலைவாழ்
மக்களுக்காய் உறும மறந்த
திரெளபதி முர்மு.
விநோதமான பெயர் என்கிறார்கள்
ராம்நாத் கோவிந்தையும்
எல் முருகனையும்
கிருஷ்ணசாமியையும்
அர்ஜுன் சம்பத்தையும்
நினைத்துக்கொள்ளுங்க:ள்
பெயரில் என்ன இருக்கிறது.
வடதேச வியாபாரிகளுக்கு
இவர்கள் வெறும்
தொழிற்படு பொருட்கள்.
No comments:
Post a Comment