கணவர் பற்றி நிஜ சுஜாதா:
'சாயங்காலம் ஏழு மணியில இருந்து காலைல ஏழு மணி வரை ஒரு லிட்டர் தண்ணி குடிச்சிருப்பார். ஆனா, 200 மில்லிதான் வெளியேறித்து. 800 மில்லி உடம்புலயே தங்கிடுத்து. ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ்ல கூட்டிப் போனோம். இதுக்கு முன்னாடிலாம், சந்தோஷமா ஆஸ்பத்திரிக்கு வர்றவர், இந்தத் தடவை ஏனோ, 'வர மாட்டேன்'னு அடம் பண்ணார். அட்மிட் பண்ணினதும் தூங்கிண்டே இருந்தார். என்ன கேட்டாலும், 'ஊம்... ஊம்!'னு மட்டும் சொன்னார். திடீர்னு 'நீ யாரு?'ன்னு கேட்டார். 'ஏன் இப்படிப் பேசுறீங்க... என்ன பண்றது சொல்லுங்கோ!'னு நான் பதறி, டாக்டர்களை அழைச்சுண்டு வந்தேன். வாய் கோணித்து... ஸ்ட்ரோக்குன்னாங்க. கை வரலைன்னதுமே, 'ஐ யம் ட்ராப்டு. எனக்கு இதெல்லாம் புடிக்கலை. வீட்டுக்குக் கொண்டு போ. இனி என்ன இருக்கு சொல்லு!'னு புலம்ப ஆரம்பிச்சுட்டார். 'அப்டிலாம் சொல்லாதேள். நான் இருக்கேன்ல... நீங்க சொல்லச் சொல்ல... நான் எழுதித் தர்றேன்'னேன். அவருக்குக் கேட்கலியா, கேட்க விரும்பலையான்னு தெரியலை!
ஒரு நிமிஷம்கூட அவரை விட்டுட்டு இருந்ததில்லை. நன்னாத்தான் பார்த்துண்டேன். அவருக்கே அவருக்குனு பார்த்துப் பார்த்துச் சமைப்பேன். ஆனாலும் தப்பிச்சு ஓடிப் போய் எங்காவது போண்டா தின்னுட்டு வந்துருவார். கேட்டா, 'எத்தனை நாள்தான் உப்புச்சப்பில்லாமச் சாப்புடுறது. இந்த 75 கலோரி என்னை ஒண்ணும் பஸ்பமாக்கிடாது!'னு சிரிப்பார். நல்ல மனுசன். என்னை நல்லாப் பாத்துக்கிட்டார்.
சின்ன வயசுல எல்லாம் அவ்வளவா காசு பணம் வரலை. ஆனா, ரிட்டயர் ஆனப்புறம் ரொம்ப ஷேமமாப் பார்த்துக்கிட்டார். என்னை ஜப்பானீஸ் கிளாஸ்லாம் சேர்த்துவிட்டார். அங்க சின்னச் சின்னப் பொண்ணுங்கள்லாம் நிறைய மார்க் வாங்குவா. இதைச் சொன்னா, 'அவாகூட நீ எப்படிப் போட்டி போடலாம். அவாளுக்கெல்லாம் யங் ப்ரைன். உனக்குக் கொஞ்சமே கொஞ்சம் வயசாயிடுத்து இல்லியா'ன்னுவார். அவர் அளவுக்கு எனக்கு பிராட் மைண்ட் கிடையாது. ஒருவேளை அவர் அளவுக்கு இன்டெலிஜென்ட்டா இருந்தா, எனக்கும் பிராட் மைண்ட் இருந்திருக்கும். அவருக்கு உடம்பு படுத்த ஆரம்பிக்கவும் நான் கிளாசுக்குப் போறதில்லை. அப்படியும் நடுவில் ரெண்டு நாள் அனுப்பினார். இனி எனக்கு என்ன இருக்கு. ஆனாலும் போகணும். அவர் இருந்தா, அப்படித்தான் சொல்வார். ஆனா, இப்போ அவர் இல்லையே!
எந்த நேரமும் ஏதாவது படிச்சுண்டு, பார்த்துண்டே இருப்பார். படுக்கை முழுக்க புஸ்தகங்களா இருக்கும். அதுக்கு இடையில இடம் பண்ணிண்டு படுத்துக்குவார். நடுராத்திரியில நாலு புஸ்தகங்களை மாத்தி மாத்திப் படிச்சுண்டு இருப்பார். ராத்திரி ரெண்டு மணிக்கு எந்திரிச்சு கிரிக்கெட் பார்த்துண்டு இருப்பார். 'உடம்பைப் பார்த்துக்காம இந்த அப்பா ஏன் இப்படிப் பண்றார்?'னு பசங்க கோச்சுக்குவாங்க. 'இப்படில்லாம் இல்லேன்னாதான் அவருக்கு உடம்பு படுத்தும்'னு சொல்வேன்.
இதுக்கு முன்ன ஹாஸ்பிடலுக்குப் போனப்பல்லாம் கொஞ்ச நேரம் இருப்பார், வந்துருவார். அப்புறம் அதைப் பத்தியே ஒரு கதை எழுதிடுவார். ஆனா, இப்ப அவர் இறந்த கதையை யார் எழுதுறது..?
ஒரு தடவை அவருக்கு மாத்திரை கொடுக்க லேட் ஆயிடுத்து. பதறி ஓடி வந்து கொடுத்தா, 'ஒரு வாய் மாத்திரை சாப்பிடலேன்னா, நான் செத்துட மாட்டேன். நீ ஏன் வொர்ரி பண்ணிக்கிற..?'ன்னாரு.
தண்ணி, பேப்பர், ரிமோட், சாப்பாடுனு எது கொடுத்தாலும், சின்னதா 'தேங்க்ஸ்' சொல்வார். 'எதுக்கு என்கிட்டயும் தேங்க்ஸ்?'னு கேட்டா, 'உன்கிட்டயும் தேங்க்சுக்கு ஒரே அர்த்தம்தானே!'னு சிரிப்பார்.
ஐயோ! ஐ ஃபீல் கில்ட்டி... நான் அவரை இன்னமும் நல்லபடியா கவனிச்சுண்டு இருந்திருக்கணும்! என்னை எப்படில்லாம் பார்த்துண்டார். என் பேர்ல எழுதுறதுக்கு அவருக்கு எவ்வளவு பெரிய மனசு இருந்திருக்கணும். நான் பதிலுக்கு அவருக்கு என்ன செஞ்சுருக்கணும். நான் இருக்குற வரை, அவரை போஷிச்சிருக்க வேண்டாமா..!
'பாடி எப்ப வீட்டுக்கு எடுத்துட்டு வருவேள்?'னு ஒருத்தர் கேட்டா. ஆமா, அவர் இப்ப 'பாடி' ஆயிட்டாருல்ல... இனி அவர் வெறுமனே 'பாடி' மட்டும்தானா..? அவர் என் சுஜாதா இல்லையா..?!''
சுஜாதாவின் இந்தக் கேள்விக்கு அந்த 'சுஜாதா' பதில் சொல்லி இருக்கலாம்!
நன்றி : விகடன்
ப்ச்......... மனசு நல்லாவே இல்லை....
ReplyDeleteநெகிழ்வான கட்டுரை.
ReplyDeleteமனசு கனக்கிறது...
ReplyDeleteகஷ்ட்டமா ஆயிடுச்சு படிச்சோடனே.....
ReplyDeleteபிறர் எவரையும் விட இவருக்குத் தான் இழப்பு அதிகம் என்பதில், இவருடைய வார்த்தைகள் மிகவும் நெகிழ வைக்கின்றன... பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
ReplyDelete:-((
ReplyDelete..Ag