Tuesday, April 15, 2008

வழியும் முடிவும்

ஜெயமோகனார் எழுதி இருக்கும் காலச்சுவட்டின் நூறாவது இதழ் விமரிசனம் சரியான உள்குத்து. கண்ணனின் தலையங்கம் வெளிப்படுத்தும் காழ்ப்பினைப் பற்றி சொல்லிக் கொண்டே காலச்சுவடின் இடம் முக்கியம் என்கிறார். சுபமங்களா அடையாளப்படுத்திய எழுத்தாளர்களில் முக்கியமாக தன்னையும் எஸ்.ராவையும் சொல்லிக்கொண்டே காலச்சுவட்டின் (சு.ராமசாமி விலக்கம்) கறார் பார்வை பற்றி குறிப்பிடுகிறார். இப்படியெல்லாம் மையமாக எழுதவதெல்லாம் வரிகளுக்கிடையில் படிக்கத் தேடும் சீவிகளுக்கு.

ஒரு எழுத்தாளரின் வலைப்பதிவு இப்படி ஆழ அகலங்களுக்குள் போய் மீண்டு வந்தாலும், அவ்வபோது எளிய வாசகர்களின் தீனிக்கும் இலக்காகி, சராசரியான விஷயங்களையும் கவனமெடுத்துக் கொள்கிறது. தீவிர வாசகர்களின், ரெகுலர் வாசகர்களின் புததிக்கு சொறிந்து கொடுத்து உக்கிராண அறையில் அவர்களுக்கு அவியல் கொடுக்குமபோது, புதுசாக வீட்டுக்கு வரலாமா என்று எட்டிப் பார்க்கும் அறிமுகமில்லாதவர்களையும் கவர்ந்து இழுக்கும்படி வாசல் கொஞ்சம் ஜிலு ஜிலு என்று இருக்க வேண்டும்.

வெகுஜனப்பத்திரிக்கைகளில் சினிமா விமரிசகர்களை அடிக்கடி மாற்றிக் கொண்டிருப்பதற்கும் இதுதான் காரணம். மாறிக் கொண்டிருக்கும் புதிய தலைமுறையின் பிரதிநிதி கட்டாயம் அதில் இருப்பார்.

ஜெ.மோ/குமுதம்/விகடன் வகையறாக்களுக்கு மட்டுமில்லை. எளிதாக அணுகப்படக்கூடிய தளத்தில் இருக்க விரும்பும் எல்லாருக்கும் இது பொருந்தும்.

எப்படிப்பட்ட விஷயங்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டாலும், வழிமுறைகள் எத்த்னை விலாவரியாக சொல்லப்பட்டாலும் அதன் இடைமுகம் வாசகர்களுக்கு முக்கியம்.

வெறும் குறை அல்ல. அக்கறையில் சொல்வது.

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...