இரண்டு ஆயிரம் ரூபாயும் கொஞ்சம் சில்லறைகளும்
நீயும் நீயும்
அடிக்கடி சந்தித்து
அப்படி என்னதான் பேசிக்கொள்வீர்கள்
கண்ணாடி முன்..?
சிற்பம் கவிதை
இசை ஓவியம்
நான்குமுனைச் சந்திப்பு நீ
கனிவானதொரு சொல்லோ
நேசம் துளிர்க்குமொரு பார்வையோ
சில்லறையற்ற பொழுதில்
நீ எடுக்கும் பயணச்சீட்டோ
போதுமானதாயிருக்கிறது உனை நேசிக்க
ஒருவழியாய தைரியம் வரவழைத்து
சொல்லிவிட்டேன் என் காதலை
சலனமற்றிருக்கிரது
உன் புகைப்படம்
அலைகளுக்குத் தெரியாமல்
கடலுக்குச் சென்று வருவதுபோன்றது
ஒவ்வொரு முறையும் உனைச்சந்திப்பது
முதல்முறை
உனை அணைக்க நேர்ந்தபோது
உடுத்தியிருந்த புதுச்சட்டையை
வெகுநாட்கள் கழித்து
மீண்டும் உடுத்த நேர்கையில்
ஏதோ ஒருவகையில்
அந்த நாளையே விசேஷமாக்கிவிடுகிறது
மனசும்
சட்டையும்
”பேசணும்போல இருக்கு” என்று
உன் முதல் செய்தி வந்தது
அழைப்பதற்குள் அடுத்த செய்தி
“ஆனால் கூப்பிடாதே” என்று...
இரண்டு செய்திகளுக்கும்
இடையிலான உன் தயக்கம்
சற்றே தாமதமாக வந்தடைந்தது
என் விரல்களுக்கு.
நீ நடந்த தடங்களின் அடியில்தான்
கிடக்கிறது நம் மணல்
மணல் என்றால் மணல்
மனசென்றால் மனசு.
மேலே இருப்பவை காதலர் தின விகடன் ஸ்பெஷலில் இருந்த பறித்த வரிகள்
முதல் ஆயிரம் - நா.முத்துக்குமார்
இரண்டாம் ஆயிரம் - என் . விநாயக முருகன்
காதலர் தின ஜுரம் வந்துடுச்சேய்ய்ய் :)
ReplyDeleteவாழ்த்துக்கள் !
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in