நான்கு வருடங்களாக விழா ஒருங்கிணைப்பாளராக இருந்ததில் தமிழ் மன்ற நிகழ்ச்சிகளில் மேடையில் பாடவோ, நடிக்கவோ, ஆடவோ முடியாமல் இருந்தது. இவ் வருடம் அப்போறுப்புகளில் இருந்து விடுதலை ஆனதில் கொஞ்சம் சவுகரியம். இரண்டு நாடகங்களில் பங்கேற்றேன். ஒன்றில் (ஒபாமா விஜயம்)தொணதொணக்கும் வீட்டுப் பெரியவராக, மற்றொன்றில் ( கந்தசாமி MP3) தோற்றுபோய் ரோட்டுகு வரும் அரசியல்வாதியாக. இரண்டுக்குமே நல்ல வரவேற்பு என்றாலும், கந்தசாமி ஹிட். நடிப்பு நல்ல அனுபவமாக இருந்தது. தொழில்முறை நடிகனாக இல்லாமல் போனதால், ஒவ்வொரு பாத்திரமும் ரொம்ப பாதித்தது. பெரியவர் வேட நாடகம் முடிந்தபிறகு, அரசியல்வாதி நாடகம் வரவே, உடல்மொழியை மாற்றுவதற்கு சற்று சிரமப்பட்டேன்.
விழா விவரம் இங்கே :
விழா படங்கள் இங்கே
you tube ல் கந்தசாமி MP3 - பகுதி 1 பகுதி 2 பகுதி 3
கந்தசாமி முழு ஒளித்தொகுப்பு :
அண்டை அயலில் உள்ள நாடக ஆர்வலர்கள் இணைந்து ஒரு நாடகக்குழு துவங்கியுள்ளோம் . கலாட்டா க்ரியேஷன்ஸ் என்ற பெயர் பரிசீலனையில் உள்ளது. வேறு பெயர்கள் தொன்றினால் சொல்லவும். இந்தக் குழு அரங்கேற்றும் 1.5 மணி நேர நாடகத்தில் இந்திரனாக நடிக்கிறேன். மேல் விவரங்கள் விரைவில்.
இப்படியே நாடகம், டீ.வி, சினிமா என்று நடித்து, நானும் ஒரு நாள் தமிழ்நாட்டுக்கு சி.எம் ஆகிவிடமாட்டேனா என்ன..? :-) :-)
வாழ்த்து!
ReplyDeleteஅந்த மீசை உண்மையானதுதானா? எம்பி3 விளக்கம் நன்று :-)
அது My மீசை இல்லை. மை மீசை :-)
ReplyDeleteஅடடே .... என்னன்னமோ நடக்குது நாட்டுல, நமக்குத்தான் ஒண்ணுமே தெரியமாட்டேங்குது. நடத்துங்கப்பூ, நல்ல்ல்ல்லா நடத்துங்க.
ReplyDeleteஅன்புடன்
முத்து