விக்ரம் கமலின் நெடுநாளைய மெகா-வசூல் கனவை நனவாக்கி இருக்கிறது. வாழ்த்துக்கள். ஆனால் கமல் ரசிகனாக எனக்கு இது மனசுக்கு உகந்த படமில்லை. வசூலுக்காக எத்தனை நிறைய சமரசங்கள் ??!! - முதல் பாதி அவர் இல்லவே இல்லை. கமல் ஊமையோ என்று கூட நினைத்தேன். இரண்டாம் பாதியில் கொஞ்சம் ஈடு கட்டி விட்டார்.
ஆனாலும் கூட ரொம்ப conscious ஆக underplay செய்வது போல் ஒரு பரிதாபம். சிவாஜிக்கு கடைசி காலத்தில் நிகழ்ந்தது - ஒரு ரூவா குடுத்தா நால் ரூவாக்கு நடிக்கிறாருப்பா - தனக்கும் நிகழ்ந்து விடக் கூடாது என்கிற அதீத எச்சரிக்கையுடன் நடந்து கொண்டது போல ஒரு தோணல்.
de-ageing டெக்னாலஜி உபயோகித்து இருப்பதாக சொன்னார்களே ? யாருக்கு?
பழைய சகாக்களை கொண்டே வரணும் போல ஒரே அழிச்சாட்டியமா.. அதுவும் பேர் கூட உப்பிலி. ( ராமன், முகுந்தன் எல்லாம் எங்கப்பா? ;-) )
நடிப்பில் மட்டும் அல்ல- படத்தின் ஆக்கத்திலும் விலகி - ஒரு தயாரிப்பாளர் நிற்கக்கூடிய தூரத்திலேயே - இதில் நின்றிருக்கிறார். அய்யோ பாவம். திரைக்கதையில் கமல் கை வைத்திருந்தால் விஸ்வரூபம்-1 ல் நிகழ்ந்தது போல ஒரு அற்புதம் நிகழ்ந்திருக்கும். இப்போது போல கொஞ்சம் “பஜ்” ஜென்று இருந்திருக்காது.
பஹத் பாசிலுக்கு நல்ல ரோல்தான். ஆனால் எல்லோரும் தூக்கி வைத்து கொண்டாடுவது போல அத்தனை பெரிய அப்பாடக்கர் இல்லை. கொஞ்சம் உடம்பை தேத்தி இருக்கனுமோ? ஏதோ மிஸ்ஸிங் . சில இடங்களில் அந்த அகோர இளிப்பு மட்டும் அற்புதம்.
”மெகா சைஸ்” விஜய் சேதுபதியும் கொஞ்சம் ஏமாற்றம்தான். வில்லன் ரோல்களும் வரவர போர் அடிக்கிறது . மாத்தி யோசி மசெ.
ஸ்வாதிஷ்டா களை. உடம்பை குறைத்தால் நன்றாக இருக்கும் என்கிறான் தோழன். எனக்கு என்னவோ அப்படி தோன்றவில்லை. ஃபகத்துக்கு ஜோடியாக காயத்ரியை எங்கே பிடித்தார்களோ. லக்கி.
ஏஜெண்ட் டீணா எதிர்பார்த்த சீன் தான். எனவே புஸ்வரூபம்.
காளிதாஸ் ஜெயராமும் இந்தப் படத்தில் இருக்கிறார். அவர் ”நடித்த” போர்ஷன்கள் கத்திக்கு இரையாகிவிட்டது போல.
நரேன்- ரொம்ப பாவம்.
எல்லோரும்ம் சொல்வதை போல ரோலக்ஸ் ரோலுக்கு ரஜினி வந்திருந்தால் நம் மண்டைக்கு ரத்தம் பாய்ந்திருக்கும். கமல் கருணாநிதி மாதிரி. யோசித்து தான் செய்திருப்பார் ;-) அட்லீஸ்ட் சத்ய்ராஜ் வந்திருக்கலாம்.
அநிருத் பேபிக்கு இது காலம். அடித்து ஆடுகிறது அந்த ஊசிப்பட்டாசு. போற போக்கைப் பாத்தால் கீர்த்தி சுரேஷை லாவிக்கொண்டு போய்விடும் போல இந்த நட்டுவைத்த நட்ராஜ் பென்சில்
படம் நன்றாக ஓடுவதால், இந்த படம் எல்லோருக்கும் புரிந்து விட்டது என்று நான் நம்பவில்லை. அவரவர்க்கு வசதியான channelல் , அவரவர் மலர்நீட்ட உயரத்தில் கண்டு களிக்குமாறு டைரக்டர் வெங்காய வேலை பார்த்திருக்கிறார். That is Brilliant
இதன் விளைவாக :
மருதநாயகம் தூசி தட்டப்பட்டால் மகிழ்ச்சி
மக்கள் நீதி மையம் கொஞ்சம் அமைதியானால் மகிழ்ச்சி
புதிய திறமையாளர்களுக்கு இந்த வெற்றியின் விளைவால், ராஜ்கமல் வாய்ப்பு வழங்கினால் சந்தோஷம்.
இந்த LCU மூலம் சினிமாவே சீரியல் ஆகி தொழில் தழைத்தால் உன்னதம்.
விக்ரோம்... தட்ரோம் .. தூக்ரோம்.