Tuesday, December 13, 2005

காப்பி க்ளப்

நாராயணன் பதிவின் பாதிப்பில் புதுப்பேட்டை பாடல்களைக் கேட்டேன். ஒன்றும் ஒட்டுகிற மாதிரி தெரியவில்லை. ஒருவேளை காட்சிகளுடன் கலந்து பார்த்தால் பிடிபடுமோ என்னவோ..முக்கியமாக செல்வாவின் படங்களில் பாட்டு எப்போது வருகிறது என்பதே தெரியாத அளவுக்கு காட்சிகளும் பாட்டும் அம்சமாக கலந்து வரும். ஆகவே படத்துக்கும், கிருஷ்ணவேணிக்கும் ஆவலோடு வெயிட்டிங். (அமெரிக்காவில் இணையத்திலிருந்து இறக்கிப் பார்க்கிறவராக இருந்தால், wisetamil.net அல்லது tamiltricks.com முயற்சித்துப் பார்க்கவும்.)

சுத்திச் சுத்தி ஏழு ஸ்வரம்தான். என்ன பல்டி அடிச்சாலும் அதுக்குள்ளதான் என்று மதிப்புக்குரிய மொட்டை சொல்லும்போது, பின்ன இவர் ஏன் இன்னமும் புதுசா பாட்டு போடறேன்னு சொல்றாருன்னு நினைக்கத் தோணும். ஆனா, கலர் கலரா புது இசைஞர்கள் உள்ளே புகுந்திருக்கும் இந்த நேரத்தில்
அது பல பாடல்களில் தெளிவாக தெரிகிறது. லலிதா ராம் மாதிரி கர்நாடக சங்கீத ஸ்பெஷலிஸ்டுகள் இன்னமும் நிறைய கண்டுபிடிக்கலாம். என் சமீபகால ஃபேவரைட் பாடல்களில் பழைய சாயல் அடிக்கும் பாடல்கள் இவை.


ஒரு பொற்காலம் தொடங்கும்(கஸ்தூரிமான்) - என்னைத் தாலாட்ட வருவாளா (காதலுக்கு மரியாதை)

தொட்டுத் தொட்டு என்னை ( காதல்) - என்னவளே அடி என்னவளே ( காதலன்)

பம்பரக் கண்ணாலே பச்சக் குத்த வந்தாளே (பம்பரக் கண்ணாலே) - அடி என்னாடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு என் நெஞ்சு குலுங்குதடி (பட்டிக்காடா பட்டணமா..)

ரா..ரா ( சந்திரமுகி) - வான் போலே வண்ணம் கொண்டு ( சலங்கை ஒலி)

பனித்துளி பனித்துளி ( கண்டநாள் முதல்) - ராப்போது ஆனது. ராத்தூக்கம் போனது ( படம்- ???? )

3 comments:

  1. அன்புள்ள சுந்தர்

    //தொட்டுத் தொட்டு என்னை ( காதல்) - என்னவளே அடி என்னவளே ( காதலன்)


    தொட்டுத் தொட்டு என்னை பாட்டு
    ரொம்ப ஸ்பீடா போவும்
    என்னவளே பாட்டு ரொம்ப ஸ்லோவா போவும்

    எப்படி உங்களுக்கு சாயல் தெரிது ?

    //
    பம்பரக் கண்ணாலே பச்சக் குத்த வந்தாளே (பம்பரக் கண்ணாலே) - அடி என்னாடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு என் நெஞ்சு குலுங்குதடி (பட்டிக்காடா பட்டணமா..)

    ரெண்டு பாட்டுக்கும் சம்பந்தமே இல்லை


    //

    ரா..ரா ( சந்திரமுகி) - வான் போலே வண்ணம் கொண்டு ( சலங்கை ஒலி)


    இந்தப்பாட்டுன்னா கொஞ்சம் ஒத்துப் போகுற மாதிரி தெரியுது

    மத்த பாட்டுகளைக் கேட்டதில்லை

    எனக்குத் தெரிஞ்சத நான் சொல்றேன்

    சலாம் குலாமு குலாமு சலாம் குலாமு (ஹலோ) மற்றும்
    பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாலே

    0

    மதனோற்சவம் ரதியோடுதான் (சதுரங்கம்) மற்றும்
    அழகோவியம் உயிரானது (ரோஜாமலரே)

    ReplyDelete
  2. //நாராயணன் பதிவின் பாதிப்பில் புதுப்பேட்டை பாடல்களைக் கேட்டேன். ஒன்றும் ஒட்டுகிற மாதிரி தெரியவில்லை.//

    தலீவா உனக்கு வயசாயிச்சி ;)))))))0

    ReplyDelete
  3. கணேசு..பீட் பாக்காதீங்க. சாயல் பாருங்க ராசா.

    நாராயண்..:-) உடம்புக்கா..மனசுக்கா..??

    ReplyDelete

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...