கடந்த ஒரு மாதமாக சரியான வேலை. மே மாதம் ஆறாம் தேதி சாக்ரமண்டோ தமிழ்மன்றத்தில் தமிழ்ப்புத்தாண்டு விழாவை ஒட்டிய கொண்டாட்டம். தொண்டரடிப்பொடிகளில் ஒருவனாக இருப்பதால், நிகழ்ச்சியை நடத்துவதில், ஒருங்கிணைப்பதில் மெனக்கெட வேண்டி இருந்தது. தவிர சூர்யா இரு நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றான். மற்ற குழந்தைகளுடன் கலந்து கொண்ட நடன/நாடகமாக இருந்ததால் அவனுக்கு பயிற்சிக்காகவும் ஏகப்பட்ட முறை போக வேண்டி வந்தது.
வார இறுதிகள் எல்லாம் இதிலேயே கழிய, ஏகப்பட்ட வேலை சுணங்கிப் போனது. இறையருளால் விழா இனிது நடந்து முடிந்தது. அடுத்தடுத்து வரக்கூடிய பங்கேற்பாளர்களுடன் ஓடி, அவர்களை தயார் செய்து கொண்டிருந்ததில் பாதி நிகழ்ச்சிகள் சரிவர பார்க்கவே முடியவில்லை. இரு மகளிர் நடனங்களை மட்டும் எனக்குரிய "கலை" ஆர்வத்தால் ஓடி வந்து மேடைக்கு முன்புறம் நின்று பார்த்தேன்.
இது முடிய அடுத்து, இந்தியப் பயணத்துக்கான முஸ்தீபுகள். என் தமக்கையின் மகள் திருமணத்திற்காக மே 21 முதல் ஜூன் 18 வரை இந்தியாவில் இருப்பேன்.
இதை தவிர அதே விடுமுறையில் மீனாக்ஷி சங்கர் திருமணத்தையும் கண்டு களிக்கலாம் என்றொரு திட்டம் உண்டு. அதைத் தவிர பெரிய திட்டங்கள் ஏதுமில்லை. ஐகாரஸ் பிரகாஷ்/நண்பர்கள் ஃப்ரியாக இருந்தால், ஒரு தாகசாந்திக்குப் போய் கலாய்க்கலாம் என்ற எண்ணம் உண்டு.
ஸார் ஃப்ரீயா என்று தெரியவில்லை
மற்றபடி வேறென்ன....உங்கள் எல்லோரையும் போலவே நானும் தேர்தல் முடிவுகளை ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். என் எண்ணத்திற்கு மாறாக கலைஞர் கூட்டனி ஆட்சி அமைக்கும் என்று ஆருடங்கள் கூறி வருகிறார்கள். ஆரம்பத்தில் அதிமுக ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், அம்மா நடத்திய அரசியல் ஆள்பிடி வம்புகளும், வைகோவின் அசிங்க அரசியலும் கலைஞர் மீது பரிதாபத்தை உண்டாக்கி விட்டது. கிட்டத்தட்ட ஏகப்பட்ட பேருக்கு இத்தகைய மனமாற்றம் நிகழ்ந்து இதனால் திமுகவின் பக்கம் வெற்றி வந்திருக்கிறது. கலைஞர் மீது, அவருடைய குடும்ப ஆட்சி மீது, பேரனுக்கு அவர் தந்திருக்கும் முக்கியத்துவம் மீது எனக்கு ஏகப்பட்ட விமரிசனங்கள் இருந்தாலும், தேர்தல் களத்தில் அந்தக் கிழவர் சுழன்றாடிய வேகத்தைக் கண்டு நிஜமாகவே பிரமித்துப் போனேன். இந்த வயசுக் கிழவர்கள் எல்லாம் மாயவரத்தில் கோவணம் அவிழ்வது கூடத் தெரியாமல் நடந்து கொண்டிருக்க, மைக்கைப் பிடித்துக் கொண்டு ஏரியாவுக்கு ஏற்றபடி, கூட்டத்துக்கு தக்கபடி, ஒரு பக்கா தேர்தல் அறிக்கையைப் போட்டு, அதை எதிர்க்கட்சியையும் ஒத்துக் கொள்ள வைத்து , எல்லோருடைய கவனத்தையும் தன் பக்கம் திருப்பி, இந்தத் தேர்தலின் நாயகராகிப் போனார். எது அவரை இயக்குகிறது???. எது அவரை இந்த அளவுக்கு உசுப்புகிறது என்று தெரிந்து கொள்வது நமது அரசியல் கட்சிகளின் இளந்தலைமைகளுக்கு முக்கியம்.
அவருடைய உழைப்புக்கும், வைகோ என்கிற கேவலன் செய்த துரோகத்துக்கும் அவருக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்பது என் அவா. அந்த வெற்றி பாமக போன்ற கட்சிகள் பங்கு கொள்கிற கூட்டணி ஆட்சிக்கு வித்திடும் வேளையில்தான் எனக்கு கலக்கம் வரும். அந்தக் காரணத்துக்காகவே ஆரம்பத்தில் திமுக கூட்டணி ஆட்சி வரக்கூடாது என்று வேண்டி வந்தேன்.
ஏனெனில் ஜெயின் கூட்டனி ஆட்சி என்றால் கை கட்டி வாய் புதைதத்து நிற்கும் அரசியல் கட்சிகள், கலைஞ்ர் ஆட்சி என்றால் மல்லுக்கு நிற்கும் என்ற காரணமே.
வெகு மக்கள் விரோத அரசியல் செய்யாத ஜெயலலிதாவும், குடும்ப அரசியலுக்கு தலையாய முக்கியத்தும் தராத கருணாநிதியும், சாதி தாண்டி எல்லா மக்களுக்காகவும் சிந்திக்கும் ராமதாஸும், தமிழக மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கிற ஒரு பேச்சாற்றல் மிக்க வலுவான காங்கிரஸ்
தலைமையும், தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய தலையாய பிரச்சினை என்ன என்கிற தெளிவு கொண்ட திருமாவளவனும் என் கனவு.
துரதிர்ஷ்டவசமாக அது வெறும் கனவாக போவதற்கே வாய்ப்புகள் அதிகம்.
Subscribe to:
Post Comments (Atom)
ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ?? - கூத்தோ கூத்து ----------------------------------------------------------------------------------- ஃ...
-
இந்த வார அவள் விகடன் இதழில் என் கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது. விகடனில் இருக்கும் நண்பர் நம் வலைப்பதிவுகள் அனைத்தையும் தொடர்ச்சியாக படித...
-
என்ன ஸார்..செளக்கியமா..?? என்ன ...எதும் புதுசா எழுதறதில்லையா.?? ஏதாச்சும் கிளு கிளு ன்னு படம் போட்டு, கச்சடாவா ஏதும் எழுதுவ...
உங்களை சந்திக்க ஆவலாயுள்ளேன். விரும்பினால் எனக்கு மின்னஞ்சல் செய்யவும்.
ReplyDeleteஅன்புடன்,
டோண்டு ராகவன்
சார், எனக்கு ஆட்சேபம் இல்லை. ஆனால் என்னைப் போன்ற ஆசாமிகளிடம் நீங்கள் - பாவம் - என்ன பேசுவீர்கள் என்பது விளங்கவில்லை. உங்கள் அழைப்புக்கு மகிழ்ச்சி. சந்திக்கலாம்.
ReplyDeleteஆதியிடம் வந்த இன்னொரு மடல் :
ReplyDeleteமூக்கரே : off topic : உங்கள் கவிதை லிங்குகள் ஒழுங்காக வேலை செய்யவில்லை
********
இதை தவறுதலாக டெலிட் செய்து விட்டேன்.
ஆதி: மன்னிக்கவும். இப்போது சரி செய்யப்படு விட்டது.
நன்றி. கவிதைப் பக்கத்துக்கு தேன்கூடு வழி சொன்னதோ..?? யார் அந்த அறிமுகத்தை எழுதினார் என்று தெரியவில்லை. அவருக்கு என் நன்றி.
பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎன்ன சுந்தர்
ReplyDeleteஉங்கள் "தமிழகப் பயணம்" நன்கு அமையட்டும்.
கவலை வேண்டாம் நிச்சயம் தமிழன தலைவர் ஆட்சிக்கு
வந்து விடுவார். அவரின் அயராத உழைப்புக்கும், தமிழ் சேவைக்கும்
தமிழக மக்கள் அவருக்கு தரும் இந்த பரிசு வரலாற்று முக்கியவத்துவம்
வாய்ந்தது ஆகும்.
உங்கள் காலடிகள் பட்டு மயிலாடுதுறை மேலும் செழிக்கட்டும்.
நன்றி
மயிலாடுதுறை சிவா...
பாம்பு. நன்னி.
ReplyDeleteசிவா,
//உங்கள் காலடிகள் பட்டு மயிலாடுதுறை மேலும் செழிக்கட்டும்.//
ரொம்ப கூச்சமா இருக்கு. FYI நாம மாயவரத்துல இருந்த வரைக்கும் காவேரில தண்ணி கூட ஓடலை சிவா. இப்பத்தான் நல்லா இருக்கு. அப்படியே இருக்கட்டும். விட்டுடுங்க.
bon voyage sundar.
ReplyDeleteபோட்டோ எடுத்துட்டு வாங்க. :)
சுந்தர்,
ReplyDeleteஊர்ப்பயணமா? சந்தோஷமாப் போயிட்டு வாங்க. அதுலேயும், இப்படிக் கல்யாணக் கொண்டாட்டமுன்னா இன்னும்
விசேஷம். நிறையச் சொந்தங்களை அங்கெயே பார்த்துரலாம்.
சரி. போயிட்டுவந்து 'எழுது'வீங்கல்லே?
தமிழ்சங்கப் படங்களை, முக்கியமா மகளிர் நடனம், சூர்யாவின் நாடகம் படங்கள் போட்டுருக்கலாமுல்லே?
மதி, கண்டிப்பா. பின்ன எதுக்கு இருக்கு மலிவு விலை டிஜிடல் காமிராக்கள்..??
ReplyDeleteதுளசியக்கா, கண்டிப்பா ஃபோட்டோஸ் போடறேன். வாழுத்துக்கு நன்றி. போயிட்டு வந்து கண்டிப்பா எழுதறேன்.
Enjoy!!!!
ReplyDeleteMey, Thanks
ReplyDeleteAAdhi, you are welcome....
மூக்கரே! நான் கூட கிளம்பிக் கொண்டே இருக்கேன். இலக்கியவாதிகள் சந்திப்பு போட்டுடலாமா? ஏதோ என்னால் முடிஞ்சது சாதா லஸ்ஸி வாங்கி தாரேன் :-)
ReplyDeleteஅடடே...வாங்க, வாங்க,
ReplyDeleteநமக்காக, நாம free ஆக முடியாதா என்ன?
மூக்கு,
ReplyDeleteநாம் சந்திக்க முடியுமா?
மாமி, இண்டியா வர்றதுல சந்தோஷம்.
ReplyDeleteநீங்களும் நானும் சந்திச்சா அது எலக்கிய சந்திப்பு கெடையாது மாமி.
;-). அதெல்லாம் ரொம்ப பெரிய விஷ(ய)ம்...எனக்கெதுக்கு...!! உங்களை மாதிரி கணையாழி எளுத்தாளினி கிட்ட பேட்டி கண்டு போடலாம். ஏதோ என்னாலானது.;-)
அடடே முத்து, என்ன இப்படி கேட்டுட்டீங்க. திராவிட ராஸ்கல்கள் சந்திச்சுக்க முடியலன்னா அதுக்கப்புறம் என்ன இருக்கு..!! கண்டிப்பா மீட் பண்ணுவம்.
ReplyDeleteமங்களூரா..? பெங்களூரா..? இல்லை சென்னையா/மதுரையா..?
இப்படிக்கு
தி.ரா
தமிழ்மன்ற விழாப் படங்களை ஊருக்குப் போறதுக்கு முன்னாடியே போட்டுட்டுப் போங்க. இனிய பயணத்திற்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteமுக்கரே,
ReplyDeleteபொதுவாய் சென்னை டிரைவ்- இந் உட்லண்ட்ஸில் இணைய பதிவாளர்கள் என்கின்ற இலக்கியவாதிகள் சந்திப்பு மாநாடு நடக்கும்.- எளுதரவங்க எல்லாம் இலக்கியவாதிகள் என்றுதானே சொன்னார்கள்?????
போண்டா மற்றும் காப்பி, ஸ்பான்சர் பொதுவாய் ரஜினி ராம்கி என்று கேள்வி.
எப்படியும் ஏழு எட்டு பேர்கள் தேறுவார்கள். ஆனால் இரைச்சலில் யார் என்ன சொல்கிறார்கள் என்று
கேட்காது.
இதுதாங்க, இதுவரை நான் சென்னையில் கண்ட மீட்டிங்.
இன்னொரு எக்ளூசிவ் சதுர மேஜை மாநாடு நடக்கும். அந்த விவரங்கள் எனக்கு சரியாய் தெரியாது :-)
சமீபத்து பங்காளர் துளசி அவர்களே, விவரங்கள் சரிதானே?
செல்வா, கட்டாயம் புகைப்படங்களை வலையேற்றுகிறேன்.நன்றி.
ReplyDelete//எளுதரவங்க எல்லாம் இலக்கியவாதிகள் என்றுதானே சொன்னார்கள்?????//
ஹய்யோ..மாமி. இவ்ளோ அப்பாவியாவா இருப்பீங்க.?? ;-)
வாங்க, சுந்தர், முடிஞ்சா சந்திக்கலாம் (உங்கள் availability பொருத்து)
ReplyDeleteஇந்தியப் பயணம் இனிமையாக அமைந்திட வாழ்த்துக்கள் !
என்றென்றும் அன்புடன்
பாலா
"ஜெயின் கூட்டனி ஆட்சி என்றால் கை கட்டி வாய் புதைதத்து நிற்கும் அரசியல் கட்சிகள், கலைஞ்ர் ஆட்சி என்றால் மல்லுக்கு நிற்கும் என்ற காரணமே."
ReplyDeleteரொம்ப சரியா சொன்னிங்க,காங்கிரஸ்ல ஆட்டம் போடும் இளங்கோவன் போன்ற ஆட்களை கூட சோனியாவிடம் சொல்லி சமாளித்து விடலாம்,ஆனால் பாமாக வையும் இடது/வலது சாரிகளையும் எப்படி சமாளிக்க போகிறார் என்று தெரியவில்லை.
இவற்றுக்கு எல்லாம் முதலில் "Exam result " வரட்டும்.
பாலா, நன்றி. அவசியம் சந்திக்கலாம்
ReplyDeleteஎன்னைக்கேட்டா காங்கிரஸ் வளர ப.சிதம்பரம் மாதிரி ஒரு பக்குவமான தலைவரும், ஈவிகேஎஸ் மாதிரி ஒரு வாயாடி /கலக்கல் தலைவரும் ஒண்ணா சேர வேண்டும். அப்பத்தான் தமிழ்நாட்டு கவர்ச்சி அரசியலுக்கு ஈடுகொடுக்க முடியும். இல்லாட்டி அரசியலுக்கு வந்திருக்கிற சினிமா "சுரமு" ( fever ?? ) தொடரும். ;-)
ReplyDeleteஉங்களைப்பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. இந்த ஆண்டாவது போகலாம் என்று திட்டம் போட்டு, அடுத்தவருடத்திற்கு தள்ளி போட்டாகி விட்டது.
ReplyDeleteHave fun and bring pictures to post.
மூக்கரே, திருமண நிகழ்ச்சிக்கு வருகை தர இசைந்திருப்பதற்கு நன்றி. திருமண அழைப்பு பற்றிய எனது பதிவு:
ReplyDeletehttp://thavam.blogspot.com/2006/05/blog-post.html
மீனாக்ஸ், மதுரை அல்லது சென்னைக்கு வருகிறோம். அழைப்பிதழ் பார்த்தேன். நன்றி.
ReplyDeleteபத்மா, பொறாமையா..?? நானே மூன்று வருடங்கள் கழித்து இந்தியா செல்கிறேன். அதற்கே பொறாமையா..??ம்..கண்டிப்பாக ஃபோட்டோக்கள் வலையேறும்.