Wednesday, June 28, 2006

நான்கு இரண்டான கதை

வேண்டி விரும்பி பெற்றதில்லை
பிறப்பிலேயே வரமாகி வந்த வேதனை
இது பிறக்கவே வேண்டாம் என்று
நினைத்ததனால் வந்த வேதனை

கர்ணனுக்கு கவச குண்டலம் போல
காதுக்கும் மூக்குக்கும் கண்ணுக்கும்
பாலமாய் என் பாவமாய் இருபதாண்டாய்
முளைத்திருந்த கண்கள்

அம்மாவுக்கு வேண்டுதலாய் போன
எனக்கு வேண்டாத சுமையான
என் வேகத்தை மட்டாக்கிய
என் இனியர்கள் எனக்கு கூப்பிடுபெயராய்
சூட்டி அழகு பார்த்த

என் கண்ணாடிக் கண்களை....

நெய் மணக்கும் பண்டங்களுக்கே
நானறிந்த அகர்வால் என்ற பெயர்
ஆயுசுக்கும் மெய் சிலிர்க்க என்
கண் திறந்தது இந்தப் பயணத்தில்.

இந்தியாவிலிருந்து திரும்பி இருக்கிறேன்
இரண்டு கண்ணனாக.

தைரியம் தந்த செல்வாவுக்கு நன்றி.

12 comments:

  1. வாங்க. வாங்க. இரண்டு கண்ணனாய் வந்தமைக்கு வாழ்த்துகள்! :)

    ஊரில் நடந்த மிச்ச விசயங்களையும் சொல்லுங்க.

    ReplyDelete
  2. இப்பக் கண்ணு நல்லாத்தெரியுதா?

    லேஸர்தானே?

    கொஞ்ச நாளைக்குக் கவனமா இருங்க.

    அப்புறம் ஊர்லே என்ன விசேஷம்?

    சூர்யாவுக்கு 'ஊர்' பிடிச்சதா?

    ReplyDelete
  3. மதி/ துளசி அக்கா

    நன்றி.லேஸிக் சர்ஜரிதான். இப்ப கொஞ்சம் glare இருக்கு. மெள்ள மெள்ள அதுவும் சரியாப் போவும் என்று சொல்லி இருக்கிறார்கள். பார்ப்போம். கவனமாத் தான் இருக்கேன்.

    மெதுவே மற்ற விஷயங்களையும் எழுதுகிறேன். சென்னை நண்பர்களில் இருவரைத் தவிர வேறு யாரையும் சந்திக்க முடியவில்லை - நேரமில்லை.

    ReplyDelete
  4. வாங்க சுந்தர். என் அனுபவம் உங்களுக்கு உதவியாய் இருந்தது என்று எண்ணி மகிழ்வாய் இருக்கிறது. பூரணமாய்ச் சரியாக வாழ்த்துக்கள். ஆரம்ப வாரங்களில் glare மற்றும் தூரப்பார்வைக் குறைச்சல் இருக்கலாம். கவலைப்படாதீர்கள். ஈரப்பசைக்கான சொட்டுநீரைத் தொடர்ந்து பயன்படுத்துங்கள். எனக்கும் முதல் சில மாதங்கள் மனத் தடுமாற்றமாகத் தான் இருந்தது. இரண்டரை ஆண்டுகள் கழிந்த இன்று 'தெளிவாக' இருக்கிறது.

    ReplyDelete
  5. செல்வா,

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    தொடர்ந்து சொட்டு மருந்துகளை வேளை தவறாமல் உபயோகித்து வருகிறேன். மூன்று மாதங்கள் கழித்து இப்போதிருக்கும் சிறு சிறு பிரச்சினைகளும் தீருமென்று நம்புகிறேன். பார்ப்போம்.

    ReplyDelete
  6. முழுமையாக குணமடைய வாழ்த்துக்கள் சுந்தர்!

    ReplyDelete
  7. நன்றி தங்கமணி.

    ReplyDelete
  8. விடுமுறை இனிதே கழிந்திருக்கும் என்று நினைக்கிறேன். கண்கள் சீக்கிரம் சரியாக வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. நன்றி பத்மா

    ReplyDelete
  10. ஆதி, நன்றி.

    எப்போதும் மூக்கன் தான்.:-)

    ReplyDelete
  11. ஏமாத்தீட்டீங்களே மூக்கு..

    சரி சரி விடுங்க..ஆபரேஷன் எல்லாம் பண்ணி இருக்கீங்க..கண்ணையும் மூக்கையும்(?) பார்த்துக்குங்க..

    கொஞ்சம் நாளைக்கு கம்ப்யூட்டரை பார்க்காமல் இருப்பது நன்மை தரும்

    ReplyDelete
  12. முத்து,

    தொடர்பு கொள்ள முடியாமைக்கு மன்னிக்கவும். நேரக் குறைவு மற்றும் பல இடையூறுகள் போன்ற காரணங்களால் சந்திக்க இயலவில்லை.

    லேசிக் சர்ஜரி பண்ணிக் கொண்டு கம்ப்யூட்டர் மானிட்டரை பார்க்கக் கூடாதா..?? எந்த டாக்டரும் எனக்கு இதை ( அறிவுரையாக) சொல்லவில்லையே.??

    ReplyDelete

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...