Wednesday, November 18, 2009

சங்கிலி


சந்திக்கின்ற சந்தர்ப்பங்களை
தொலைபேசி நினைவூட்டுகிறாய்.
உடல்நலம் விசாரித்தால்
விசாரிக்காது போனவனை
அலுத்துக் கொள்கிறாய்
சாதாரணப் பேச்சைக்கூட
மர்மமான பார்வையால்
அழகாக்குகிறாய்.
உன் தோழிகளிடம் பேசினால்
உனக்கு அவர்களைப் பிடிப்பதில்லை.
என்னிடம் பேசுகையில்
காரணமில்லாமல் சிடுசிடுக்கும்
உன்னவனின் பதட்டம்
புரிய புன்னகைக்கிறேன்.
சந்திக்கும்போதெல்லாம் உன்
அணைப்பில் இறுகும்
என் பிள்ளையைப் பார்க்க
கொஞ்சம் பொறாமையாயும்
கூச்சமாயும் இருக்கிறது.
அன்பு செலுத்துவதைக்கூட
ரகசியப்படுத்திவிட்டன
பிணைத்துக்கொண்ட உறவுச்சங்கிலிகள்...
.....முன்பே பார்த்திருக்கலாம்



5 comments:

  1. nichayamai kabithaithaan. azakaanathum kUda

    Chandra

    ReplyDelete
  2. நன்றி. நெடுநாள் கழித்து சந்திக்கிறோம். நலமா.? தலைநகர வாழ்வுதானா இன்னமும்..?

    - இன்னொரு தலைநகரத்தான் :-)

    ReplyDelete
  3. திருச்சி சென்று வந்தேன்.உன்னுடைய நண்பர்கள் சிலரை பார்க்கவும் நேரிட்டது ( பழைய நெக்ஸ்ஸ் தோழர்கள்).நமது விஸ்தாரமான சந்திப்பு திருச்சி ஜென்னிஸ் ஓட்டலில் நிகழ்ந்த்தால் திருச்சி செல்லும்போது உன் நினைவு சற்று அதிகமாகவே வருகிறது.

    ReplyDelete
  4. சுந்தர், இன்னும் தலை நகரம்தான், பிள்ளைகள் படிப்பு வேலை என்ற காரணங்களினால். மறுமொழி எழுதுவதில்லையே தவிர நீங்கள் எப்போதாவது எழுதுவதை படித்துக் கொண்டுதான் இருக்கிக்றேன். சூர்யா, மனைவி நலம்தானே?

    அன்புடன்
    சந்திரா

    ReplyDelete
  5. ராஜ்குமார், ஆமாம். திருச்சியை என்னாலும் அவ்வளவு எளிதில் விடமுடியாது.:-) உன் தொலைபேசி எண் அனுப்பு. விஸ்தாரமாக பேசுவதற்கு ஜென்னீஸ் வினையூக்கிதான். அதுவே கட்டாயம் இல்லை.

    சந்திரா மேடம், யாவரும் நலம்.:-) எழுதுவதற்கு நேரமில்லையே தவிர காரணங்கள் நிறைய இருக்கிறது. ஆனால் முடிவதில்லை.

    என்றென்றும் அன்புடன்

    சுந்தர்

    ReplyDelete

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...