Tuesday, April 26, 2005

Sideways

ஸ்ரீரங்கத்து தாத்தா ரெகமண்ட் பண்ணிய படம் என்பதனால் பார்த்தேன். அவர் முதல் சொன்ன ஃபோன்பூத் சுமார் ரகம் என்றாலும் ரசிக்க வைத்த முயற்சி என்ற வகையில் அவர் சிபாரிசுகளின் மேல் எனக்கு நம்பிக்கை உண்டு.

படம் சோகையாக ஆரம்பிக்கிறது. பழைய வாடை அடிக்கும் வாத்திய ஓசைகளுக்கு நடுவே ஒரு நடுவயது குறுந்தாடி அவசர அவசரமாக எழுந்து, அத்தனை அவசரத்திலும் ஆய் போய்க்கொண்டே புத்தகம் படித்துவிட்டு, குப்பையாக கிடக்கும் வீட்டின் படுக்கையறையில் உள்ள உடைகளை அப்படியே சுருட்டி எடுத்து பைக்குள் அள்ளிப் போட்டுக் கொண்டு, சான் டியாகோவிலிருந்து கிளம்புகிறது. சடுதியில் லாஸ்ஏஞ்சலிஸ் வந்து, ஒரு பார்ட்டியில் கடைசி ஆளாக குதித்து விட்டு, அங்கு தனது நண்பனை லபக்கிக் கொண்டு மறுபடியும் காரில் கிளம்புகிறது. ரெண்டு பேரும் கலிஃபோர்னியா வைன் கவுண்டி வழியே டூர் போகிறார்களாம். குறுந்தாடி ஒரு வித்தியாச எழுத்தாளன். மற்றவன் ஃபீல்ட் அவுட் ஆகிக் கொண்டிருக்கும் நடிகன்.



நடிகனுக்கு வார இறுதியில் (போன வருட டைவர்ஸுக்கு பிறகு) மறுபடியும் கல்யாணம். ரெண்டு பேரும் கல்லூரி கால நண்பர்கள்....ஆச்சா..களம் ரெடி. ரெண்டு பெரும் வாழ்க்கையிலும்/தொழில் ரீதியாகவும் அத்தனை வெற்றி பெற்றவர்களாக இல்லாதிருந்தும் நடிகன் எதையும் லைட்டாக எடுத்துக் கொள்ளும் பேர்வழி. எழுத்தாளனுக்கு எல்லாமே சீரியஸ். எதையும் மறக்காததால், எதையும் புதுசாக செய்ய/ முயல ஏலாமல் சுயபச்சாதாபத்தோடு சுற்றி வரும்
ஒரு ஸினிகல் பஸ் மண்டை. எழுதும் கதை பப்ளிஷரால் ரிஜெக்ட் ஆகிறது. தண்ணி அடித்து விட்டு விவாகரத்தான மனைவியை அகாலத்தில் கூப்பிட்டு, இவன் பினாத்த முயல, அவள் ரெண்டாங் கல்யாணம் கட்டிக் கொண்டு, பிள்ளை பெத்துக் கொண்டிருக்கிறாள். ஒயின் மீது அபாரமான ஆர்வம். பின்னவனுக்கு எல்லாமே அந்த க்ஷணத்துக்கான சமாசாரம். பாரில் பார்க்கும் ஸ்டெஃபனியில் இருந்து ரெஸ்டாரெண்டில் அம்பு போட முயலும் பணிப்பெண் வரை. ரெண்டு துருவங்களை காட்டி, கடைசியில் எழுத்தாளனை கொஞ்சம் சராசரி லெவலுக்கு இறங்கச் செய்து, அவன் தன் புது காதலியின் வீட்டுக்கதவை தட்டும் ஷாட்டில் படம் முடிகிறது.

டைரக்டர் அலெக்ஸாண்டர் பெய்ன். அண்ணனின் மற்ற படங்கள் எதுவும் நான் கண்டிலன். ஆனால் ஒரு சீரியஸான, சோகமான ஒரு எழுத்தாளனின் வாழ்க்கையை, அவனுடைய - நல்லவனாக , கோழையாக இருப்பதானல் அமெரிக்க ஆள் விழுங்கி சமுதாயத்தில் தனியனாகப் போகும் - சோகத்தை அழகாக சொல்லி இருக்கிறார். வசனம் நிறைய இடங்களில் ஆழமாக இருக்கிறது. ஒயினைப் பற்றி ஒரு தீஸிஸ் பண்ணும் அளவுக்கு அத்தனை விவரங்கள். எனவே எனக்கு ரொம்ப பிடித்தது. (இந்தியாவில் இருந்த காலங்களில் கொல்கொண்டா என்று ஒரே ஒரு ஒயின் தான் கிடைக்கும் லோக்கல் பார்களில். அதுவும் கழுதை மூத்திரம் மாதிரி இருக்கும். இங்கோ ஸின்ஃபாண்டல், மெர்லோ, பைனட் நாய்ர், போர்ட் என்று விதம் விதமாக ஸ்ட்ராபெர்ரி பழத்தோடு அடித்துக் கொண்டிருக்கிறேன் :-) ).

படத்தில் நடித்த நடிகர்களை நான் இதுவரை பார்த்த படங்களில் பார்த்ததில்லை என்பதனால் அவர்களுடைய இந்தப் பட பர்ஃபாமென்ஸ் மட்டும்தான் தெரிகிறது. அது நேர்த்தி. எழுத்தாளனின் காதலியாக வரும் அம்மணி வேஷத்துக்கு நம்மூரில் சுகாசினி பொருந்தி இருப்பார்.

பரபரப்பான சம்பவங்கள், கஜ கஜ துரத்தல்கள், அதிவேக இச் இச் கள் தேவை இல்லாமல், ஒரு மழை நேர மத்தியானத்தில் த்ந்தூரி சிக்கனுடன், ஒயின் சப்பிக் கொண்டே பார்க்க விரும்பும் சோம்பேறி ஆத்மாக்களுக்கு நிறைவான படம்.

3 comments:

  1. அன்புள்ள மூக்கே!

    சைட் வேஸ் பார்க்க வேண்டும் என்று லிஸ்டில் வைத்துள்ள படம். ஆனால் போன்பூத் பார்த்தாகி விட்டது. நல்ல டைம்பாஸ் படம். போன்பூத்தை விட்டு நகர விடாமல் அங்கேயே படத்தை முடித்திருப்பார்கள். நல்ல சஸ்பெண்ஸ் தீம்.

    ReplyDelete
  2. அடடே..வாங்க ஸ்டார்...

    என்னுடைய பழைய பதிவு ஒண்ணுல ஒரு லிஸ்ட் கொடுத்திருக்கேன். பாத்தீங்களா..?? ஸைட்வேஸ் நல்ல படம். பாருங்க.

    ReplyDelete
  3. நானும் SideWays மற்றும் Finding NeverLand எடுத்து பார்த்தேன்.இரண்டுமே சற்று வித்தியாமான படம் என்றாலும் சினிமா தனமான சறுக்கல்களுக்கும் பஞ்சமில்லை.
    படத்தில் வரும் வாத்தியார்/எழுத்தாளரின் கதை கருவில் , நிஜமாகவே புத்தகம் ( தமிழில்) வந்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...