Friday, September 30, 2005

அழகாய் இருக்கிறாய்..பயமாய் இருக்கிறது

ங்கொப்புரானே..சத்தியமான உண்மைங்க இது.

ஏதோ தமிழ்ப் படத்தோட பேரு இந்தப் பதிவோட தலைப்பு . வெச்சவனுக்கு சத்தியமா லவ்வுன்னா என்னான்னு தெரிஞ்சுருக்குங்க. ரொம்ப நாளைக்கு முன்னாடி சுஜாதாவோட பிரிவோம் சந்திப்போம் முதல் பாகம் படிச்ச சமயத்தில - " கையை அப்பா உட்கார்ந்த நாற்காலியின் முதுகில் முட்டுக் கொடுத்து நின்று கொண்டிருந்தாள் மதுமிதா. நிலவின் தயவில் அழகாகத் தெரிந்த அவள் முகத்தைப் பார்த்து ரகுவுக்கு வயிற்றுக்குள் திடுக் என்றிருந்தது" என்று எழுதி இருந்த வாத்தியாரோட கைக்கு முத்தா குடுக்க வேண்டும் போல இருந்தது. அனுபவிச்சவனுக்கு தெரியுமே..!! மாட்டிக்கப்போறோமேன்னு நினைச்சுகிட்டே கிட்டக் கிட்ட போயி உழுவுற விஷயமுள்ள இது. அதனால்தான் மேற்சொன்ன படத்தலைப்பை கேட்டதும் அப்...புடி இருந்தது.

விஷயம் என்னன்னா, இப்போ பிரிவோம் சந்திப்போம் கதையே படமா வருதாம். "செல்லமே" காந்திகிருஷ்ணா எடுக்கறார்னதும் கொஞ்சம் கவலையா இருந்தது. செல்லமே சுவாரஸ்யமான படமென்று ஒத்துக் கொண்டாலும், நல்ல படமென்று சொல்ல முடியாதபடிக்கு கமர்ஷியல் ஜரிகை கொஞ்சம் தூக்கல்தான்.
பிரிவோம் சந்திப்போம் ஜீவன் கெடாதபடிக்கு எப்படி எடுக்கப் போறார்னு தெரியலை. முதல் பாகம் மட்டுமா..?? இல்லை ரகுபதி அமெரிக்கா வந்து மறுபடியும் மதுமிதாவை பாக்கற இரண்டாம் பாகமும் உண்டா..?? யார் யார் நடிப்பார்கள் என்று ஒரே ஆவல்.

என் Casting இது :

ரகுபதி - பரத் ( அல்லது தனுஷ்)
மதுமிதா - ஸ்ரீதேவி விஜயகுமார் ( அல்லது சந்தியா)
மதுமிதா அப்பா - தலைவாசல் விஜய்
ரகுபதி அப்பா - நாஸர்
ரகுபதி ஃப்ரெண்ட் ( கலா) - விவேக்
ரகுபதி அப்பாவின் செவிலி ( செல்வி..??) - ஈஸ்வரி ராவ்
ராதாகிருஷ்ணன் - "கனாக் கண்டேண்" பிருத்விராஜ்
ரத்னா - அஸின் அல்லது த்ரிஷா
ரத்னா அப்பா - டெல்லி கணேஷ்

உங்களுக்கு ஏதாவது தோன்றுகிறதா..??

இந்தப் பதிவு புரியவில்லை என்றால், "பிரிவோம் சந்திப்போம்" படிக்காத நண்பர்கள் மன்னிக்க என்றெல்லாம் சொல்ல மாட்டேன். மொதல்ல போய் படிங்கய்யா..:-)

6 comments:

  1. கொஞ்ச நாளைக்கு முன்னாலே, வாத்தியாரை உட்லாண்ட்ஸ் ஓட்டல்ல வெச்சு பார்த்தப்ப, பிரகாஷ்ராஜ், ' ஆ' வை திரைப்படமா எடுக்க்றதுக்காக கேட்டிருக்கார்னு சொன்னார். அங்கேயே எதிர்ப்புக் குரல் தெரிவிச்சேன். இப்ப பிரிவோம் சந்திப்போம்.. காந்திகிருஷ்ணாவா? விவரமான இயக்குனர் தான்... எப்படி வருதுன்னு பார்ப்போம். ஆனா, சுஜாதாவோட கதைகள்ளே, இதை விடவும் படமாக்க ஏதுவான கதைகள் இருக்கு... எல்லாரும் அவரோட பாப்புலரான கதைகளையே தேர்ந்தெடுக்கிறாங்க..

    ReplyDelete
  2. //பிரிவோம் சந்திப்போம்" படிக்காத நண்பர்கள் மன்னிக்க என்றெல்லாம் சொல்ல மாட்டேன். மொதல்ல போய் படிங்கய்யா..:-) //

    அது!!!!

    ReplyDelete
  3. சுஜாதாவின் பிரபலமான கதைகள் எல்லாம் படமாகி நொந்த வெறுப்பில் சொலிறீர்கள் போல :-). ஆனால் பிரபலமான கதைகள் படமாவதில் உள்ள ரிஸ்க் வாசகன் நினைத்தபடி படமாக்கம் ஆகாவிட்டால் அவனுக்கு கிடைக்கும் ஏமாற்றம் படத்தின் வெற்றியை பாதிக்குமே என்ற பயம். ஆனால் உண்மையில் அது வெற்றியை பாதிக்காது. ஏனெனினில் படம் பார்ப்பவர்களில் (கதை)வாசகர்களின் விழுக்காடு கம்மி. கதையை கொஞ்சம் முன்னே பின்னே மாற்றினாலும் சினிமா பார்க்க வந்தவர்களுக்கு பிடிக்கிற மாதிரி எடுக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். ஆனால் அதுக்காக ஓவரா மசாலா போட்டா சுஜாதாவுக்கே அது தன் கதையான்னு சந்தேகம் வர மாதிரி ஆயிடுது.

    பாப்போம். என் கைல மட்டும் யாராவது காசு கொடுத்தா, பிரிவோம் சந்திப்போமுக்கு அருமையா டீம் செட் பண்ணி பக்காவா எடுக்கலாம் :-)

    ReplyDelete
  4. //பரத் அல்லது தனுஷ்னா அதுக்கு படம் எடுக்காமலே இருக்கலாம். :((
    //

    'இளமை ஊஞ்சலாடுகிறது' வயசு கமல் கெடைச்சாக்க, ஒரு வேளை try செய்யலாம்... என்ன சொல்றீங்க? :-)

    ReplyDelete
  5. //ரத்னா - அஸின் அல்லது த்ரிஷா

    Thalai.. Navya Nair vendaama?! :))

    ReplyDelete
  6. haloscan comments :

    மதுமிதா -ஸ்ரீதேவி விஜயகுமார் ???
    மதுமிதா -சதா பரவாயில்லை!!
    aadhi | Email | Homepage | 10.05.05 - 2:04 pm | #

    --------------------------------------------------------------------------------

    சதாகிட்ட மதுவோட அப்பாவி/குழந்தைத்த்னம் கொண்டு வர்றது ரெம்ப கஷ்டம் ஆதி..
    மூக்கன் | Email | Homepage | 10.05.05 - 2:45 pm | #

    --------------------------------------------------------------------------------

    ஸ்ரீதேவி விஜயகுமார் :-( தக்காளி எங்கே? மஞ்சுளாவை 2005லும் மறுபடிப் பார்க்கத் தயாரில்லை நான்!! மதுமிதா பாத்திரத்துக்கு புதுமுகத்தைப் பிடிங்கப்பா! எப்போதோ ஒரு காலத்தில் படித்த கதை என்பதால் ஏதோ மெலிதாக நினைவிருக்கிறது, பல பாத்திரங்கள் நினைவில்லை. படித்த காலத்தில் துக்கம் தொண்டையை அடைத்தது என்னவோ நிஜம். முடிவை எதிர்த்து/மாற்றச்சொல்லி சுஜாதாவுக்கு ஏகப்பட்ட கடிதங்கள் வந்ததாகப் படித்த நினைவு - இந்தக் கதையா வேறேதுமா என்று தெரியவில்லை!
    சன்னாசி | Email | Homepage | 10.05.05 - 3:15 pm | #

    --------------------------------------------------------------------------------

    சன்னாசிப் பாம்பு,

    அதே..அதே..!!

    படிச்சா எனக்கு இப்பக்கூட துக்கம் தொண்டையை அடைக்குது
    மூக்கன் | Email | Homepage | 10.05.05 - 3:20 pm | #

    --------------------------------------------------------------------------------

    //மொதல்ல போய் படிங்கய்யா..//

    புத்தகத்துக்கு எங்கே போறதாம்?
    ஷ்ரேயா | Email | Homepage | 10.05.05 - 3:48 pm | #

    --------------------------------------------------------------------------------

    சுந்தர்,
    அந்தக் கதையின் பாதிப்பாலெதான் என் பொண்ணு பிறந்தப்ப அவளுக்கு 'மதுமிதா'ன்னு பேர் வச்சேன்.

    ரகு- தனுஷ்? ஊஹூம் வேணாம்ப்பா.

    மதுமிதா- சந்தியாவா? அய்யோ.....
    இன்னும் கொஞ்சம் யோசிங்களேன் ப்ளீஸ்
    Tulsi Gopal | Email | Homepage | 10.05.05 - 8:39 pm | #

    --------------------------------------------------------------------------------

    oyyy kadhai engoorla nadakkuthu adhanala anga thaan padap pidippu nathanum

    appa - Raguvaran
    Madhumitha - sridevi venamba...adhukku bathila vera yaara podalamnu theriyala...but andha kalama irundha Jeyapradha

    Easwari Rao - Romba sariyana thervu
    Dubukku | Email | Homepage | 10.06.05 - 3:39 am | #

    --------------------------------------------------------------------------------

    கருத்திட்டவர்களுக்கு நன்றி.

    யப்பா டு(டு)புக்கு, ரகுவரன் வாணாம்பா. அவர் ஓண்ணரை ரூபாக்கு நடிக்கிர ஆளு. அந்தாள் பேசி முடிக்கிறதுக்குள்ள படமே முடிஞ்சுடும்.

    துளசியக்கா, ஸ்ரீதேவின்னா மக்கள் அய்யோன்றாங்களே ஒழிய, சந்தியாவுக்கு எதிர்ப்புக்குரலே வரலை பாத்தீங்களா..??
    மூக்கன் | Email | Homepage | 10.06.05 - 10:15 am | #

    --------------------------------------------------------------------------------

    solla marandhutten..thikka thinaratha ozhunga pesara raguvaran.Seri venamana naasar irukkatum ana...kunashtai pannapidathu solliten

    Ama yoow yaruya sandhiya...yaaru indha kaathal la nadichha ponna?? puthi kettu poccha umakku?
    Dubukku | Email | Homepage | 10.07.05 - 5:02 am | #

    ReplyDelete

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...