Friday, June 04, 2004

மியூசியம் வெரைட்டி..??

===================

உனக்கேன் இந்த மாதிரி
ஆசையெல்லாம்...

என் வளையலை உடைப்பது,
கொலுசுத் திருகாணியைக்
கழற்றி விடுவது
கூந்தலில் இருக்கும் பூவைப்பறித்து உன்
கன்னத்தில் உரசிக்கொள்வது
காதில் தொங்கும் ஜிமிக்கியை
ஆடவிட்டு வேடிக்கை பார்ப்பது

ஆனால் ஒன்று
சின்ன வயதிலிருந்து
இந்தத் தோடு
வளையல்,பூ,கொலுசு
இதெல்லாம் எதற்காக
அணிந்து கொள்ளவேண்டுமென்று
யோசித்து யோசித்து
விடை தெரியாத கேள்விக்கு
உன்னால்தான்
விடை கிடைத்த மாதிரியிருக்கிறதெனக்கு

சின்ன வயதில் சில நேரங்களில்
வெட்கப்பட்டிருக்கிறேன் ஆனால்
அப்போது
வெட்கப்படுவதில் வெட்கப்படுவதைத் தவிர
வேறு எதுவும் இருந்ததில்லை
வேறு ஏதாவது இருக்கும் என்பதுகூட
அப்போதெனக்குத் தெரிந்ததில்லை
இன்றுமாலை
பேசிக்கொண்டிருக்கையில்
சட்டென்று நீ
என் கையை பிடித்து விட்டபோது
உன் கைக்குள் இருக்கும் என் கையை
இழுக்கத் துடிக்கும் என் பெண்மையிலும்
"வேண்டாம் இருக்கட்டும்" என்ற காதலிலும்
மாறி மாறித் தவித்த தவிப்பில்......
அப்பா...
வெட்கப்படுவதில்
என்னென்ன இருக்கிறது.



கவிதையில் காதோரம் குழல் கற்றைகள் அசைந்தாட, பிஸ்தா க்ரீன கலர் சூடிதாரோடு தெளிந்த விழிகளும், சின்னச் சிரிப்புமாக, கருப்பு ஸ்ட்ராப் வாட்ச்சோடு ஒரு பெண் தலை குனிந்து சிரித்துக் கொண்டிருப்பது உங்களுக்குத் தெரிகிறதா...???

தினம் ஒரு கவிதை யில் வந்த கவிஞர் 'தபு சங்கரின் " கவிதை.

தலைப்பு சத்தியமாய் அவர் கொடுத்த தலைப்பில்லை. என் கைங்கர்யம்.

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...