Tuesday, September 20, 2005

சொரணை

இந்த நெளிவு சுளிவுன்னு ஒரு சமாசாரம் இருக்கு. எல்லா சைடையும் தட்டி விட்டுகிட்டே, எல்லா சமரசத்தையும் பண்ணிகிட்டே, அப்படியே சைடுல பொழப்பையும் பாத்துக்கிறது. இலக்கியத்தோட வேற "ஏதும்" கலக்கும் முன்னாடி, இலக்கியவாதிகளும் எழுதுபவர்களும் நெளிவு சுளிவு இல்லாத ஏமாளியாகத்தான் இருந்தார்கள். எப்போ, மத்த கேட்டகிரி எல்லாம் இதுல எறங்கிச்சோ, அப்பவே தந்திரமும், ஆள்காட்டித்தனமும், தனக்குன்னு ஆள் சேத்துகிடுறதுக்காக எந்த லெவலுக்கு வேணா இறங்கறதும், மனசாட்சியைக் கயட்டி வெச்சுட்டு அதுக்கு விரோதமா ஜல்லி அடிக்க இறங்கறதும், இன்னமும் மத்த அலங்காரங்களும் சேந்துடுச்சி

கெவின், கெவின்னு எங்க ஆபீஸ்ல ஒரு ஆள். சரியான மண்டைன்னு மக்கள் சொல்லி கேள்விப்பட்டிருக்கேன். நான் அந்தளவு பழகினது இல்லை. நான் வரதுக்கு முன்னயே வேற டீமுக்கு போய்ட்டாராம். ஆனா பாக்கும்போதே கொஞ்சம் ரிசர்வ்டு டைப்புனு - முசுடுக்கு Euphemism - தோணற முகம். அவர் எழுதிவெச்ச ஷெல் ஸ்க்ரிப்டுதான் இன்னைக்கு வரை ஜே ஜேன்னு ஓடிகிட்டு இருக்கு.

ஆனா பாருங்க..அவருக்கு மேலே சொன்ன சமாசாரம் ப்ராப்ளம். நெளிவு சுளிவுங்கறதே சுத்தமா கிடையாது. அவருகூட சண்டை வராத ஆட்களை எங்க ஆபிஸ்ல வெரல் உட்டு எண்ணிடலாம். அதும் சாதாரண சண்டை கூட இல்லை. மனசுல வடு வர்ற மாதிரி சண்டை போடற ஆளு.

என்னாச்சு..எங்காபீஸ்ல ப்ராஜெக்ட் முடிஞ்சு வேற எடத்துக்கு வேலை தேடிப் போனார். இவருடைய மண்டை பவர் தெரிஞ்சாலும், attitude மகாத்மியம் தெரிஞ்சு யாரும் வேலை குடுக்காம கெவின்னாலே தலை தெறிக்க ஓட ஆரமிச்சுட்டாங்க.
நடுவுல இந்தாள் வீட்டை வித்து, பர்னிச்சர் வித்து, கார் எல்லாம் வித்து சாப்பிடற நிலைக்கு போய், இப்போ எங்கேயோ வால் மார்ட்டில வேலை பாக்கிறாராம்.

அதிகபட்சமா சொரணை இருந்தாலும் தப்பு, முதுகெலும்பே இல்லாம புழு மாதிரி அலையறதும் தப்பு. எனக்கு இப்பலாம் கோபம் அதிகமா வந்தா கெவினைத்தான் மனசுல நினைச்சுக்கிறது.

என்ன அறிவு இருந்து என்ன பண்ண..? மனசு தெளிவா இருக்கணும்ல...??

6 comments:

  1. சுந்தர்,
    அநேகமா ஒவ்வொரு ஆஃபீஸிலும் ஒருத்தர் 'கெவின்'மாதிரி இருந்துடறார்.

    ஜனங்களுக்கு உண்மையை(மட்டும்)
    பேசுறவனைப் பிடிக்காம் போயிருதோ?

    ReplyDelete
  2. ஹி..ஹி..

    "உண்மை" ங்கிர வார்த்தை கொஞ்சம் குழப்படியான வார்த்தை. உண்மை எப்பவுமே ரிலேட்டிவ் ஆனதுங்கிறாங்க.

    சரியா..??

    அது சரி...இருபத்து அஞ்சு மணிநேரமும் ப்ரவுசர்ல தமிழ்மணம்தானா..?? பாவம் அங்கிள்..:-)

    (அல்லது அங்கிளுக்கு ஜாலி !!!!:- :-) )

    ReplyDelete
  3. :-)))))

    //பாவம் அங்கிள்..:-)

    (அல்லது அங்கிளுக்கு ஜாலி !!!!:- :-) ) //

    ஊர்லே இல்லை.

    ReplyDelete
  4. //ஊர்லே இல்லை. //

    இருந்தா மட்டும்? ;O)

    உண்மையை (இனிப்பு) பூசி மெழுகித்தான் சொல்லணும். எப்பவுமே பொருளை/செய்தியைச் சுற்றியிருக்கிற wrapperதான் கண்ணிலே முக்கியமாப்படும். அது சரியா இருந்தால் உள்ளடக்கம் எப்படி வேண்டுமாயும் வைத்துக் கொள்ளலாம்.

    ReplyDelete
  5. இதைத்தான்`மூக்குமேலெ கோபம்'னு சொல்ற்து!

    ReplyDelete
  6. தாணு, யாரு மூக்கு மேல..? :-)

    ReplyDelete

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...