Monday, September 19, 2005

கிழட்டு அனுபவங்கள் - மலேசியத் தொடர்

பெற்றோர்கள் ஊருக்குப் போன அலுப்பில் இருந்த நான், அமெரிக்க வாழ்க்கை ஏற்படுத்தும் தம்னிமை உணர்வையும், ஊருக்குப் போய் விடலாமா என்று தோன்றுவது பற்றியும் எழுதி இருந்தேன். கடந்த நூறு வருடங்களாக மலேசிய மண்ணில் செட்டில் ஆகி இருக்கும் என் நண்பர் அதற்கு எழுதிய பதில், அவர் வார்த்தைகளிலேயே "கிழட்டு அனுபவங்கள்" என்ற தொடராக உருப்பெற்று விட்டது.

இனி " மலேசியா" ராஜசேகரன் பேசுகிறார் .....

நீங்கள் நினைப்பதுபோல் நாங்கள் (நானும் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த, மலேசியாவில் உள்ள 500 உறவினர்களில், 90 விழுக்காட்டினரும்) இங்கு NRI ஆக இருப்பதில் ஒன்றும் பெரிதாய் பெருமிதம் கொள்ளவில்லை.

மலேசியாவில் இன்னமும் நாங்கள் second class citizens தான். இங்கு முதல் சலுகை bumiputra என்று அழைக்கப் படும் மலாய் இனத்தவருக்குத் தான். ஆனால் சமீப காலமாக அவர்களுக்கு கொடுக்கப் படும் சலுகை அளவு கடந்து போய்க் கொண்டிருக்கிறது. யுனிவர்சிட்டி நுழைவுத்தேர்வில் துவங்கி , கல்லூரி பரிட்சை வரை, அவர்களுக்கு வேறு படிப்பு முறை வேறு பரிட்சை, மற்ற இனத்தவருக்கு வேறு பரிட்சை. இரண்டு பரிட்சையின் தரங்களிலும் மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம். எங்களது மலை, அவர்களது மடு.

அதேபோல் அரசாங்க உத்தியோகம். அரசாங்க உத்தியோகத்தில் 90 விழுக்காட்டினர் மலாய் இனத்தவர். அப்படியே மற்ற இனத்தவர் அரசாங்க ஊழியராக இருந்தால், அவர் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும், அவருக்கு் பதவி உயர்வு ஒர் அளவுவரைதான். போலீஸ் ஆபிசராக இருந்தால் மிஞ்சி மிஞ்சிப் போனால் Deputy Commissioner of Police வரை செல்லலாம். நீங்கள் முட்டி மோதி, வருடக்கணக்கில் அலைந்து திரிந்து, ஒரு கம்பெனியை நிறுவி, கஷ்டப்பட்டு்் பப்ளிக் லிஸ்ட்டிங் வரை கொண்டு வந்து விட்டீர்கள் என்று வைத்து கொள்வோம். உங்கள் கம்பெனி பப்ளிக் லிஸ்ட்டிங் ஆகவேண்டுமேயானால், உங்கள் கம்பெனியில் ஒரு bumiputra பங்குதாரரை் 30% ்ஸ்டாக் ஷேர்ஹோல்டராக முதலில் நீங்கள் சேர்த்துக் கொண்டு இருக்க வேண்டும். இது சட்டம்.

வீடுகள் வாங்கையில்் bumiputra க்களுக்கு 5% லிருந்து 7% வரை டிஸ்கவுண்ட் வீட்டுப் ப்ரமோட்டர் கொடுத்து ஆக வேண்டும். இதுவும் சட்டம். உங்கள் லிஸ்டட் கம்பனியில், தலைமைத்துவத்திலிருந்து, பியூன் வேளை வரை 30% ஸ்டாஃப் bumiputra க்களாக இருக்க வேண்டும். இல்லையேல் லேபர் டிபார்ட்மெண்டிலிருந்து உங்களுக்குத் தொல்லை வரும். யுனிவர்சிட்டியில் 75% ம், அரசாங்க ஸ்காலர்சிப்களில் 95% bumiputra க்களுக்கு கொடுக்கப் படுகிறது. திறமைக்குத்தான் யுனிவர்சிட்டியில் இடம் என்ற நிலை இருந்தால், bumiputra ்க் க்களுக்கு 20% ் இடம்கூட கிட்டாது. இதன் காரணமாகத்தான் எங்களைப் போன்றோர், சொந்த செலவில் (சில சமயங்களில் வீடு வாசலை விற்று) பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிப் படிக்க வைக்கிறோம்.

ஆனால் இவ்வளவிலும், மலேசியாவில் உள்ள சீன இனத்தவர்களோடு ஒப்பிடுகையில், நாங்கள் (மலேசியாவில் உள்ள இந்திய இனத்தவர்கள்) எவ்வளவோ கொடுத்து வைத்தவர்கள். இங்குள்ள இந்தியரைவிட , சீனர்கள் எல்லா விதத்திலும் சிறந்தவர்கள் (ஏன் என்பத்ற்கு ஒரு புத்தகமே எழுதலாம். வேறோரு நாள் இதனை விவாதிக்கிறேன்). நம்மில் 10ல் இருவர் தகுதியானவராக இருந்து bumiputra பாலிஸியால் பாதிக்கப் படுவோம். ஆனால் சீன இனத்தவரில் 10ல் எட்டுப் பேர் தகுதியானவர்களாக இருப்பார்கள். பாதிக்கப் படுவார்கள்.

என்ன இந்த மனுஷன், சம்மந்தமில்லாத எதை எதையோ எழுதுகிறாரே என்று நினைக்காதீர்கள். இதுவும், இனி நான் எழுதப் போகும் பல விசயங்களும்், நீங்கள் கூறினீர்களே "கடைசியாக அமெரிக்காவிலேயே இருப்பதா, இந்தியா திரும்புவதா என்ற டிலைமாவில் மாட்டிக் கொண்டு இருப்பதாக". அது குறித்தவைதான். 100 வருடங்களாக வெளிநாட்டில் வசித்து வந்துள்ள ஒரு சிந்திக்கக் கூடிய இந்திய குடும்பத்து அங்கத்தினன் என்ன கூறுகிறான் என்பதை நீங்கள் தெரிந்துகொள்வது் ் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சிறந்த முடிவுகள் எடுக்க உறுதுணையாக இருக்கும்

5 comments:

  1. கண்டிப்பாக தெரிந்துகொள்ளவேண்டிய தொடர்... நண்பருக்கும், உங்களுக்கும் நன்றி. தொடருங்கள்...

    ReplyDelete
  2. சுந்தர்,

    இது கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டிய விஷயம்.

    இந்தியாவுக்குத் திரும்பறதா வேணாமான்னு மனசுலே ஓடிக்கிட்டு இருக்கறதுக்கு எதாவது தெளிவு, இதுமூலமா கிடைக்குதான்னு பார்க்கணும்.

    ReplyDelete
  3. //இங்குள்ள இந்தியரைவிட , சீனர்கள் எல்லா விதத்திலும் சிறந்தவர்கள் (ஏன் என்பத்ற்கு ஒரு புத்தகமே எழுதலாம். வேறோரு நாள் இதனை விவாதிக்கிறேன்).//

    இந்த வரிகள் என் ஆர்வத்தைத் தூண்டுகின்றன. சீனர்கள் கடும் உழைப்பாளிகளென்று கேள்விப் பட்டிருக்கிறேன். உங்கள் நண்பரின் கருத்தின்் வாயிலாகக் கிடைக்கக் கூடிய நேரடி விவரத்தை அறிய விரும்புகிறேன்.

    ReplyDelete
  4. நல்ல தொடர். ஆர்வத்தை தூண்டுகிறது. நன்றி உங்கள் நண்பருக்கும் அதை பதிவு செய்யும் உங்களுக்கும்.

    ReplyDelete
  5. கருத்திட்ட தோழமைகளுக்கு நன்றி.

    சீனர்கள் கடும் உழைப்பாளிகள் என்பது Mainland சீனர்களுக்கு, மேலைத்தேசத்தில் குடியேறாதவர்களுக்கு என்பது வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம். மற்றபடி அமெரிக்காவில் சீனர்கள் இந்தியர்களைப் போலத்தான். இன்னமும் சொல்லப்போனால் க்ரியேட்டிவிட்டி என்பது கம்மி. சேணம் கட்டிய குதிரையைப் போல ஒரே மாதிரியான வேலையையே காலகாலத்துக்கும் அலுக்காமல் செய்து கொண்டிருப்பார்கள். அதற்கு மனுசப்பயல் எதற்கு..?? மெஷின் போதாதா..?

    ReplyDelete

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...