Tuesday, September 20, 2005

கிழட்டு அனுபவங்கள் - மலேசியா ராஜசேகரன்



இதுவரை படிக்காதவர்களுக்காக - முதல் பகுதி

பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசியில் தான் இந்தியாவிலிருந்து தமிழ் பேசும் மக்கள் மலாயாவிற்கு பிரிட்டீஷ்காரர்களால் இங்கு உள்ள ரப்பர் எஸ்டேட்டுகளில் வேலை செய்வற்காக கொத்தடிமைகளாக கொண்டுவரப் பட்டனர். ஒரு மேஜயை போட்டு 'விருப்ப பட்டவர்கள் மலாயா போவதற்கு பதிந்து கொள்ளலாம்' என்று பிரிட்டீஷ்காரர்கள் தங்களின் முதல் ஆள்சேர்ப்பு வேலையை மேற்கொண்டதே மதராஸ் துறைமுகத்தில்தான்

இப்படி வந்தவர்கள் எத்தகைய மக்களாக இருந்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள் ? பொருளாதாரம் என்று எதுவுமே இல்லாதவர்களும், தாழ்த்தப் பட்டவர்கள் என்று ஒதுக்கப் பட்டவர்களும், குடும்பம் குட்டி என்று பாரம்பரியம் எதையும் சுட்டி காட்ட முடியாதவர்களும் தான் வந்தவர்களில் பெரும்பாலோர். அதனால்தான் இன்றளவிலும் இந்தியர்கள் உலகம் முழுவதிலும் 96 நாடுகளில் குடியேறி நல்ல பொருளாதார நிலைகளில் இருந்தாலும், மலேசியாவில் உள்ள இந்தியர்கள் மட்டும் நலிந்து போய் கிடக்கிறார்கள். காரணம் அடிப்படையிலேயே இங்கு வந்து சேர்ந்த தமிழ் இனத்தின் தரம் சிறிது கம்மியானதாகப் போனதனால் தான்.

மலேசியாவில் சிறையில் உள்ளவர்களில் 45% இந்தியர்கள், டொமெஸ்டிக் வயலன்ஸ் கேஸ்களில் 20% இந்தியர்கள், போதைப் பித்தர்களில் சுமார் 20% இந்தியர்கள், பிச்சைக்காரர்களில் 45% இந்தியர்கள், கொடுர குற்றங்கள் புரிபவர்களில் 40% இந்தியர்கள், கேங்க்ஸ்டர்களில் 55% இந்தியர்கள், விகிதாச்சாரப் படி அதிகமான தற்கொலைகளும் இந்திய சமூகத்தில்தான் நடக்கின்றது.

ஆனால் மலேசியப் ஜனத்தொகையில் இந்தியர்கள் எத்தனை விகிதம் என்று நினைக்கின்றீர்கள் ? வெறும் 7.7 % மட்டும்தான். மலேசியப் பொருளாதாரத்தில் இந்தியர்களின் பங்குரிமை எத்தனை விகிதம் என்று நினைக்கின்றீர்கள் ? வெறும் 1.5 % மட்டும்தான். அதிலும் Twin Tower கட்டிய ஆனந்த கிருஷ்ணன் ஒருவரை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், இந்தியரின் பங்குரிமை இங்கு 1.0 % குறைவாகத்தான் இருக்கும்.

இங்கு சராசரியாக இந்தியன் என்பவனை மற்ற இனத்தவர் யாருமே மதிப்பதுமில்லை, சட்டை செய்வதுமில்லை. நான்கு அல்லது ஐந்து இந்திய இளஞர்கள் ஒன்றாக ஒரு பொது இடத்திற்குச் சென்றால், மற்ற இனத்தவர்கள் அவர்களைப் பார்த்து ஒதுங்கி விடுவார்கள். இதுதான் தமிழர்களின் நிலை. இதுவரை நான் சொன்னதெல்லாம் தமிழ் இனத்தவருக்கே பெரும்பாலும் பொருந்தும். இந்தியர்களில் இவர்கள் 80% விழுக்காடு இருக்கிறார்கள்.

தமிழர்களைப் போலவே மலையாளிகலும், தமிழ் பேசும் சிலோன் காரர்களும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசியில், பிரிட்டீஷ்காரர்களால் கொண்டு வரப்பட்டார்கள். ஆனால் இவர்கள் கொத்தடிமைகளாக வரவில்லை. கொத்தடிமைகளாகக் கொண்டு வரப்பட்ட தமிழர்களை மேய்த்து மேற்ப்பார்வை செய்வதற்காக, இயல்பான சம்பளத்திற்கு வேலை செய்யும் வேலைக்காரர்களாக கொண்டு வரப்பட்டார்கள். இப்படி கொண்டு வரப்பட்டவர்கள் படித்தவர்களாகவும், ஆங்கிலம் பேசத் தெரிந்தவர்களாகவும், மேல் ஜாதிக் காரர்களாகவும் இருந்தார்கள். இதனால் இந்த நாட்டில் இருக்கும் மலையாளிகளுக்கும், தமிழ் பேசும் சிலோன் காரர்களுக்கும் இன்றளவிலும் ஒரு 'சுப்பிரியோரிட்டி காம்ப்ளெக்ஸ்' இருந்து கொண்டே இருக்கிறது. மேலும் தமிழர்களை விட இந்த இரண்டு பிரிவினர்களும் எல்லா வகையிலும் சிறப்பாகவே இருக்கின்றனர். (TWIN TOWERS கட்டிய ஆனந்த கிருஸ்ணன் ஒரு சிலோன் காரர்).இந்தக் கோஷ்டிகளெல்லாம் போக பஞ்சாபி இனத்தவர்கள் போலீஸ்காரர்களாகவும், நாட்டுக் கோட்டை செட்டியார்கள், குஜராத்திகள், சிந்திக்கள், தமிழ் முஸ்லீம் இனத்தினர் ஆகியோர் வியாபாரிகளாகவும் இந்த நாட்டுக்கு வந்தார்கள். இவர்கள் எப்படி உள்ளார்கள் என்பதை பிறிதொரு நாள் கூறுகிறேன்.

அடுத்த கிழட்டு அநுபவங்கள் தொடரில் மலேசியாவில் தமிழ் இனத்தவர் இவ்வளவு பின் தங்கி இருக்க பூர்வாங்க காரணங்களை அலசி பார்க்க முயலுகிறேன்.


ஏதோ சொல்லத் தொடங்கி ராஜசேகரன் வேறு ஏதோ சொல்லிக் கொண்டு போகிறார் என்று நினைக்காதீர்கள். நான் எங்கிருந்து வருகிறேன் என்பதை அறிந்தால்தான், எங்கு இட்டுச் செல்கிறேன் என்பது உங்களுக்குப் புரியும். ஆதலால் பொருத்திருங்கள் ..... நான் முன்பு சொன்னதுபோல் உங்களின் 'அமெரிக்காவா..இந்தியாவா' என்ற டிலைமாவை வேறொரு கண்ணோட்டத்திலிருந்து ஆராய என் அநுபங்கள் நிச்சயம் உங்களுக்கு ஒரு பாடமாக அமையும்.

4 comments:

  1. //ஏதோ சொல்லத் தொடங்கி ராஜசேகரன் வேறு ஏதோ சொல்லிக் கொண்டு போகிறார் என்று நினைக்காதீர்கள். நான் எங்கிருந்து வருகிறேன் என்பதை அறிந்தால்தான், எங்கு இட்டுச் செல்கிறேன் என்பது உங்களுக்குப் புரியும். ஆதலால் பொருத்திருங்கள் ..... நான் முன்பு சொன்னதுபோல் உங்களின் 'அமெரிக்காவா..இந்தியாவா' என்ற டிலைமாவை வேறொரு கண்ணோட்டத்திலிருந்து ஆராய என் அநுபங்கள் நிச்சயம் உங்களுக்கு ஒரு பாடமாக அமையும். //

    அப்படியெல்லாம் நினைக்கவில்லை ராஜசேகரன்.

    நன்றாகத் தொடங்கி இருக்கிறீர்கள். இப்போதுதான் உங்களுடைய முதலாவது பதிவைப் படித்தேன். பல கேள்விகள் மனதில். ஒவ்வொன்றாக எழுதுவீர்கள் என்ற நம்பிக்கையும் மனதில் வந்தது.

    தொடர்ந்து எழுதுங்கள் - விரிவாக இப்போது எழுதுவதைப்போலவே!

    -மதி

    ReplyDelete
  2. ராஜசேகரன் ஸார்,

    உங்களுக்கு நன்றி.

    பெர்ய பெர்ய மன்சாள்லாம் நம்ம பேட்டைக்கு வர வச்சிட்டீங்களே..:-)

    மதி..just kidding. தொடர்ந்து வாங்கிப் போடுகிறேன். அவர் எழுதி பழக்கப்பட்டவுடன் தனிப் பதிவே ஆரம்பித்துக் கொடுத்து விடுகிறேன். நீங்கள் எனக்குப் பண்ணியதை நான் அவருக்கு பண்ண வேண்டாமா..?? :-)

    ReplyDelete
  3. சுந்தர்,

    இவுங்களையாவது'மலேயா போக விருப்பம் இருந்தா பதிந்து கொள்ள' சொல்லியிருக்காங்க.

    ஆனா ஃபிஜி இந்தியர்களை ஒண்ணுமே சொல்லாம வேலை வேணுமான்னு மட்டும்( எங்கேன்னு கூடச் சொல்லாம)கேட்டுக் கூட்டிட்டு வந்துட்டாங்களாம்.

    எத்தனை பேரு குடும்பம், குழந்தைன்னு பிரிஞ்சு வந்தவுங்க. பாவம் இல்லையா?்

    ReplyDelete
  4. துளசியக்கா,

    "பசி வந்திடப் பத்தும் பறந்து போம்"

    ReplyDelete

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...