Tuesday, October 25, 2005

ரோசா..ரோசா..


அமெரிக்காவில் நிறவேறுபாட்டை எதிர்த்து குரல் கொடுத்த முதல் கறுப்பின பெண்மணி ரோசா பார்க்ஸ் நேற்று காலமானார். அவருக்கு வயது 92.
அமெரிக்காவில் கறுப்பின மக்களின் எழுச்சிக்காக போராடியவர்கள் என்ற முறையில் எப்போழுதும் மார்ட்டின் லூதர் கிங்கையும், ஆப்ரஹாம் லிங்கனையும்தான் கேள்விப்பட்டிருக்கிறேன். அரசியல் ரீதியாக இவர்கள் பங்களிப்பு என்றால், சமூகரீதியில் தன்னுடைய எதிர்ப்புக் குரலை பதிவு செய்தவர் ரோசா.

இன்றைக்கு ஐம்பது வருடங்களுக்கு முன்பு லூசியானா மாநிலத்தில் உள்ள பேட்டன் ரூஜ் என்ற இடத்தில் தையல்கடையில் பணிபுரிந்து வந்தார் ரோசா. தன்னுடைய பணிமுடிந்து வீட்டுக்குத் திரும்ப பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். ஒரு ஐரோப்பியருக்கு உட்கார இடம் தர மறுத்து, தொடர்ந்து அமர்ந்தே பிரயாணம் செய்து "புரட்சி" செய்தார்.

இன்றைக்கு இதை புரட்சி என்று சொன்னால் கேட்பதற்கு வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் ஐம்பதாண்டுகளுக்கு முன் நிறத்துவேஷம் தலை விரித்தாடிக் கொண்டிருந்த காலகட்டங்களில் அது நிஜமாகவே புரட்சிதான். கறுப்பின மக்கள் வயது வித்தியாசம் இல்லாமல் பலவித அடக்குமுறைகளை சந்தித்துக் கொண்டிருந்த காலமது. முன்வழியாக ஏறித்தான் இங்கே பஸ்ஸில் டிரைவரிடம் டிக்கெட் வாங்கி விட்டு உள்ளே வர வேண்டும். ஆனால் கறுப்பின மக்கள் மட்டும் முன்னே டிக்கெட் வாங்கி விட்டு, கீழே இறங்கி பஸ்ஸின் பின்புற கதவு வழியாக உள்ளெ நுழைய வேண்டுமாம். சில சமயங்களில் பஸ் டிரைவர் அவர்களை ஏற்றிக் கொள்ளாமலேயே பஸ்ஸை எடுத்து விடுவாராம்.

இந்த சம்பவத்திற்கு பிறகு தனிப்பட்ட முறையில் ரோசா சந்தித்த கொடுமைகள் அநேகம். பலமுறை பஸ்ஸில் இருந்து அவர் வெளித்தள்ளப்பட்டிருக்கிறாராம். பஸ் டிரைவருடன் பலமுறை வாக்குவாதங்கள். ஆனால் பின்னாளில் மார்ட்டின் லூதர் கிங் தலைமையில் அலபாமா மாகாணத்தில் மாண்ட்கோமரியில் நடந்த பஸ் புறக்கணிப்பு போராட்டத்திற்கு விதையாக இதுவே அமைந்தது

இணையத்தில் அவரைப் பற்றி விக்கியது இது

கிளிண்டன் அதிபராக இருந்த போது, 1992 ஆம் வருடம் ரோசா அம்மையாருக்கு Congressational Gold Medal of Honor வழங்கப்பட்டது.

இவருடைய வாழ்க்கையை ஹாலிவுட் படமாக எடுத்தது. நிறவேறுபாட்டை எதிர்த்து குரல் கொடுத்த வீராங்கனையின் வாழ்வில், பின் என்ன நிகழ்ந்தது என்று கண்டுகொள்ளாத உலகத்துக்காக, அந்த அம்மையாரின் வாழ்க்கையை நுணுக்கமாக பதிவு செய்ய நினைத்ததன் வெளிப்பாடு என்பதாக சொல்கிறது ( நான் இன்னும் பார்க்கவில்லை)

அது சரி..?? பெயர்க்காரணம் இதுதானா..?? :-)

7 comments:

  1. ஞே...??!!!!

    சந்திரமுகின்னாலே மர்மம்தானா..??

    ReplyDelete
  2. Sundar,

    Watch 'The Long Walk Home' too if you get a chance.

    Sissy Spacek and Whoopi Goldberg have acted in it.

    -Mathy

    ReplyDelete
  3. ஆதி ..விளக்கத்துக்கு நன்றி. சந்திரமுகி ரொம்ப "சுருக்கமா" சொன்னதால, இந்த மடையனுக்கு வெளங்கலை.

    ஹாலோஸ்கான் வசதியை எடுத்தை சொல்றீங்களா..?? பத்ரி ச்ஜ்ஜஷன். எனக்கு வரக்கூடிய நூற்றுக்கணக்காண பின்னூடங்களை ட்ராக் பண்ண் முடியுமேன்னு நானும் நீக்கிட்டேன்.அது சரி..உங்களுக்கு எதுக்கு அனானி வசதி.

    நீங்களும் ஏதும் திட்டப்போறீங்களா என்னை..?? :-)

    ReplyDelete
  4. Check your third and fourth sentences. It gives meaning that Rosa's protest came before Abraham Lincoln :-)

    ReplyDelete
  5. சுந்தர், இப்போதுதான் பார்தேன். பதிவுக்கு முதலில் நன்றி. விவாதிக்கும் அளவிற்கு பெயர் காரணம் அவ்வளவு முக்கியமில்லாவிட்டாலும், ஆமாம், அது ரோஸா லக்சம்பர்க்தான்! ஆதி, ச்ந்திரமுகி நன்றி!

    ReplyDelete

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...