Tuesday, May 18, 2004

வெளிப்பாடு

===========

முட்டையை உடைத்துக்கொண்டு
வெளியேறுகிறது
பறவைக்குஞ்சு

அத்துடன்
அதன் எல்லாத் தளைகளும்'
காத்திருத்தல்களும்
முடிவுக்கு வருகின்றன

நானும்
என் மேலோட்டை உடைக்க
நீண்டகாலமாய்
போராடி வருகிறேன்

இயற்கைக்கு புறம்பாக
அது
உருக்கினால் அமைந்திருக்கிறது

கடைசியில்
சில தட்டுமுட்டுச் சாமான்களையும்
நியாயங்களையும்
ஏற்பாடு செய்துகொண்டு
அங்கேயே தங்கிவிடுகிறேன்

எங்கேனும்
ஒன்றிரண்டு அக்கினிக்குஞ்சுகள்
வெளியேறி வரலாம்.




எல்லாருடைய ஏக்கத்தையும் யதார்த்தமாய் பதிவு செய்கிறது இக் கவிதை - மிக எளிமையாக.கடைசி வரிகளில் தேம்பும் இயலாமையோடு. சமீபத்தில் மரத்தடியில் பதில் சொன்ன இவர், சமஸ்கிருதப் பெயர் வைத்த இசுலாமியக் கவிஞராக குசும்பர்களால் பே(ஏ)சப்படுகிறார்.

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...