Friday, May 28, 2004

என்ஜாய் சுந்தரா.....
====================

மீட்டிங் என்றாலே அயல்நாடுகளில் பணிபுரியும் - குறிப்பாக - கணிப்பொறிக் கூலிகளுக்கு தெரியும் என நினைக்கிறேன். 15-20 பேர் ஒரு ஹாலில் கூடி, காஃபியும், ஜோக்குமாக வேண்டாத கதைகள் பேசி, பேச வந்த விஷயத்தையே மறந்து கூத்தடித்து விட்டு , கடைசியில் யாராவது கன்சல்டன்ட் தலையில் எல்லா வேலைகளையும் கட்டிவிட்டு , அடுத்த வெகேஷனை ப்ளான் பண்ணப்போவது வழக்கம்.அதிலும் அமெரிக்கர்கள் அதிகம் உள்ள குழு என்றால் கேட்கவே வேண்டாம். ஏதாவது இந்திய/சீன பலிகடா மஞ்சள் தண்ணீர் தெளிக்கப்பட்டு தலையாட்டிக் கொண்டே இருக்கும். வீக் எண்டோ, இரவு நேரமோ அந்த ஆட்டுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை. தன்னுடைய தேவை குழுவுக்கு அதிகமாக இருப்பதே அந்த ஆட்டின் பெருமையாகிப் போய், இழுத்துப் போட்டுக் கொண்டு வேலை செய்யும்.

கடந்த 20 தினங்களாக இந்த ஆட்டின்..ஸாரி...என் வேலையும் அப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது. குழுவில் பணிபுரியும் இன்னொரு நண்பர், தன்னுடைய வருடாந்திர லீவுக்கு இந்தியா செல்கிறார். அவர் இல்லை என்றால் குழு கருணாநிதி இல்லாத திமுக மாதிரி. மிச்சம் இருக்கும் அமெரிக்கத் தாத்தாவுக்கு மெயில் போடத் தெரியும். மீட்டிங் போகத் தெரியும், ஜோக்கடிக்கத் தெரியும். பணிபுரியும் Calpers , அதிகம் பணம் புழங்கும் கலிஃபோர்னியா அரசுத் துறைகளில் ஒன்று. அதனால் சப்போர்ட் தேவைகள் அதிகம். தினமும் 650 பயனாளர்கள் உபயோகிக்கும் என்டர்ப்ரைஸ் அப்ளிகேஷன். அதனால் மூக்கன் ஜூன் மாதம் முழுக்க படாதபாடு படப் போகிறான். கவலைப் பட்டு ஒன்றும் ஆகப்போவதில்லை.

If Rape is inevitable, Relax and Enjoy...!!

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...