Tuesday, May 18, 2004

மனமாரப் பாராட்டுகிறேன்
=======================

ஜெ வின் அதிரடி அறிவிப்புகள் மூலம் இந்த பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளில் அபார வெற்றி பெற்ற ஒரே வேட்பாளராகி இருக்கிறார் - அதுவும் போட்டி இடாமலேயே.

042355ma

ஜெ யின் சிறப்பு குணங்களாக எத்தனையோ சொல்லப்பட்டிருந்தாலும், இது நாள்வரை அதையெல்லாம் தன் அகம்பாவத்தாலும், ஆணவத்தாலும், திமிர்க்குணத்தாலும் கெடுத்துக் கொண்டு வந்திருக்கிறார். எத்தனை தண்டனைகள் வழங்கப்பட்டாலும், நீதிமன்றத்தால் குட்டப்பட்டாலும், ப்த்திரிக்கைகளால் விமர்சிக்கப்படாலும், எதைப் பற்றியும் கவலைப்படாமல், தன்னம்பிக்கை என்பதை தவறாய் புரிந்து கொண்டு, அந்த நூலிழை வித்தியாசத்தை கடந்து, தலைக்கனத்தோடு சுற்றி வந்திருக்கிறார். முதன்முறையாக மக்கள் தீர்ப்புக்கு தலைவணங்கி, தன்னை திருத்திக்கொள்ள, யாருமே எதிர்பார்க்காத அளவில் எனக்கெல்லாம் இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். இது திமுக தலைமைக்கு, கருணாநிதியின் காலத்திற்கு பிறகு அவர் இடத்தை பிடிக்க நினைக்கும் வைகோ மற்றும் ஸ்டாலினுக்கு, பாமக என்ற ஜாதீயக் கட்சியை வைத்து தோள் தட்டும் ராமதாஸுக்கு கிலியை கிளப்பியிருக்கும் ....சந்தேகமே இல்லை.

மக்களுக்காக ஆட்சி என்ற வாக்கியத்தை தாரக மந்திரமாக கொண்டு அவர் செயல்படுவாரேயானால், அவர் துணிவுக்கும், அறிவுக்கும், வேகத்துக்கும், அவருக்கு அரசியலில் இன்னமும் சொச்சம் இருக்கும் காலத்துக்கும் அவர் மிகப்பெரிய சக்தியாகி, தமிழகத்தை, தன்னை, தான் சார்ந்துள்ள அதிமுகவை, வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்வார் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. இந்த முடிவை, " அடுத்த தேர்தல் வரை " என்று வர்ணித்த பாராவைப் போல நான் யோசிக்க விரும்பவில்லை. கொஞ்சம் ஆப்டிமிஸ்டிக்காக இருக்கலாம் என நினைக்கிறேன்.

அவருக்கு இந்த யோசனையை கொடுத்த புண்ணியவான் - பச்சை ஸஃபாரி ட்ரஸ்ஸோடு, பைப் பிடித்துக் கொண்டு, மொட்டைத் தலையோடு, பிஷப் வாலர்ஸ் அவென்யூவில் நக்கல் சிரிப்பு சிரித்துக் கொண்டே - நன்றாய் இருக்கட்டும்.

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...