Sunday, May 23, 2004

சூரியனுக்கே டார்ச் லைட்
========================

இந்த வாரம் என்னுடைய இன்னுமிரண்டு நண்பர்கள் வலைப்பூவுக்கு வந்திருக்கிறார்கள். ஒருவனை லேட்டாகப் பார்த்த தவறு என்னுடையது.

வந்தியத்தேவன் :

ரொமாண்டிக்கான பிம்பத்தை உருவாக்கும் இந்தப் பெயருக்கு உரிய ஆசாமிக்கு கல்யாணம் ஆகி, குந்தவையுடன் குடித்தனம் செய்கிறான் அரிசோனாவில். வேலைப் பார்ப்பது "பெரிய நீலத்திற்கு". திருக்குமர மகேந்திரன், முத்தமிழ் மகரந்தன் ஆகியவர்களை பெற்றெடுத்த அனிச்சமலர், இந்த வந்தியத்தேவனின் குந்தவை என்றால் இவனுடைய தமிழ் (வா)நாக்கு பற்றி கொஞ்சம் விளங்கும் என்று நம்புகிறேன். போதாதவர்கள் , இவன் இயற்பெயர் திருஞானசம்பந்தம் என்பதறிக.
கல்லூரியிலேயே கவிதை எழுதியவன். இவன் எங்கள் கல்லூரி பத்திரிக்கை சங்கமத்தில் எழுதிய "தேர்தல்" கவிதை அன்றிரவு என் தூக்கம் தொலைத்தது. என்னைப் போலவே உணர்ச்சிவசப்படும் ஆசாமி. "வெடித்தவுடன் (ப)(ம)றந்து போகும் வெண்பஞ்சுக்காய்" என்று அவனே சொல்கிறபடி. "என் மன வானில்' ராஜ்குமாரும் இவனும் ஒரு ஈட்டுப் பிள்ளைகள். இவனை இங்கே படிக்கலாம்.

அநாமிகா :

பெயர் சொல்லும் சேதி இவனுக்கு முற்றும் பொருந்தும். "ச்சுப்பா ருஸ்தம்" "மிண்டா பூச்சா ' போன்ற வேற்றுமொழி சொற்களுக்கு அர்த்தம் தெரிந்தவர்களுக்கு இவன் குணம் விளங்கும். ஆர்ப்பாட்டமில்லாத ஆள். இவன் கோபம் வெளியே தெரிந்து ஒரு முறைதான் பார்த்திருக்கிறேன். ( போதும் என்று நினைத்துக் கொண்டேன் !!!! ). மைக்ரோசா·ப்ட் ஆசாமி, சியாட்டில் நகரில் வேலை பார்க்கிறான். செல்வங்கள் சுந்தர், மீனா ஆகியோருடன் அமுத வாழ்க்கை வாழ்கிறான். கருணையும் கனிவும் உள்ள அறிவு ஜீவி. இவனுடனான சமீபகால தொலைபேசி உரையாடல்களில் சற்றே அவசரம் தொனிக்கும் இவன் குரல் தந்த சேதியில், இவனுக்கு வலைப்பதிய நேரமிருக்காது என்று வலைப்பதிவுக்கு அழைக்காமல் வாளாவிருந்து விட்டேன். பழம் தானே கனிந்து விட்டது. இதைச் சுவைக்க
இங்கே செல்லலாம்.


No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...