Tuesday, November 23, 2004

பிரபஞ்சன் தொடங்கி அந்துமணி வரை ....

கல்லூரி முடிந்த மூன்று வருடங்களில் இணையத்தில் ஒரு ஈமெயில் சுற்றிக்கொண்டிருந்தது. அமெரிக்கா செல்ல, ஆந்திர தேச மக்களுக்குப் பிறகு நம்மவர்கள் ஆர்வம் காட்டிய சமயம் அது. பொதுவாகவே கேரள மக்கள் மத்தியக்கிழக்கு நாடுகளுக்கும், தமிழக மக்கள் சிங்கப்பூர்/ மலேசியாவுக்கும், ஆந்திர மக்கள் அமெரிக்கா நாடுகளுக்கும் அதிக அளவில் சென்று கொண்டிருந்த காலமது. அமெரிக்கா சென்ற ஒருவன், எப்படி செலவு செய்தான். வரவு அதிகமானதால் செலவும் அதிகமாகி, எப்படி கஷ்டப்பட்டான் என்பதை விளக்கும் விதமாக, அந்தக் கதையின் முடிவில், அவன் அப்பா சேர்த்து வைத்திருந்த வீட்டோடு ஒரே ஒரு எக்ஸ்ட்ரா ரூமும்தான் கட்ட முடிந்தது என்று சொல்லப்பட்டது. கொஞ்சம் மிகைதான் என்றாலும், படித்தவர்களை யோசிக்க வைக்க, அந்தக் காலகடத்தில் அந்த ஒரு விஷயம் போதுமானதாகவே இருந்தது.

கிட்டத்தட்ட அமெரிக்க வாழ்க்கையைப் பற்றி சொல்லப்படும் எல்லா விஷயங்களிலும் இதுபோன்ற மிகையுணர்ச்சி அதிகம் இருக்கிறது என்று நினைக்கிறேன். காரணங்கள் பலவாறாக இருக்கலாம். ஆனால் வாழ்க்கை முறையைப் பொறுத்தவரை, சொந்தக்காரர்களை அடிக்கடி பார்க்க முடியவில்லையே என்ற தனிமை உணர்வைத் தவிர, கிட்டத்தட்ட இங்கிருக்கும் மற்ற எல்லா அசெளகரியங்களும் எல்லா இடத்துக்கும் பொதுவானவையே. தமிழன் என்றொரு இனமுண்டு.தனியே அவர்க்கொரு குணமுண்டு என்பதை மெய்ப்பிக்கும் வகையில், நம் மக்கள் தனித் தனி தீவுகளாகத் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்மன்றம், அஸோஸியேஷன் என்று வைத்துக் கொண்டால் சச்சரவுகள் இருக்கத்தான் இருக்கின்றன. கோஷ்டி கீதங்கள் இருக்கின்றன. இவையும் இங்கு காணப்படும் புதிய விஷயமில்லை. சுயமாய் சிந்திக்ககூடிய மக்கள் எங்கெல்லாம் கூடி ஒரு செயலில் ஈடுபடுகிறார்களோ அங்கெல்லாம் நிகழக்கூடிய இயல்பான உரசல்கள் அவை. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டால் யார் முதலில் பேசுவது என்பதில் தொடங்கும் குழப்பம், தமிழில் தொடருவதா..தெலுங்கில் மாட்லாடுவதா.. இல்லை வடமொழியில் கழறுவதா என்பது வரையில் தொடர்கிறது. பார்ட்டிகளில் ஸ்டாக் மார்க்கெட்டைப் பற்றி பேசுகிறார்கள். பச்சை அட்டை கிடைக்காதவர்கள், prioriy date பற்றி பேசுகிறார்கள். வீடு வாங்கிய லோன் APR பற்றி பேசுகிறார்கள். "எப்ப ஊருக்கு போறிங்க. ஐடியா இருக்கா " என்று கேட்டால் மனிரத்னம் ஸ்டைலில் "தெரியலை" என்கிறார்கள்.

C:\Documents and Settings\spasupat\My Documents\My Pictures\prabanjan_with_kavithapub

பிரபஞ்சன் அமெரிக்கா வந்துவிட்டு ஊருக்குப் போய் ஆற்றிய ஒரு கேவலமான உரையின் சாராம்சத்தை வெங்கடேஷ் எடுத்துப் போட்டிருந்தார்.
அமெரிக்காவுக்கு வருகிற 15-30 நாட்களில், அவருக்குக் கிடைத்திருக்கும் ஒரு கருத்து, அதை சரியாகக்கூட அலசிப் பார்க்காமல், ஊருக்குப் போய் மற்றவர்களிடம் இந்த பிமபத்தை பற்றி பகிர்ந்து கொண்டு, அவ்வப்போது "கொல்" என்ற சிரிப்புச் சத்தம் எழ ஒரு பேருரையை நிகழ்த்தி இருக்கிறார்.

//அமெரிக்கத் தமிழர்களில் பலர் 30 வருடக் கடன்காரர்கள். வீடு, கார் ஆகியவற்றுக்கு அவர்கள் வாங்கும் 30 ஆண்டுக்கடன், அவர்களைத் திரும்பி வரவே விடாது //

திரும்பி வரவேண்டும் என்று விரும்பி விட்டால், வீடு, கார் ஆகியவற்றை விற்க எவ்வளவு நேரம் ஆகும் என்பதையும், அது எத்தனை எளிது என்பதையும், அத்ல் எத்தனை லாபம் வரும் என்பதையும் யாராவது பிரபஞ்சனுக்கு சொன்னார்களா என்பது தெரியவில்லை. ஒரு நான்கு வருடம் வாங்கிய வீட்டில் இருந்து விட்டு , பிறகு அதை விற்றால் போதும், ஊருக்கு வந்துவிட்டு பிறகு ஆயுசுக்கும் உட்கார்ந்து சாப்பிடலாம்.

//பெரும்பாலான தமிழ் வீடுகளில், வாரத்திற்கு ஒரு முறை சமைக்கிறார்கள். சனிக்கிழமை இரவு. அதையே அடுத்து வரும் மூன்று நான்கு நாள்களுக்கு வைத்துக்கொண்டு ஓட்டிவிடுகிறார்கள்.//

தினசரி சமைக்க வேண்டும் என்று எந்த ஸ்மிருதியில் எழுதி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. பெண்ணுக்கு சமையல்அறையில் இருந்தும், பிள்ளைபேறிலிருந்தும் விடுதலை வாங்கிக் கொடுக்கவேண்டும் என்று சொன்னவர்கள் பிறந்த மண்ணில்தான் இவரும் பிறந்திருக்கிறார் என்று நினைக்கவே ஆச்சரியமாயிருக்கிறது. அது சரி...இரண்டு பேரும் வேலை பார்க்கும் சென்னை இல்லங்களில் நிதமும் சமைக்கிறார்களா என்ன..?? பாதி நேரம் Eat-out என்கிறான் தோழன்.

//சமீபத்திய பெரிய சீரழிவு, சன் டிவி. //

சன் டீவி கட்டாயம் இல்லிங்கோவ். இலவசமா கனெக்ஷன் குடுக்கறதில்லை. வேணுன்னா பாக்கலாம். என் வீட்டில் இல்லை. வேலியிற போற ஓணாணை எடுத்து ..சரி சரி..புரியும்.

// நிறைய பேருக்கு இந்தியா திரும்பி வரவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால், அது முடியாது என்பதுதான் உண்மை //

ஹெஹ்..ஹெஹ்..ஹே....!!!

//அமெரிக்காவிலும் சாதி சங்கங்கள் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். சமுதாயக் கூட்டங்கள் என்று இதனைச் சொல்கிறார்கள். மனவேதனை அளித்த விஷயம் அது //

இதை சென்னவர்தான் இதையும் சொல்லி இருக்கார். நீங்களே முடிவு பண்ணிக்கங்க.

1950, 60களில், அந்தணர்கள் படித்தவிட்டு, அமெரிக்காவுக்கு முதலில் குடிபோனார்கள். அவர்களைத் தொடர்ந்து, 70களில், அந்தணர்கள் அல்லாத பிற முற்பட்ட வகுப்பினர் - முதலியார்கள் போன்றோர் - குடியேறினார்கள். அதன் பின்னரே, பிற்படுத்த, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குடியேறினார்கள்.

//நவீன இலக்கியம் நிறைய பேருக்குத் தெரியவில்லை. ஜெயகாந்தன் என்ற பெயர் தெரிந்திருக்கிறது. விதிவிலக்குகளாக சில பேர் இருக்கிறார்கள்//

தமிழ்நாட்டில் வீதிக்கு வீதி நவீன இலக்கியவாதிகளுக்கு சிலை வைத்திருக்கிறார்கள். எல்லாருக்கும் அவர்களைத் தெரிகிறது. இல்லையா எழுத்தாளர் ஸார்...??

அமெரிக்கா ஒரு பரந்த நாடு. குடியேறிகளின் நாடு. திறமையும், வாக்கு வன்மையும், adaptability யும் இருந்தால் இங்கு கனஜோராக இருக்கலாம். இந்தியர்கள் மிகவும் மதிக்கப்படுகிறார்கள். எத்த்னையோ துறைகளில் இந்தியர்கள் சாதனை படைத்து வருகிறார்கள். மூன்றாவது பெரிய/ வசதியான
வந்தேறி சமூகம் என்று குறுகிய காலத்தில் பெயர் வாங்கி இருக்கிறார்கள். அவர்கள் ஆதி நாள்களில் உழைத்த உழைப்பை பார்த்து விட்டுத்தான், இன்னமும் குறைந்த விலையில் இந்த அறிவை உபயோகப்படுத்திக்கொள்ளலாமே என்று வேலைகள் கடல்தாண்டி இந்தியாவுக்கு வருகின்றன. இந்தியாவின் அந்நியச்செலாவணி கூடி இருக்கிறது GDP அதிகரித்து இருக்கிறது. முக்கியமாக பிரபஞ்சன் போன்ற எழுத்தாளர்களை இவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் ஒரு பகுதி காசில்தான் கூட்டி வந்து பேச வைக்கிறார்கள்.

நாமக்கல் ராஜா எழுதியதைப் படித்ததும் தோன்றிய விஷயங்கள் இவை. அது சரி...அந்துமணி கமெண்டைப் பற்றி ஒண்ணும் சொல்லலையே என்று கேட்கிறீர்களா...

ஸாரி... அந்துமணிக்கெல்லாம் பதில் சொல்றதில்லை...டைம் வேஸ்ட்.

5 comments:

  1. Anonymous3:11 AM

    அன்பு மூக்கர்,

    அமெரிக்காவில் நன்றாக சம்பாதித்து பொருளாதார நிலையில் நன்றாக வாழ்பவர்களை இந்தியாவில் உள்ள தமிழர்கள் பொதுவாகவே ஒருவித பொறாமை உணர்ச்சியுடன் கூடிய இயலாமைத்தனத்துடன்தான் பார்ப்பதாக தெரிகிறது. தன்னால் அங்கு நிச்சயமாக போக முடியாது என்று தெரிந்துவிட்ட பிறகு ஒரு வித கையாலாகததனத்துடன் "அங்கல்லாம் கக்கூஸ் கழுவ கூட ஆள் கிடைக்க மாட்டாங்க. நம்மதான் கழுவிக்கணும்" என்று கூறிக்கொண்டு தன்னைத்தானே ஆறுதல்படுத்திக் கொள்கிறார்கள்.

    சுஜாதா கூட 'நமக்கெல்லாம் அமெரிக்கா தாங்காது. மைலாப்பூர் கொசுக்களை பிரிய என்னால் ஆகாது' என்கிற மாதிரி கூறுகிறார்.

    சரி. உங்களிடம் ஒரு கேள்வி:

    பொருளாதார பிரச்சினைகளையும், சமூக பிரச்சினைகளையும் விடுங்கள்.

    உணர்வுபூர்வமாக நீங்கள் தமிழ்நாட்டை தவறவிடுவதாக உணரவே இல்லையா?

    Suresh Kannan

    ReplyDelete
  2. Anonymous6:33 AM

    ரொம்ப சரியா சொன்னீங்க சுந்தர். ரொம்ப நாளா எனக்கு இதை சொல்லனுன்னு ஆசை ஆனா எழுதனும்னு உட்கார்ந்தா ... சரியா வரலை/

    இந்த தாங்க்ஸ் கிவ்விங் ல உங்களுக்கு என்னுடைய முதல் தாங்க்ஸ்.

    கணேஷ் சந்திரா

    ReplyDelete
  3. Anonymous6:36 AM

    கூகிள் adv ஒரு லைன் விட்டு போடுங்களேன், Post Comment கிளிக் பண்ணும் போது அது adv. பட்டு எங்கேயோ போகுது.

    (இல்லே தெரிஞ்சேதான் போட்டீங்களா ??? ;) )

    - கணேஷ் சந்திரா

    ReplyDelete
  4. கணேஷ்,

    தெரிஞ்சேதான் போட்டேன். ரெண்டாவது வீடு வாங்கணுமில்லே. :-). என்ன ஸார்...தமிழோவியம் மொதலாளிக்கு தெரியாத விளம்பர/வியாபார யுக்தியா..? :-)

    Just kidding...நானே இப்பத்தான் கஷ்டமா இருப்பதைப் பார்த்தேன். மாத்திடுவம். நன்றி.

    Google ads க்கு நன்றி சொல்லி personal ஆக ஒரு கடுதாசி போட்டுட்டேன் - பெர்ய பெர்ய மனுஷாளையெல்லாம் வரவழைச்சுட்டுதே...:-)

    ReplyDelete
  5. சுரேஷ்,

    கண்டிப்பாக உணர்வு பூர்வமாக மிஸ் செய்கிறேன். மறுக்கவில்லை. ஆனால் அமெரிக்க வாழ்க்கையை, இப்படி காலில் போட்டுத் தேய்த்து கேவலமாக நசுக்கும்போது அதற்கு பதில் சொல்ல வேண்டுமல்லவா...?? அந்தப் பதிலில், மேற்சொன்ன பாகத்தையும் கலந்தால், கவுண்டமணீ, வாழைப்பழ ஜோக் மாதிரி, நானும் அதைத்தான் சொன்னேன் என்று புது தோசை கொடுத்து விடுவார்கள்.:-)

    எனவே நண்பர்களே..ம்கும்..ஒரு சோடா குடுப்பா...:-)

    ReplyDelete

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...