Wednesday, February 23, 2005

மருத்துவர் மாலடிமைக்கு யோசனைகள்

தமிழ்ப் படங்களுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும்.

பள்ளிகளுக்கருகே ஃபாஸ்ட் ஃபுட் கடைகளை மூட வேண்டும்.
......
.......
.......

தமிழ்நாட்டில் எல்லோரும் தமிழ் எண்களைத்தான் உபயோகப்படுத்த வேண்டும்

கோக், பெப்ஸிக்கு பதிலாக மாம்பழச்சாறு, கரும்புச்சாறு, இளநீர் அருந்த வேண்டும்.

விஸ்கி, பிராந்தி போன்ற மேல்நாட்டு பானங்களுக்கு பதிலாக லோக்கலாக அரசு சாராயம் அருந்த வேண்டும். மதுவிலக்கு அமலில் இருந்தால் பா.ம.க காய்ச்சித் தரும்.

மேல்ஜாதி மக்களுக்கு யாரும் ஓட்டுப் போடக்கூடாது. எங்களுக்கு ஓட்டுப் போட்டால், உங்களை வேறுயாரிடமும் கை கட்டி நிற்க விடமாட்டோம். எங்களிடம் நின்றால் போதும்.

பேண்ட், சட்டை, டை யாரும் போடக் கூடாது. வேட்டி, மஞ்சள் சட்டை, துண்டுதான். ஜட்டி வேண்டாம். கோடு போட்ட நாடா டவுசர் தான். அதுவும் வேட்டிக்கு கீழே தெரிய வேண்டும்.

பஸ் வேண்டாம். மாட்டு வண்டி போதும்.

வீட்டு ஹாலில் எல்லோரும் ஒரு மரம் வைக்க வேண்டும்.

கட்சித் தாவும் சட்டத்தை தடை செய்ய வேண்டும்.

மக்களுக்கு மறதியை அதிகரிக்கும் மருந்து கண்டுபிடிக்க, அன்புமணி மருத்துவத்துறையில் புது ஆராய்ச்சிப் பிரிவை கண்டுபிடிக்க வேண்டும்

பாண்டிச்சேரியில் பா.ம.க வைத் தவிர மற்ற எல்லாக் கட்சிகளையும் தடை செய்து விட வேண்டும்.

திருமாவளவன் சொல்வதை எல்லா தலித் மக்களும் கேட்க வேண்டும். அவர் நான் சொல்வதைக் கேட்பார்.

13 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. மூக்கன், எழுதியதைத் தகுதரத்திலே போட்டுவிட்டதாலே கழற்றியிருக்கின்றேன். பின்னாலே போடுகிறேன். மன்னிக்கவும்.

    ReplyDelete
  4. "பேண்ட், சட்டை, டை யாரும் போடக் கூடாது. வேட்டி, மஞ்சள் சட்டை, துண்டுதான். ஜட்டி வேண்டாம். கோடு போட்ட நாடா டவுசர் தான். அதுவும் வேட்டிக்கு கீழே தெரிய வேண்டும்."
    திடீர் மந்திரி அன்பு மணி அந்த உடையில்! காணக் கண் கோடி வேண்டும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  5. இந்த மாதிரி விதண்டாவாதங்ளுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல!

    ReplyDelete
  6. மூக்கன்,

    உங்களுக்கு இராமதாஸின் இந்தப் போராட்டத்தைன் மீது விமர்சனமிருந்தால் அதை நேரடியாகவே அணுகலாமே!

    மொழியையும் பண்பாட்டையும் இணைக்கும் மடத்தனத்தை இராமதாஸ் செய்தால் நீங்களும் அதைச் செய்வதன் மூலம் அந்த விதப் பார்வையோடு உடன்படவே செய்கிறீர்கள்!

    தமிழர்களின் நிரந்தர பண்பாட்டு உடையென, உணவென (மது உட்பட), எதுவும் இல்லை; கிட்டத்தட்ட எல்லா பழக்கங்களும் மாறியே வந்திருக்கின்றன. தமிழ்ப்பண்பாடென்றால் வேட்டி, சட்டை, பட்டை டவுசர், சாரயம் என்று தீர்மானித்தால் நீங்கள் டாக்டரை கேலி செய்யவில்லை, அவர் பார்வையிலேயே இன்னும் கொஞ்சம் ஆழமாகச் செல்லுகிறீர்கள். மாறாக மொழியையும் பண்பாடு என்று சொல்லப்படுவதையும் தனித்தனியாகப் பிரிக்கமுடியும். பண்பாடு உடைகளை, பழக்கவழக்கங்களைச் சொல்லமுடியாதென நினைக்கிறேன். இது இங்கு தொடர்புடையதும் அல்ல. மாறாக மொழியைக் காப்பாற்றுவதென்பது பண்பாட்டைக் காப்பாற்றுவதாகாது; அது பொதுமக்களின் அரசியல் உரிமைகளை, ஒரு இனத்தின் முகத்தை, தன்மானத்தை, அவர்களின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதாகும். இதன் மூலம் மறைமுகமாக அவர்களது நாடும், அதன் வளங்களும் கூட பாதுகாக்கப்படுகிறது. இது மொழி இனம் சார்ந்த பிரச்சனை.

    ஆனால் நிச்சயம் பண்பாடு இதனோடு இணைக்கப்படவேண்டிய அவசியமில்லை (இணைக்க சிலர் விரும்பலாம் அது வேறு விசயம்).

    இப்படி, மொழி-உரிமை இந்த விசயங்களை மொழி-பண்பாடு என்று மாற்றுவது மடத்தனமென்றால், மொழி-பண்பாடு-அதை கேலிக்குறியவிதத்தில் நீட்டிப் பார்ப்பது, மக்களை அவர்கள் மொழி விசயத்தில் விழிப்புணர்வற்றவர்களாக்கவே சிலர் செய்யும் வேலை.

    ReplyDelete
  7. வெறும் விதண்டாவாதத்துக்கு எழுதியதில்லை இது.

    தமிழைப் பற்றியும், அதன் மேன்மை பற்றியும், அதை சாகடிக்காமல் இருப்பது பற்றியும், சாதாரணர்களுக்கு தெரியாமல் இருப்பதனால்தான், ராமதாஸ் போன்ற அரைவேக்காட்டு அரசியல்வாதிகள், சந்தர்ப்பவாத முதலைகள், தமிழ்ச்சமுதாயத்தை சாதி ரீதியில் கூறு போட நினைக்கும் ஆசாமிகள் தமிழ் பாதுகாப்பு கழகம் துவங்கி, அதை தன் பதவி அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்ளும் சந்தர்ப்பவாதம் நடக்கிரது என்று சொன்னேன். சொன்னது எல்லாமே " ஒரு ரவுடி டாக்டரை தமிழின் பேரால் தாங்கிப் பிடிக்கக்கூடாது என்ற ஆதங்கத்தினால்தான். அவருடைய ஆதாயத்துக்கு அவர் விளையாட ஆரம்பித்திருக்கும் மொழி விளையாட்டு அராஜகங்களுக்கு பலியாகக் கூடாது என்பதுதான்.

    வெகு மக்கள் அரசியலை பிரதிபலித்தாலும், இந்த நச்சு விதைகளை இன்னமும் வேர்பிடிக்க விடக்கூடாது என்பதற்காகத்தான். சோவை எந்த அளவு நாம் அனைவரும் கண்டிக்கிறோமோ, அதே அளவு கண்டணம் இந்த ஆசாமிக்கும் தர வேண்டும் என்பதுதான். மோசங்களை கண்டிப்பதில் நமக்கேன் ஓரவஞ்சனை..??

    தங்கமணி, புரிந்திருக்கும் என நம்புகிறேன்.

    நன்றி.

    ReplyDelete
  8. //ஒரு ரவுடி டாக்டரை தமிழின் பேரால் தாங்கிப் பிடிக்கக்கூடாது என்ற ஆதங்கத்தினால்தான். //

    இங்கு யாரும் ரவுடி டாக்டரை தாங்கி பிடிக்கவில்லை .ஒரு ரவுடி டாக்டர் 'தமிழ் பாதுகாப்பு' பற்றி சொல்லி விட்டார் என்பதற்காக 'தமிழ் பாதுகாப்பை'-யே கேலி செய்கிறீர்களே என்ற ஆதங்கத்தினால் தான் .

    ReplyDelete
  9. உங்களுக்கு அவர் சொன்ன அந்த கருத்தின் மீதே உடன்பாடு இல்லையா? அல்லது அந்த கருத்தை அவர் சொல்லிவிட்டதால் உடன்பாடு இல்லையா?

    ReplyDelete
  10. //உங்களுக்கு அவர் சொன்ன அந்த கருத்தின் மீதே உடன்பாடு இல்லையா? அல்லது அந்த கருத்தை அவர் சொல்லிவிட்டதால் உடன்பாடு இல்லையா//

    ஜோ, அந்த கருத்தை இவரெல்லாம் சொல்லி நாம் "கேட்கக்கூடிய " நிலை இருக்கிரதே என்கிற ஆதங்கம்.

    இந்தக் கருத்தை அவர் சொன்னதுதான் எனக்கு பிடிக்கவில்லை. ஏனெனில் கடந்த பலவருடங்களாக மாலடிமை நடத்தும் அந்தர்பல்டி அதிர்வேட்டுகளை எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

    அதுவும் சாதியின் பெயரால்...!!!!!!

    அல்வா அண்ணாச்சி, புரிதலுக்கு நன்றி.

    ReplyDelete
  11. //ஜோ, அந்த கருத்தை இவரெல்லாம் சொல்லி நாம் "கேட்கக்கூடிய " நிலை இருக்கிரதே என்கிற ஆதங்கம். //

    அப்படியென்றால் ,அவருடைய யோக்கியதையை பற்றி மட்டும் எழுதியிருக்கலாமே..அதை விடுத்து தமிழாசிரியர்களை கேலி செய்யும் நகரத்து சிறுவர்களை போல,தமிழையும் தமிழ்ப் படுத்துவதையுமே எள்ளி நகையாட வேண்டிய தேவையென்ன? இதெல்லாம் படித்தவர் மத்தியிலேயே ஒரு fashion-ஆகப் போய் விட்டது.

    நாளை அவர் பெண்ணுரிமையைப் பற்றி பேசினால் ,அதைப் பேச அவருக்குள்ள யோக்கியதையை விடுத்து பெண்ணுரிமையையே கேலி பேசுவீர்களா?

    ReplyDelete
  12. ஜோ, அதிகம் உணர்ச்சி வசப்படுகிறீர்கள் என நினைக்கிறேன்.

    "மாலடிமை சொன்னதன் நீட்சியான நையாண்டிக் கற்பனை" என்று விளக்கமாக் போர்டு போட்டுவிட்டு ஒவ்வொன்றையும் எழுதிக் கொண்டிருக்க முடியாது. நான் எழுதுவதன் தொனி பற்றி, என் எண்ணங்கள் பற்றி, குறைந்த பட்ச புரிதல் இருக்கும் எவருக்கும் நான் எழுதி இருக்கும் இந்த பதிவு தமிழை எதிர்த்து அல்ல என்பது புரியும்.

    வன்னியர்கள் ஓட்டு போட்டால் மட்டும் இன்னும் மேலே போய் சுரண்ட முடியாது என்று விளங்கிய பிறகு, இது மருத்துவரின் அடுத்த அவதாரம். இந்த அவதாரத்தில் தமிழுக்கும், தலித்துக்கும், மற்ற சாதிக்கட்சிகளுக்கும் இன்னம் வெளிவரப்போகும் அத்த்னை கரணவேலைகளுக்கும் இடம் உண்டு.
    நினைத்தது கிடைத்தபின் பிணைப்பெல்லாம் விலகி விடும்.

    அப்போ பாருங்க வேடிக்கை..ராமதாசருக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு என் தமிழார்வத்தை சந்தேகப்படாதீர்கள். அவ்வளவுதான் சொல்ல முடியும். :-(

    ReplyDelete
  13. ராம தாசுக்கு வக்காலத்து வாங்குகிறேன் என்ற உங்கள் புரிதலுக்கு நன்றி.

    ReplyDelete

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...