Monday, January 10, 2005

Spyware

நான்கு நாட்களாக கதறிக் கொண்டிருக்கிறேன்.

எ ன்னுடைய அலுவலக கணிணியில், Alumni.net க்கு போனபோது, வந்த ஏதோ ஒரு பாப்-அப்புக்கு யெஸ் சொல்லித் தொலைக்க, தொடர்ந்து தொல்லைகள். தானாக WebSearch Toolbar என்ற மென்கலனை நிறுவிக்கொண்டது. பிறகு ஏகத்துக்கு பாப்கார்ன் பொரிவது போல பாப்-அப்புகள் வரத்துவங்கவும், லேட்டாக விழித்துக் கொண்டு அந்த மென்கலனை நீக்கினேன். பிறகும் தொல்லை தொடர்ந்து கொண்டிருக்கிறது. எந்த உலாவியும் திறக்காதபோதே ஏகத்துக்கு ஜன்னல் ஜன்னலாக திரை முழுக்க திறந்து கொண்டிருக்கிறது. என்னுடைய வைரஸ் மென்கலன் அவ்வபோது, இங்கே வைரஸ், அங்கே வைரஸ் என்று அதன் பங்குங்கு ஜன்னல் திறக்கிறது.

என்னுடைய பணியிடத்து சப்போர்ட் இஞ்சினியர் வந்து பார்த்துவிட்டு உதடு பிதுக்கிவிட்டு சென்றுவிட்டார். காரணம், AD-Aware, spybot போன்ற எந்த மென்கலன்களாளும் நீக்க முடியாமல், VX2- Malware என்ற திருடன் உள்ளே ஒளிந்து கொண்டிருக்கிறான். அவன் உயிர்நாடி xxxxx.dll என்ற ஃபைலில் இருக்கிறது. ஏன் xxxxx என்று சொல்கிறேனென்றால், ஒவ்வொருமுறை ஸ்பைவேர் க்ளீனர் பாவிக்கும்போதும், அது தன் பெயரை மாற்றிக் கொள்கிறது. Winlogon என்கிற System critical process உடன் அது தன்னை இணைத்துக் கொண்டு விட்டதால், கணிணி இயங்கிக் கொண்டிருக்கும்போது அந்த dll ஐ நீக்க முடியவில்லை. சரி, லோக்கல் மெஷினில் லாகின் ஆனால்தானே இனைக்க முடியவில்லை என்று ரிமோட் மெஷினிலிருந்து VNCViewer மூலம் லாகின் செய்து, DLL ஐ நீக்க முயன்றேன்.

ம்..ஹூம்..

படங்களை இத்துடன் இணைத்துள்ளேன்.யாருக்காவது நல்ல ஸ்பைவேர் க்ளீனரோ, VX2 க்ளீனரோ தெரிந்தால், எனக்கு உதவுங்கள். நன்றி.



2 comments:

  1. ஹிஹிஹி...

    என்ன நக்கலா சிரிக்கிறேன்னு பாக்குறீங்களா..?!

    இவ்வளவு வழியிலே எது செஞ்சா உங்க சிஸ்டம் சரியா போகுதுன்னு பார்த்துட்டு உடனடியா எனக்கும் சொல்லிக் கொடுங்க 'தல'..! என்னோட சிஸ்டம் ஒண்ணு இப்படி தான் ஒரு வாரமா கவுந்து கெடக்குது!!!

    அது சரி...எல்லாரையும் கிண்டலடிச்சு எழுதுறீங்க இல்லே..?! அதான் சிஸ்டம் கவுத்துகிச்சு!!

    ReplyDelete
  2. Anonymous7:27 PM

    webroot Spysweeper, best aa iruku.

    spybot search and destroy is also good.

    http://www.microsoft.com/athome/security/spyware/software/default.mspx

    There is no one spyware cleaner you have to use multiple versions.

    - Ganesh Chandra

    ReplyDelete

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...