"டாட்டா" சொல்லும் நேரம் வந்து விட்டது.
கடந்த ஒரு வார நட்சத்திர அந்தஸ்து பல புதிய அனுபவங்களை தந்திருக்கிறது. சாதாரணமாக படிக்காத பல வலைப்பூக்களை படிக்க முடிந்தது. பல உண்மைகள் விளங்கின. திங்கட்கிழமையும், வெள்ளிக்கிழமையும் யாரும் முனைந்து, அந்தளவு எழுதுவது இல்லை. எனவே புதிதாக வந்திருக்கும் வலைப்பதிவர்கள் மேற்சொன்ன நாட்களீல் நிறைய எழுதினால், நிறைய வாசகர்கள் கிடைப்பார்கள். அதைப் போலவே சனி, ஞாயிறு எழுதுவோரும் குறைவே.
இங்கே எல்லா விதமான வலைப்பதிவரும் இருக்கிறார்கள். ஜாலிக்கு, கேலிக்கு, லாலிக்கு மற்றும் ஜோலிக்கு என வகைவகையாக இருந்தாலும், ஜோலிக்கு எழுதுபவர் குறைவு. அவற்றிலும் வாசகர் எதிர்வினை கிடைப்பது மிகச் சிலருக்கே. அதனால் சொர்ந்து போகாது அவர்கள் தொடர்ந்து எழுதி வருகிறார்கள். உடனடியாக கிடைக்கும் பின்னூட்ட "பலே" க்களை விட, நீண்டகால பயன் முக்கியம் என்று செய்து கொண்டிருக்கிறார்கள். மகிழ்ச்சி. அவர்கள் அவ்வப்போது சில ஜாலி பதிவுகளையும், லாலி பதிவுகளையும் போட்டால், பொழுதுபோக்குவதற்காக வலைமேயும் என் போன்ற சராசரி வாசகர்களையும் தன் பக்கம் இழுக்க முடியும். அதைப் போல கருத்துக் களம் சார்ந்து ஒரு தலைப்பில் எழுதி வரும் வலைப்பதிவர்கள் கூட அவ்வப்போது தன் களத்தை விட்டு வெளியே வந்து கொஞ்சம் "இளைப்பாறல்" வலைப்பதிவு செய்து விட்டுப் போகலாம். மேற்சொன்னவைகள் எல்லாம் என் புரிதல் அடிப்படையிலான யோசனைகளே. நீங்கள் என்ன எழுத வேண்டும் , எப்படி எழுத வேண்டும் என்று சொல்ல நான் வரவில்லை.
என்னைப் பொறுத்தவரை கடந்த வாரம் ஓரளவு திருப்தியாகவே இருந்தது எனச் சொல்வேன். ஒரே வருத்தம் நான் நினைத்தபடி அத்தனை வலைப்பூ விமரிசனங்கள் செய்ய முடியவில்லை. கடைசியில் சோம்பல் வந்து விட்டது. தமிழ்மணம் முகப்பு பட்டியலில் உள்ளதில், அ முதல் ச வரை வந்திருக்கிறேன் என நினைக்கிறேன்.( ச கூட முழுதாக முடிக்கவில்லை)
பின்னால் வரும் நட்சத்திரம் விருப்பப்பட்டால் தொடரலாம்.
இந்த வார நட்சத்திரம் நல்ல முயற்சி. நட்சத்திர வலைப்பதிவருக்கு நல்ல கவனம் கிடைப்பதால், புதிய வாசகர்கள் கிடைக்கிறார்கள். புதிய வலைப்பதிவர்கள் நன்றாக உபயோகப்படுத்திக் கொண்டால், அவர்கள் பெற் விரும்பும் எதிர்வினைகளும், பின்னூட்டங்களும் கிடைக்கும். நம் வலைப்பதிவை படிப்பவர் பெரும்பாலும் சக வலைப்பதிவர்கள் என்பதால், நாம் எந்த வலைப்பூவைப் படித்தாலும், நமக்கு பிடித்திருந்தால், எழுத வேண்டுமென்று தோன்றினால், சோம்பலைப் பார்க்காமல் இரண்டு வரியாவது எழுதிப் போடுதல நலம். வாசகர்களை ஈர்க்க வேண்டுமென்றால், நல்ல வாசகனாக நாமே ஆவது ஒரு வழி. வலைப்பூ உலகத்தை பொறுத்தமட்டில். நீங்கள் எதுவும் முதலீடு செய்தால் இரட்டிப்பாக கிடைக்கும் - வாழ்த்தாயிருந்தாலும் சரி, வசவாயிருந்தாலும் சரி. அதே கதிதான்.
சினிமா சம்பந்தப்பட்ட பதிவுகளை குறைத்துக் கொள்ளுங்கள் என்பதே பலரும் எனக்குச் சொல்லும் அறிவுரையாக இருக்கிறது. சர்ச்சைகள் குறைந்தது என்பதாலும், பொம்மை போட முடிகிறது என்பதாலும், சினிமாவில் கொஞ்சம் ஆர்வமிருக்கிறது என்பதாலும் தான் நான் பெரும்பாலும் சினிமா பதிவுகளை நாடுகிறேன். என்னுடைய விளையாட்டுப் புத்தி கொஞ்சம் குறைந்தால், சீரியஸ் வாசகர்கள் எதிர்பார்க்கும் "கனமான" பதிவுகள் என்னிடமிருந்தும் வரலாம். பார்ப்போம்.
பின்னூட்ட ஊக்கம் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி. வாய்ப்பு தந்தவர்களுக்கும்....

வணக்கம்.
என்றென்றும் அன்புடன்
"மூக்கு" சுந்தர்