Saturday, January 22, 2005

விகடனுக்கு அடுத்து....

வேறென்ன ...ஜூனியர் விகடன் தான்.

வயசில் நான் சீனியரென்றாலும் ( இன்றோடு 33 முடிகிறது ) , போன வாரத்தில் சில சுவாரசியமான விஷயங்களை எழுதி, நல்ல விவாதம் ஒன்றுக்கு - கவனிக்க: சண்டை அல்ல, வழிகோலிய சீனியருக்கு, விகடனுக்கு நன்றி.


ஆளாக்கிய விகடனுக்கும்...


வயசுக்கு வநத பெண்ணுடைய அப்பனின் அடிவயிறு மாதிரி மனசுக்குள் ஞண ஞண என்று இருக்கிறது. என் வலைப்பூவில் எழுத ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிறது. ஏற்கனவே இரண்டு முறை வலைப்பூ ஆசிரியராக அழைப்பு வந்தும் ஏற்கமுடியாதபடியான சூழ்நிலைகள். இப்போதுதான் செய்ய முடிகிறது.

தமிழும், எழுத்தும் , விமரிசனங்களும் அது விளைவிக்கும் சச்சரவுகளும் எனக்குப் புதிதல்ல என்பதை என்னை தொடர்ந்து அவதானிக்கும் சிலர் அறிவார்கள். அதைப் போலவே என் தடுமாற்றங்களும், ஜல்லிகளும், குழப்பங்களும். என்னைப் பொறுத்தவரை நான் எதையும் தீர்மானித்துவிட்டு செய்வது கிடையாது - ஆஃபிசுக்கு செல்லும் பாதை உட்பட. எந்த தீர்மானங்களும் வைத்துக் கொண்டு எழுதாததால், எல்லா தரப்பையும் எழுத முடிகிறது. எல்லா தரப்பையும் எழுதுவதால், எதற்கும் இணக்கமாவதில்லை. எதனின்றும் விலகிப்போவதில்லை. இது ஊசலாட்டம் மாதிரி தோன்றினாலும், உண்மையில் என் நிலை இதுதான் என்பதை தைரியமாய் ஒப்புக் கொள்கிறேன்.

சரி விடுங்கள்... !! என்ன செய்யப் போகிறேன் இந்த வாரம்..???

என் வாழ்க்கை பற்றி, வேலை பற்றி, குடும்பம் பற்றி, இணைய நண்பர்கள் பற்றி, எழுத்து முயற்சிகள் பற்றி, குடி பற்றி, என் ஜொள்ளு பற்றி, நடப்பு அரசியல் பற்றி, சினிமா பற்றி என்று எல்லாமே ஓரளவு எழுதி இருக்கிறேன் கடந்த ஒரு வருடத்தில். எழுதியதை திரும்ப படித்தால் மலைப்பாகவும், கொஞ்சம் திருப்தியாகவும் இருப்பது நிஜம். கிட்டத்தட்ட சரக்கு தீர்ந்து போய், வெறும் வம்பு எழுதி கொண்டிருக்கும் காலமிது.

என்ன எழுத..??

சரி. வம்பே எழுதுகிறேன்.

நான் இதுவரை ஆழ்ந்து படிக்காத வலைப்பூக்களை, என் போன்ற பாமர ரசிகர்களின்/வெகுஜனங்களின் பார்வையில் படாத வலைப்பூக்களைப் பற்றி, என்னால் முடிந்த வரைக்கும் சுவாரசியமாக விமர்சனம் எழுதப் போகிறேன். விமரிசனம் என்றாலே நல்லது - கெட்டது எல்லாம் உண்டு என்று உங்களுக்குத் தெரியும். ஆக்கபூர்வமாக நல்ல விதத்தில் எடுத்துக் கொள்வீர்கள் என்பது ஒரு நம்பிக்கைதான்.

வாய்ப்பு கொடுத்த சந்திரமதி மற்றும் காசிலிங்கத்திற்கு என் நன்றி.

10 comments:

  1. வாங்க வாங்க!! தனிவளையெதுக்கு?

    ReplyDelete
  2. நன்றி தங்கமணி.

    தனி வளை மற்றவர் எழுத்துகளை சேமித்து வைக்க. அதிலேயே எழுதி இருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  3. பொறந்த நாள் வாழ்த்துக்கள்ண்ணா!! எங்க வூருல வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்னு-ல்லாம் ஒரே சீனா இருக்கும் (அது சரி, இப்படித்தான் அப்பப்போ, அண்ணான்னு சொல்லி வயசை குறைச்சுக்கிறது!)

    ReplyDelete
  4. அன்புள்ள சுந்தர்!

    எங்கள் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!!
    இந்த வார நட்சத்திரமா கலக்கப்போறீங்க!!

    தூள் கிளப்புங்க!!

    என்றும் அன்புடன்,
    துளசி.

    ReplyDelete
  5. பிறந்த நாள் கொண்டாடும் நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்...

    பாமர ரசிகர்களின்/வெகுஜனங்களின் பார்வையில் படாத வலைப்பூக்களைப் பற்றி, என்னால் முடிந்த வரைக்கும் சுவாரசியமாக விமர்சனம் எழுதப் போகிறேன். விமரிசனம் என்றாலே நல்லது - கெட்டது எல்லாம் உண்டு என்று உங்களுக்குத் தெரியும். ஆக்கபூர்வமாக நல்ல விதத்தில் எடுத்துக் கொள்வீர்கள் என்பது ஒரு நம்பிக்கைதான்.கண்டிப்பாக எழுதுங்கள் சுந்தர். இந்த வாரம் முழுவதும் வலைப்பதிவு விமர்சனங்கள் மட்டும் எழுதினாலும் சரி...(அப்படி சொன்னாக்கூட மற்ற விஷயம் எழுதாமலா இருந்துட போறீங்க, அப்படி இந்த வாரம் விட்டால் கூட - எழுதவேண்டியதை எழுதாம விட்டுடமாட்டீங்கன்னு ஒரு தைரியம்தான்...)

    கடந்த காலங்களில் வலைப்பூ ஆசிரியர் என்ற பெயரில், அடுத்த வலைப்பதிவுகள் பற்றி எழுதப்படும். தமிழ்மணம் இல்லாத காலத்தில், அதுதான் கலங்கரைவிளக்கம். அந்தவழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து/அருகி வருகிறது. சுகாதாரமான பின்னூட்டங்களும் குறைந்துவருவதால், உங்களுடைய இந்த முயற்சியை இருகை தட்டி வரவேற்கிறேன்... முடிந்தவரை கவர்(னா அந்த கவர்) பண்ணுங்க...

    ReplyDelete
  6. Dear Sundar,
    Best wishes on your B'day and i wish you many more happy returns of the day.
    :) :)
    Anbdan
    Balaji-paari

    ReplyDelete
  7. மிஷ்ட்டர் ஷுந்தர். எழ்ன்ன பேச்செழ்ழாம் ஒழு மாழிரியா இழுக்கூ....ம்ம்ம்ம்? "குடி பற்றி", "சரக்கு தீர்ந்துவிட்டது"...ம்ம்ம்ம்ம்ம். ஸ்டடியா எழ்ழுங்க... வர்ழ்ட்டா....

    க்ருபா

    ReplyDelete
  8. வாழ்த்து தெரிவித்த நண்பர்களுக்கு நன்றி. உங்க எதிர்பார்ப்பை எப்படி ஈடுகட்டப் போறேனோ தெரியலை.சாதாரணமா, எந்தக் கட்டுகளும் இல்லாம எழுதினா தூள் கிளப்பிடுவேன். ஆனா, ஒரு Purpose க்காக. இன்னதுக்குன்னு எழுதினா, எழுத்தில லேசா செயற்கைத்தனம் தலை காட்டும். பிரேம்குமாருக்கு துணை வரப்போற வரதராஜ பெருமாள் இந்த சுந்தர்ராஜனுக்கும் துணை வரட்டும்.

    ஜெ மேடம், 23 இல்ல. 33 முடியுது. ( DOB: 23-01-1972).
    எழுத்தைப் பாத்து வயசு கண்டுபிடிச்சா இப்படித்தான். :-)

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள்.! அசத்துங்கள்.!

    கயல்விழி

    ReplyDelete

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...