Wednesday, January 12, 2005

சாமியார்கள் சளைப்பதில்லை

எலெக்ட்ரிக்கல் இஞ்சினியரிங் மெஷர்மெண்ட்ஸ் லேப் க்ளாஸ். காக்கிச்சட்டை போட்டுக் கொண்டு, ஐந்து ஐந்து பேராக பிரித்து விடபட்ட க்ரூப்பில் மக்கள் எல்லாரும் கடலை போட்டுக் கொண்டு இருந்தோம். பத்மாவதி மேடம், லேபில் துணைக்கு இருக்கும் இன்னொரு இளவயசு மேடத்தோடு பேசிக் கொண்டிருந்தார்கள்.

இங்கே ந.ப. சுந்தர்ராஜன்ங்கிறது யாரு..?? என்கிற கனத்த குரல் எல்லாரையும் திரும்பிப்பார்க்க வைத்தது. கேட்டவரை நான் அதற்குமுன் எங்கும் பார்க்கவில்லையாதலால், குழப்பம் விலகாமல் வெளியே வந்தேன். வெளியே வந்தபின்தான் தெரிந்தது, வந்தவர் தனியாக வரவில்லை. கூட ஐந்தாறு பேர் வந்திருந்தார்கள். அவர்களில் அண்ணனாகப் பட்டவர் ஒரு மரத்தில் சாய்ந்து கொண்டு, ஒற்றைக் காலை பின்னே முட்டுக் கொடுத்து, கைகளை மேலே தூக்கிக் கோர்த்துக் கொண்டு, எழுத்தெழுத்தாக சொன்னார். " தம்பி, படிக்கிற வேலையைப் பாக்காம, பத்திரிக்கைக்கு எழுதறது; ஃபோட்டோ பிடிக்கறதுங்கிற வேலையெல்லாம் வெச்சிகிட்டீங்கன்னா நல்லா இருக்காது; சொல்லிட்டு வரச்சொன்னாஹ" என்றார்.

அதன் பின்தான் முதல் வாரம், ஜூனியர் விகடனுக்காக சிவகங்கை சென்று முத்துக்காமாட்சி சுவாமிகளை பற்றி தகவல் சேகரித்து வந்தது நினைவுக்கு வந்தது. குளறி, உளறி கொட்டி அவர்களை அனுப்பி விட்டாலும், அவர்கள் பற்றி சேகரித்த செய்திகளை அனுப்பி விட்டு, மேற்சொன்ன சம்பவத்தையும் சொல்லி, என் பேரில் வெளியிட வேண்டாம் என ஜூனியர் விகடனுக்கு அனுப்பி வைத்தேன். ஆனால், அது அப்போது வெளியே வரவே இல்லை. அதனால்தான் இப்போது இதை எழுத முடிகிறதோ என்னவோ..??

****

சிவகங்கை சித்தர் முத்துக்காமாட்சி மதுரையை சேர்ந்தவர். யாரிடமோ சித்து வேலைகள் கற்றுக் கொண்டு, அந்த சித்து வேலைகள் மூலமாக சிவகங்கையை 1990 களிலேயே கலக்கிக் கொண்டிருந்தார். நடிகர் கார்த்திக் குடும்பத்துக்கு வேண்டப்பட்டவர். நினைத்த சமயத்தில் நினைத்த வடிவம் எடுக்கும் மாந்திரிகவாதி என்றெல்லாம் பேச்சு. கார்த்திக் கல்யாணத்துக்கு கூட, முத்துராமனாக வடிவம் எடுத்துதான் அவருக்கு ஆசிர்வாதம் செய்தாராம் (?!!!).
அப்போது அவரை பற்றி கிடைத்த தகவல்கள், பெண்கள் சம்பந்தமான வதந்திகள் ஆகியவற்றைப் பற்றி விசாரிக்கவே சிவகங்கை சென்றேன். உள்ளூர் புகைப்படக்காரர் ஒருவர் கூடவே உதவியாக வந்தார். கிடைக்கிற தகவல்களைப் பார்த்து விட்டு அவர் இறுதியில், " சார்..சாமியார்கிட்ட நான் உங்களைப் பத்தி பேசி ஏதாவது பணம் வாங்கித்தர்றேன். இதெல்லாம் கண்டுக்கிடாதீங்க" என்று சொல்லும் வரை அவரும் ஒரு spyware என்று எனக்குத் தெரியாது போனதை இப்போது நினைத்தாலும் சிரிப்பாக இருக்கிறது. கேட்டவரை ஒரு புழுபோல பார்த்துவிட்டு, என் பின்னாடி யாராவது தொடர்கிறார்களோ என்று பயந்து கொண்டே பார்த்துப் பார்த்து காரைக்குடி வந்து சேர்ந்தேன்.

அதன் தொடர்ச்சியாகத்தான் மேற்சொன்ன மிரட்டல் சம்பவம்.

இந்த வாரம் முத்துக்காமாட்சியைப் பற்றி ஜு.வியில் இந்த நியூஸ் படித்ததும் "சரிதான் சாமியாரும் சளைக்கவில்லை. ஜூவியும் சளைக்கவில்லை" என்று நினைத்து சிரித்துக் கொண்டேன். ஜூவி கட்டுரையில் சொல்லப்பட்டது மட்டுமல்ல, அது தாண்டி நூறு மடங்கு போகக்கூடியவர் சாமியார். அவரை பற்றி அப்போது கேள்விப்பட்ட செய்திகளை மறுபடி எழுதலாம்தான்.

ஆனால் இப்போ வரும் சாமியார் செய்திகளை பார்த்தால் அதெல்லாம் ஜுஜூபி.

*****
சென்னை ஹெக்ஸாவெரில் பணிபுரிந்தபோது, மகாபலிபுரம் ஃபிஷர்மேன்ஸ் கோவில் நடந்த ஒரு மேனேஜ்மெண்ட் மீட்டிங்குக்கு உதவி செய்யபோய்விட்டு வரும்வழியில் நீலாங்கரை ஆசிரமம் சென்றேன். கூட்டிச்சென்ற லக்ஷ்மணன் அந்த ஆசிரம சாமியாரின் பக்தர். சாமியார் உயரமும் அகலமாக, ஜில்பா போட்டுக் கொண்டு, "வா..ராஜா..உட்காரு " என்றார். பெரிய ஹாலில் பக்தர்களோடு உட்கார்ந்ததும் ஒரு சின்ன தட்டில் பிஸிபேளா பாத் கொடுத்தார்கள். பிறகு துண்டடி புகழ் சிவசங்கர பாபா டான்ஸ் ஆடினார். சென்னைத் தமிழில் அருளுரை வழங்கினார். எல்லோரும் அவருக்கு ஆரத்தி காட்டி கன்னத்தில் போட்டுக் கொண்டார்கள்.

பிஸிபேளாபாத் நன்றாக இருந்தது.

******

செய்திகளில் தற்போது அடிபடும் காஞ்சி கார்ப்பரேட் சாமியார்களை நான் சந்திக்க வாய்க்கவில்லை. மகாப்பெரியர் இருந்த காலத்தில், என் தந்தையார் போய் வந்திருக்கிறார் என நினைக்கிறேன்.

ஜாமீன் நியூஸ் கிடைத்ததும் ஜெயேந்திரர் தன் ஜெயில் சகாக்களுடன் பேசியதை ஜூவி பத்தி பத்தியாக போட்டிருக்கிறது. ஜெயில் வாசல் வரைக்கும் போலிஸாருடன் பேசிக்கொண்டே வெளியே வந்தாராம் ஜெயேந்திரர். ஆனால், நிருபர்களைப் பார்த்தவுடன் பேச வில்லையாம். " ஸ்வாமிகள் இரண்டு நாட்களா சுனாமிக்காக மெளனவிரதம் இருக்கா...இன்னைக்கு மூணாவது நாள். அதனால பேச மாட்டா " என்றார்களாம் பக்தர்கள்.

நிருபர்களிடம் பேசி சர்ச்சையில் சிக்கிக்கொள்ள விருப்பமில்லையென்றால், அதை நேரடியாக சொல்லலாமே. எதற்கு இந்த நாடகம், சுனாமிக்காக மெளனவிரதம் என்பதெல்லாம்..?? இத்தனை பட்டும் ஈஸ்வரன் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணமே இல்லாமல் ஸ்மார்த்தகுரு இப்படி பொய்யும் வேஷமுமாக கடவுள் நம்பிக்கை இல்லாமல் அலையலாமா..??

தண்டத்தை மட்டும் அவர் மாற்றுவதெல்லாம் வெறும் தண்டம். மனசு மாற வேண்டும் அவருக்கு.

6 comments:

  1. உங்க ஜாதகத்தில் எதோ கோளாறு, அதுதான் spyware தொல்லை அப்போதிருந்தே இருக்கிறது. எதுக்கும் உள்ளதிலேயே ஒரு நல்ல பாபா(!)விடம் காமிச்சு எதாச்சும் பரிகாரம் தேடிக்கறது நல்லது:P

    ReplyDelete
  2. //எதற்கு இந்த நாடகம், சுனாமிக்காக மெளனவிரதம் என்பதெல்லாம்..?? // இதெல்லாம் சும்மா, அவங்க எல்லாத்தையுமே நாடகமாத்தான் செய்வாங்க. ஸ்டேஜில தனி பலகை போட்டு உக்காரும் போதாகட்டும், சோபா மேல ஒரு காவித்துணிய விரிச்சு உக்காருகிறதாகட்டும், கேட்டா, எல்லாம் சம்பிரதாயம், சடங்கு அப்படீன்னு சொல்லிக்கலாம். இப்ப மகா பெரியவர்னு சொல்லப்படுகிறவர் உயிரோட இருக்கிற போது நான் மடத்துக்குப் போனேன்; அப்ப நடந்த கூத்துக்களை தனியா எழுதலாம். இதுல திருந்துறதுக்கு எதுவுமில்ல, "இது அவுங்க வழி".

    ReplyDelete
  3. //" ஸ்வாமிகள் இரண்டு நாட்களா சுனாமிக்காக மெளனவிரதம் இருக்கா...இன்னைக்கு மூணாவது நாள். அதனால பேச மாட்டா " என்றார்களாம் பக்தர்கள்//

    அது சரி... பக்தர்கள் சொன்னதற்கெல்லாம் கூட அவர் தான் பொறுப்பா?! நேரம் தான்!

    (அது சரி...ஜூவியிலே நீங்க 'விகேஷ்' பேட்ச்சா?!)

    ReplyDelete
  4. "இப்படி பக்தர்கள் பண்ணதுக்கு அவர் பொறுப்பா" ன்னு எல்லா இடத்திலயும் கேக்க முடியாது மைனர்வாள். அதை மறுத்திருக்கலாம் இல்லையா. பக்தர்கள் சொல்ற பொய் சாமியாருக்கு சுகமா இருக்குன்னு நினைசுக்கலாமா..?? :-)

    ஆமாம்..நான் வெங்கடேஷ் பேட்ச்தான். திருவாருர் ஆசாமியாசே அவரு. அராஜகம் பிடிச்ச பார்ட்டி. :-). நல்ல நண்பர்தான் எனக்கு. "அவள் விகடன்" எடிட்டர் என் காலேஜ் சீனியர்/நண்பர் ம.கா.சிவஞானம். விகடன் ரா.கண்ணன் கூட என் பேட்ச்தான்.

    ReplyDelete
  5. இன்னொரு சாமியாரும் நம்ம முத்துகாமாட்சி மாதிரி தான். தன்னிடம் வேலை செய்த ஒருவரின் மனைவியை அபேஸ் பண்ணிகிட்டு வேலை பார்த்தவரை துரத்திவிட்டார். அந்தச் சாமியாரிடம் பெரிய பெரிய சூப்பர் ஸ்டார்களே ஆசிர்வாதம் வாங்குறாங்க.

    சாமியார் பேரை சொன்னா எனக்கு வேட்டு வச்சிடுவாங்க. நான் சொல்ற சாமியார் யாருன்னு நீங்களே யூகிச்சு இருப்பிங்கன்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
  6. Oh...appadeenna enakku neenga 1 batchdhaan senior-aa?! :)

    ReplyDelete

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...