Friday, April 09, 2004

சாக்ரமண்டோ - என் புத்தக அலமாரிக்கு ஒரு விசிட்
=====================================


திடீரென்று கிடைத்த இந்த லீவில், புத்தக அலமாரியை ஒழுங்கு படுத்தலாம் என்று இறங்கினேன். ' என்னுதா இதெல்லாம்..எப்ப வாங்கினேன் ' என்று மூளையக் கசக்கி யோசித்தாலும் நினைவுக்கே வராதபடிக்கு கீழ்க்கண்ட புத்த்கங்கள் அனைத்தும் காணக் கிடைத்த்ன.

பிச்சைக்காரன் வாந்தி எடுத்தாற்போல உள்ள அந்தப் பட்டியல் இதோ :

1. நிஜங்கள் - டாக்டர் ருத்ரன்
2. சோ என்கிற இரட்டை நாக்குப் பார்ப்பனர் - கலி.பூங்குன்றன்
3. மெளனமே காதலாக - பாலகுமாரன்
4. தமிழர் தலைவர் தந்தை பெரியார் - சாமி.சிதம்பரனார்
5. இந்த நூற்றாண்டுச் சிறுகதைகள் - பாகம் 2/3 - தொகுப்பு - விட்டல் ராவ்
6 .நெஞ்சில் நிற்பவை - 60 முன்னணி எழுத்தாளர்களின் சிறுகதைகள் - தொகுப்பு - சிவசங்கரி
7. கடற்கரைக் கால்கள் - பூமா. ஈஸ்வரமூர்த்தி
8. பசுவய்யா 107 கவிதைகள்
9. வால்காவிலிருந்து கங்கை வரை - ராகுல சாங்கிருத்தியாயன்
10. தீ பரவட்டும் - சி.என்.அண்ணாதுரை
11. மரபுகளின் அருவி - பாபா
12. அபிதா - லா.ச.ரா
13. 406 சதுர அடிகள் - அழகிய சிங்கர்
14 .இறகுகளும் பாறைகளும் - மாலன்
15. யாருடனுன் இல்லை - அழகிய சிங்கர்
16. சிகரங்களை நோக்கி - வைரமுத்து
17. அர்த்த்முள்ள இந்து மதம் - கண்ணதாசன் பாகங்கள் - 4/5/7/8/9/10
18. அக்னிச்சிறகுகள் - டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம்
19. தியானம் - ஓஷோ
20. தேவைகள் ஆசைகள் - ருத்ரன்
21. உறவுகள் - ருத்ரன்
22. எப்போதும் பெண் - சுஜாதா
23. அட்டை பிய்ந்து போன ஒரு விடுதலை பிரசுரம் ( காங்கிரஸில் பிராமணீயம்..? )
24. பிரிவோம் சந்திப்போம் - பாகம் 2
25. சித்தர் பாடல்கள் தொகுப்பு - அரு ராமநாதன்
26. மேய்ச்சல் மைதானம் - பாலகுமாரன்
26. பார்ப்பனர்கள் பற்றி தந்தை பெரியார்
27. who moved my cheese
28. உயிரைச் சேமித்து வைக்கிறேன் - எஸ்.ஷங்கரநாராயணன்
29. வேரும் வாழ்வும் - மலேசிய சிறுகதைத் திரட்டு - கலந்தை சை.பீர்முகம்மது
30. The person - Theodore Lidz
31. பாரதியார் கவிதைகள் - தொகுப்பு
32. புத்ர - லா.ச.ரா
33. மாறுதடம் - சுப்ரபாரதி மணியன்
34. வெறுக்கத்தக்கதா பிராமணீயம்- சோ
35. தக்கையின் மீது நான்கு கண்கள் - சா.கந்தசாமி
36. அன்பு ஒரு ஆன்மீக அனுபவம் - ஓஷோ
37. விகடன் பவளவிழா மலர்
38. The 100 Greatest Entertainers - 1950-2000 - From "entertainment weekly magazine "

"இத்தனையும் நீ படித்தாயா" என்று நீங்கள் கேட்டீர்களானால் என் பதில் ஹி..ஹி.

இத்தனையும் படித்து விட்டால் நான் ஏன் "இப்படி" எழுதுகிறேன்.

எப்போதாவது படித்துவிடலாம் என்பது ஒரு நம்பிக்கைதான்.

1 comment:

  1. இந்த நூற்றாண்டுச் சிறுகதைகள் - பாகம் 2/3 - தொகுப்பு - விட்டல் ராவ்
    இந்த இரண்டு புத்தகங்களும் இப்போது கிடைக்கவில்லை. இந்த நூலில் உள்ள
    சிறுகதைகளையும் அவ்ற்றை எழுதிய ஆசிரியர் பெயரையும் கொடுக்க முடியுமா.ஒரு கட்டுரைக்காக அவை தேவைப்படுகின்றன. எனது இ மெயில் முகவரி enselvaraju@gmail.com நன்றியுடன் என்.செல்வராஜ்

    ReplyDelete

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...